கூட்டுவட்டிக்கும், தனிவட்டிக்கும் உள்ள வித்தியாசம்
Type – 4A
28) ₹5,000 இக்கு,
8% ஆண்டு வட்டியில், 2 ஆண்டுகளுக்கு கூட்டுவட்டிக்கும் தனிவட்டிக்கும் இடையேயுள்ள வித்தியாசம்__________
ஆகும். (2022 Group 2) (8th New Book)
a. 30
b. 31
c. 32✔
d. 33
29) ரூ.8,000-க்கு
10% வட்டி வீதத்தில் இரண்டு ஆண்டுகளில் கிடைக்கும் கூட்டு வட்டிக்கும் தனி வட்டிக்கும்
உள்ள வித்தியாசத்தை காண்க. (2018 Group 2), (2021 TNPSC), (05-10-2023 TNPSC)
a. Rs.70
b. Rs.80✔
c. Rs.90
d. Rs.100
30) ரூ.5,000-த்தை ஆண்டுக்கு 12% வட்டி வீதத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு குத்தகை
விடப்பட்டால் தனிவட்டி மற்றும் கூட்டு வட்டி இவைகளுக்கு உள்ள வேறுபாடு ________ ஆகும்.
(2015 Group 2)
A) ₹720
B) ₹ 12
C) ₹ 72✔
D) ₹ 700
31) கூட்டுவட்டிக்கும் தனிவட்டிக்கும்
இடையேயுள்ள வித்தியாசத்தைக் காண்க. P = ₹5000, ஆண்டு வட்டி வீதம் r = 4%, n = 2 ஆண்டுகள்.
(8th New Book), (20-05-2023 TNPSC)
a. 8✔
b. 10
c. 7
d. 18
32) ரூ.15,000க்கு 2 ஆண்டுகளுக்கு
6% ஆண்டு வட்டியில் ஆண்டுக்கு ஒருமுறை வட்டி கணக்கிடப்பட்டாள் கிடைக்கும் தனிவட்டிக்கும்
கூட்டுவட்டிக்கும் இடையே உள்ள வித்தியாசம் (8th New Book)
a. 50
b. 52
c. 56
d. 54✔
33) ரூ. 12,000கும் 10% ஆண்டு வட்டி
வீதம் எனில் இரண்டு ஆண்டுகளில் கிடைக்கும் கூட்டுவட்டிக்கும், தனிவட்டிக்கும் உள்ள
வித்தியாசத்தை காண்க (2016 Group 4)
a. 90
b. 120✔
c. 80
d. 70
34) ₹5000 இக்கு 2% ஆண்டு வட்டியில்,
அரையாண்டுக்கொரு முறை வட்டிக் கணக்கிடப்பட்டால், ஓர் ஆண்டுக்குக் கிடைக்கும் கூட்டுவட்டிக்கும்
தனிவட்டிக்கும் இடையேயுள்ள வித்தியாசத்தைக் காண்க. (8th New Book)
a. 0.50✔
b. 5
c. 0.05
d. 50
35) ₹8,000 க்கு இரண்டு ஆண்டுகளுக்கு
கிடைக்கும் கூட்டு வட்டிக்கும், தனி வட்டிக்கும் இடையே உள்ள வித்தியாசம் ₹20 எனில்
வட்டி வீதம் காண்க. (2021 Gr 1) (8th New Book)
(A) 5%✔
(B) 10%
(C) 15%
(D) 20%
36) கூட்டுவட்டிக்கும், தனிவட்டிக்கும்
6% விதம் இரண்டாண்டுக்கு வேறுபாடு ரூ. 18 எனில் அசலினைக் காண்க (2021 TNPSC)
a. ரூ. 5,100
b. ரூ. 5,000✔
c. ரூ. 5,500
d. ரூ. 5,200
37) 2℅ ஆண்டு வட்டியில் 2 ஆண்டுகளுக்கு
ஒரு அசலுக்கு கிடைக்கும் கூட்டுவட்டிக்கும் தனிவட்டிக்கும் இடையே உள்ள வித்தியாசம்
ரூ. 1 எனில் அசலானது _______ ஆகும் (8th New Book), (10-03-2023 TNPSC), (23-07-2023 TNPSC)
a. 2000
b. 3000
c. 1500
d. 2500✔
38) இரு வருடங்களில் ₹ 18,000 மீதான
கூட்டு வட்டி, தனிவட்டி ஆகியவற்றின் வித்தியாசம் ₹ 405 எனில் வருட வட்டி வீதம்
(2021 Group 1)
(A) 12%
(B) 15%✔
(C) 18%
(D) 10%