Donation

Ads Area

நேர் மற்றும் எதிர் விகிதங்கள் Part - 3


21. 10 விவசாயிகள் 21 நாட்களில் ஒரு நிலத்தை உழுது முடிக்கின்றனர் எனில் அதே நிலத்தை 14 விவசாயிகள் எத்தனை நாட்களில் உழுது முடிப்பர்? [2022 Gr4]
(A) 14 நாட்கள்
(B) 15 நாட்கள்
(C) 16 நாட்கள்
(D) 17 நாட்கள்
Answer (B) 15 நாட்கள்

22. 12 மாடுகள் ஒரு வயலை 10 நாட்களில் மேய்கின்றது எனில் 20 மாடுகள் அதே வயலை எத்தனை நாட்களில் மேயும்? [08-01-2022 TNPSC], (24-04-2022 TNPSC),(7th New Book Back)
a. 15
b. 18
c. 6
d. 8
Answer c. 6

23. 8 விவசாயிகள் 18 நாள்களில் நிலத்தை உழுது முடிக்கின்றனர் எனில், அதே நிலத்தை 12 விவசாயிகள் எத்தனை நாள்களில் உழுது முடிப்பர். (14-03-2023 TNPSC)
(A) 22 நாட்கள்
(B) 12 நாட்கள்
(C) 10 நாட்கள்
(D) 15 நாட்கள்
Answer (B) 12 நாட்கள்

24. 60 வேலையாட்கள் ஒரு பருத்தி நூல் உருண்டையை நூற்க 7 நாட்கள் தேவைப்படுகிறது. 42 ஆட்கள் அதே வேலையை முடிக்க எத்தனை நாட்கள் ஆகும்? (22-12-2022 TNPSC)
(A) 11
(B) 15
(C) 12
(D) 10
Answer (D) 10

25. ஒரு குழி வெட்ட 10 இயந்திரங்கள் 60 நாள்கள் எடுத்துக் கொள்கின்றன. அனைத்து இயந்திரங்களும் ஒரே வேகத்தில் வேலை செய்கின்றன எனில் 30 இயந்திரங்கள் அதே குழியை வெட்ட எத்தனை நாள்களாகும்? (7th New Book)
(A) 14 நாட்கள்
(B) 15 நாட்கள்
(C) 16 நாட்கள்
(D) 20 நாட்கள்
Answer (D) 20 நாட்கள்

26. 7 ஆட்கள் ஒரு வேலையை 52 நாட்களில் செய்து முடிக்கின்றனர். அதே வேலையை 13 ஆட்கள் எத்தனை நாட்களில் செய்து முடிப்பர்? (11/01/2020 TNPSC) (2015 Gr2)
a. 25 நாட்கள்
b. 28 நாட்கள்
c. 20 நாட்கள்
d. 45 நாட்கள்
Answer b. 28 நாட்கள்

27. 12 ஆட்கள் ஒரு வேலையை 36 நாட்களில் செய்து முடிக்கின்றனர். அதே வேலையை 18 ஆட்கள் எத்தனை நாள்களில் செய்து முடிப்பார்கள் (2019 Gr4)
a. 16
b. 24
c. 26
d. 54
Answer b. 24

28. 40 வேலையாட்கள் ஒரு செயல்திட்ட வேலையை 8 நாள்களில் முடிப்பார்கள் எனில், அதே வேலையை 4 நாள்களில் முடிக்கத் தேவையான வேலையாட்களின் எண்ணிக்கை ________ (7th New Book Back)
(A) 8
(B) 80
(C) 20
(D) 40
Answer (B) 80

29. ஒரு பெட்ரோல் தொட்டியை 16 குழாய்கள் 18 நிமிடங்களில் நிரப்புகின்றன. 9 குழாய்கள் அதே தொட்டியை _________ நிமிடங்களில் நிரப்பும் (7th New Book Back)
(A) 8
(B) 32
(C) 16
(D) 18
Answer (B) 32


Post a Comment

2 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Ads Area