Type -1
1) ஒரு வகுப்பில் உள்ள 10 மாணவர்களின் சராசரி உயரம் 150cm என கணக்கிடப்பட்டது சரி பார்க்கும் பொழுது 140cm என்பதை 130cm என தவறுதலாக எடுத்துக் கொள்ளப்பட்டதாக தெரியவந்தது சரியான சராசரி உயரம் காண்க (2019 Gr 1)
a. 150cm
b. 152cm
c. 153cm
d. 151cm✔
2) ஒரு வகுப்பில் உள்ள 10 மாணவர்களின் சராசரி உயரம் 166 செ.மீ. எனக் கணக்கிடப்பட்டது. தகவல்களைச் சரிபார்க்கும் போது ஒரு மதிப்பு 150 செ.மீ க்கு பதிலாக 160 செ.மீ என குறிப்பிடப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது எனில் சரியான சராசரி உயரம் காண் (2019 TNPSC)
a) 165 செ.மீ.,✔
b) 160 செ.மீ.,
c) 155 செ.மீ.,
d) 170 செ.மீ.,
3) ஒரு வகுப்பில் 12 மாணவர்களின் சராசரி உயரம் 152cm என கணக்கிடப்பட்டது. சரி பார்க்கும் பொழுது 172cm என்பதை 148cm என தவறுதலாக எடுத்து கொள்ளப்பட்டதாக தெரியவந்தது எனில் சரியான சராசரி உயரம் யாது? (2019 Group 4)
a. 150cm
b. 156cm
c. 158cm
d. 154cm✔
4) 25 எண்களின் சராசரி 78.4 என கணக்கிடப்படுகிறது. பின்னர் 96 என்ற எண் தவறுதலாக 69 என பயன்படுத்தப்பட்டது என கண்டுபிடிக்கப்படுகிறது எனில், சரிசெய்யப்பட்ட சராசரி எது (2016,
2022 Group 2), (9th New book)
a. 79.48✔
b. 76.54
c. 81.82
d. 78.40
5) 75 எண்களைக் கொண்ட ஒரு தொகுதியின் சராசரி 27 என கணக்கிடப்படுகிறது பின்பு 53 என்ற எண் தவறுதலாக 43 என்று படிக்கப்பட்டது. பின்னர் கண்டு பிடிக்கப்பட்டது எனவே அத்தொகையின் சரியான சராசரியை காணவும் (2017 Goup 2A) (9th Old Book)
a. 26.13
b. 27.13✔
c. 28.13
d. 25.13
6) 100 மாணவர்களின் மதிப்பெண்கள் சராசரி 40 என்று கணக்கிடப்பட்டது. பின்பு 53 என்ற மதிப்பெண் 83 என்று தவறுதலாக எடுக்கப்பட்டது தெரியவந்தது சரியான மதிப்பெண்கள் கொண்ட சரியான சராசரியை காண்க
(9th Old Book), [2012 TNTET]
a. 39.7✔
b. 37.9
c. 29.7
d. 27.9
7) 15 மதிப்புகளின் கூட்டுச்சராசரி 85 எனக் கணக்கிடப்பட்டது. அவ்வாறு செய்யும்போது ஒரு மதிப்பு 28 இக்கு பதிலாக 73 என்று தவறாக எடுத்துக்கொள்ளப்பட்டது எனில், சரியான சராசரியைக் காண்க? (7th
New Book)
a. 88
b. 82✔
c. 84
d. 85
8) 50 மாணவர்களின் சராசரி மதிப்பெண் 45 எனக் கணக்கிடப்பட்டது. பின்னர் 43 என்பது தவறுதலாக 73 என எடுத்துக் கொள்ளப்பட்டது. தெரிந்தது எனில் சரியான சராசரி [2013 TNTET]
a. 44
b. 44.1
c. 44.4✔
d. 44.5
9) 25 எண்களின் சராசரி 15. மறுஆய்வின் போது 15 என்ற எண் -15 என்று தவறாக குறிக்கப்பட்டு விட்டது எனக் கண்டுபிடிக்கப்பட்டது. எனவே சரியான சராசரி [2017 TNTET]
a. 13.8
b. 16.2✔
c. 16.5
d. 15.4