கூட்டுவட்டி Part -3


 Type - 3

18) இரு சக்கர வாகனம் ஒன்றின் விலை 2 ஆண்டுகளுக்கு முன் ₹70,000 ஆக இருந்தது. அதன் மதிப்பு ஆண்டுதோறும் 4% வீதம் குறைகிறது. அதன் தற்போதைய மதிப்பைக் காண்க. (8th New Book)

a. ₹64512

b. ₹65512

c. ₹66512

d. ₹67512

 

19) ஓர் இயந்திரத்தின் விலை ₹18,000. அது ஆண்டுக்கு 16 2/3% வீதம் தேய்மானம் அடைகிறது. 2 ஆண்டுகளுக்குப் பிறகு, அதன் மதிப்பு ____ ஆக இருக்கும். (8th New Book)

a. ₹12,000

b. ₹12,500

c. ₹15,000

d. ₹16,500

 

20) கீழே கொடுக்கப்பட்ட விவரங்களுக்குக் கூட்டு வட்டியைக் காண்க. அசல் = ₹30,000 முதலாம் ஆண்டு வட்டி வீதம், r = 7% இரண்டாம் ஆண்டு வட்டி வீதம் r = 8% ஆண்டுக்கு ஒரு முறை வட்டிக் கணக்கிடப்படுகிறது. (8th New Book)

a. ₹4,000

b. ₹4,568

c. ₹4,668

d. ₹4,600

 

21) ஒரு கிராமத்தின் மக்கட்தொகை ஆண்டொன்றுக்கு 7% வீதம் அதிகரிக்கிறது. இப்பொழுது மக்கள் தொகை ₹90,000 எனில் 2 ஆண்டுகளுக்குப் பிறகு அக்கிராமத்தின் மக்கள் தொகை? (2022 Group 4)

(A) ₹96,300

(B) ₹1,03,000

(C) ₹1,00,000

(D) ₹1,03,041

 

22) ஒரு வகையான பாக்டீரியா, முதலாவது ஒரு மணி நேரத்தில் 5% வளர்ச்சியும், இரண்டாவது மணி நேரத்தில் 8% வளர்ச்சிக் குன்றியும், மூன்றாவது மணி நேரத்தில் 10% வளர்ச்சியும் அடைகிறது. தொடக்கத்தில் அதன் எண்ணிக்கை 10000 ஆக இருந்தது எனில், மூன்று மணி நேரத்திற்குப் பிறகு அதன் எண்ணிக்கையைக் காண்க. (8th New Book)

a. 10,526

b. 10,626

c. 10,726

d. 10,826

 

23) I, II மற்றும் III ஆண்டுகளுக்கான வட்டி வீதங்கள் முறையே 15%, 20% மற்றும் 25% எனில், ₹15,000இக்கு 3 ஆண்டுகளுக்கு கிடைக்கும் கூட்டுவட்டியைக் காண்க. (8th New Book)

a. ₹ 10,875

b. ₹ 10,975

c. ₹ 10,857

d. ₹ 10,675


Answer Key

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.