Donation

Ads Area

8th New Book இலாபம் அல்லது நட்டம் (34 கணக்குகள்)

எடுத்துக்காட்டு 2.15 குறள்மதி 20% தள்ளுபடியுடன் ஒரு ரெயின்கோட்டை வாங்கி ₹25 ஐச் சேமித்தார் எனில், ரெயின் கோட்டின் அசல் விலை என்ன? ₹125

எடுத்துக்காட்டு 2.19 ஆடித் தள்ளுபடி விற்பனையின்போது ஒரு சட்டையின் விலை ₹90 இலிருந்து ₹50 ஆகக் குறைந்தது எனில், குறைவின் சதவீதம் என்ன? 44 4/9%

இலாபம் அல்லது நட்டத்தைச் சதவீதமாக மாற்றுதல்
எடுத்துக்காட்டு 2.21 ஒரு கடைக்காரர் நாற்காலியை ₹325 இக்கு வாங்கி ₹350 இக்கு விற்பனை செய்கிறார் எனில், இலாபச் சதவீதத்தைக் கண்டறியவும்? 7 9/13%.

எடுத்துக்காட்டு 2.22 ஒரு சட்டை ₹110 இக்கு வாங்கப்பட்டு ₹90 இக்கு விற்கப்படுகிறது எனில், நட்டச் சதவீதத்தைக் கண்டறியவும்? 18 2/11%

எடுத்துக்காட்டு 2.23 ஒரு பொருளை ₹200 இக்கு வாங்கி, 4% நட்டத்திற்கு விற்கப்படுகிறது எனில், அப்பொருளின் அடக்கவிலை என்ன? ₹208 

எடுத்துக்காட்டு 4.5 ஒரு நபரின் வருமானம் 10% அதிகரிக்கப்பட்டு பிறகு 10% குறைக்கப்படுகிறது எனில், அவருடைய வருமானத்தில் ஏற்படும் மாற்றத்தைக் காண்க? 1%

இலாபம், நட்டம், தள்ளுபடி, இதரச் செலவுகள் மற்றும் சரக்கு மற்றும் சேவை வரி (GST) 
இவற்றை முயல்க
1. ஒரு பொருளின் விற்பனை விலையானது அதன் அடக்க விலையை விடக் குறைவு எனில் _____ ஏற்படுகிறது? நட்டம்
2. ₹5000 ஐ அடக்க விலையாகக் கொண்ட ஒரு பொருளானது ₹4850 இக்கு விற்கப்பட்டால், அங்கு இலாபமா? நட்டமா? அதன் சதவீதம் என்ன? நட்டம், 97%
3. ஒரு பொருளின் அடக்க விலை மற்றும் விற்ற விலையின் விகிதம் 5:7 எனில், இலாபம் _____ ஆகும்?  40%

எடுத்துக்காட்டு 4.6 இரஞ்சித் ஒரு துணி துவைக்கும் இயந்திரத்தை ₹16150 இக்கு வாங்கினார். மேலும், அதன் போக்குவரத்துச் செலவுக்காக ₹1350 ஐ செலுத்தினார். பிறகு, அதனை அவர் ₹19250 இக்கு விற்றார் எனில், அவரின் இலாபம் அல்லது நட்டச் சதவீதத்தைக் காண்க? 10%

எடுத்துக்காட்டு 4.7 ஓர் எல்.இ.டி (LED) தொலைக்காட்சியின் விற்பனை விலையானது அதன் அடக்க விலையைப் போன்று 5/4 மடங்கு எனில், இலாபச் சதவீதம் காண்க? 25%

எடுத்துக்காட்டு 4.8 16 ஸ்ட்ராபெரி (Strawberry) பெட்டிகளின் அடக்க விலையானது 20 ஸ்ட்ராபெரி பெட்டிகளின் விற்பனை விலைக்குச் சமம் எனில், இலாபம் (அ) நட்டம் சதவீதம் காண்க? 20%

எடுத்துக்காட்டு 4.9 மிதிவண்டி ஒன்றை ஒரு கடைக்காரர் ₹4275 இக்கு விற்பதால் அவருக்கு 5% நட்டம் ஏற்படுகிறது. 5% இலாபம் பெற வேண்டுமெனில், அவர் மிதிவண்டியை என்ன விலைக்கு விற்க வேண்டும்? ₹4725

எடுத்துக்காட்டு 4.10 மழைக்காலத்தின்போது விற்பனையை அதிகரிக்க கடைக்காரர் ஒருவர் ஒரு மழைச் சட்டையின் விலையை ₹1060 இலிருந்து ₹ 901 ஆகக் குறைத்தார் எனில், அவர் வழங்கிய தள்ளுபடி சதவீதத்தைக் காண்க? 15%

சிந்திக்க - ஒரு கடைக்காரர் தகவல் பலகை ஒன்றை அதன் அடக்க விலையைவிட 15% அதிகமாகக் குறித்து, பிறகு 15% தள்ளுபடி வழங்குகிறார். இந்த பரிவர்த்தனையில், அவர் இலாபம் அடைவாரா அல்லது நட்டம் அடைவாரா? நட்டம்

எடுத்துக்காட்டு 4.11 ஒரு பொருளின் மீது வழங்கப்படும் இரு தொடர் தள்ளுபடிகள் முறையே 25% மற்றும் 20% எனில், இதற்கு நிகரான ஒரே சமானத் தள்ளுபடிச் சதவீதத்தினைக் காண்க? 40%

எடுத்துக்காட்டு 4.12 வர்த்தகர் ஒருவர், ஒரு தண்ணீர் கொதிகலனை 11% இலாபம் மற்றும் 18% சரக்கு மற்றும் சேவை வரியுடன் சேர்த்து ₹10502 இக்கு விற்றார். தண்ணீர் கொதிகலனின் குறித்த விலை மற்றும் சரக்கு மற்றும் சேவை வரியைக் காண்க? ₹1602

எடுத்துக்காட்டு 4.13 ஒரு குடும்பம் உணவகம் ஒன்றுக்குச் சென்று, உணவுக்காக ₹350 ஐச் செலவிட்டு கூடுதலாகச் சரக்கு மற்றும் சேவை வரியாக 5% செலுத்தியது எனில், மத்திய மற்றும் மாநில சரக்கு மற்றும் சேவை வரியைக் கணக்கிடுக? ₹8.75

பயிற்சி 4.2 1. கோடிட்ட இடங்களை நிரப்புக: 
(i) நட்டம் அல்லது இலாபம் சதவீதம் எப்போதும் ______ மீதே கணக்கிடப்படும்? அடக்கவிலை
(ii) ஓர் அலைபேசியானது 20% இலாபத்தில் ₹8400 இக்கு விற்கப்படுகிறது. அந்த அலைபேசியின் அடக்க விலை ______ ஆகும்? ₹ 7000 
(iii) ஒரு பொருளானது 7 1/2 % நட்டத்தில் ₹555 இக்கு விற்கப்படுகிறது. அந்த பொருளின் அடக்க விலை  ______ ஆகும்?  ₹600 
(iv) ₹4500 ஐ குறித்த விலையாகக் கொண்ட ஒரு அரவை இயந்திரமானது தள்ளுபடிக்குப் பின் ₹4140 இக்கு விற்கப்பட்டது. தள்ளுபடிச் சதவீதம்  ____    ஆகும்?  8%
(v) ₹575 மதிப்புடைய ஒரு சட்டைக்கும், ₹325 மதிப்புடைய ஒரு T சட்டைக்கும் 5% சரக்கு மற்றும் சேவை வரி விதிக்கப்படுகிறது எனில், மொத்த இரசீது தொகை _____ ஆகும்? ₹945 
2. ஒரு பொருளை ₹820 இக்கு விற்பதனால், விற்கும் விலையில் 10% அளவு நட்டம் ஏற்படுகிறது எனில், அந்தப் பொருளின் அடக்க விலையைக் காண்க? ₹902 
3. ஒரு பொருளை ₹810 இக்கு விற்றதால் கிடைத்த இலாபமும் அதே பொருளை ₹530 இக்கு விற்றதால் ஏற்பட்ட நட்டமும் சமம் எனில், அந்தப் பொருளின் அடக்க விலையைக் காண்க? ₹670
4. 10 அளவுகோல்களின் விற்ற விலையானது 15 அளவுகோல்களின் அடக்க விலைக்குச் சமம் எனில், இலாபம் சதவீதத்தைக் காண்க? 50%
5. 2 பொருள்கள் ₹15 வீதம் என சில பொருள்கள் வாங்கப்பட்டு அவை 3 பொருள்கள் ₹25 வீதம் என விற்கப்பட்டால் இலாபம் சதவீதத்தைக் காண்க? 11 1/9%
6. ஓர் ஒலிப்பெருக்கியை ₹768 இக்கு விற்பதால், ஒரு நபருக்கு 20% நட்டம் ஏற்படுகிறது. 20% இலாபம் கிடைக்க ஒலிப்பெருக்கியை அவர் என்ன விலைக்கு விற்க வேண்டும்? ₹1152
7. ஒரு மெத்தையின் குறித்த விலை ₹7500. இதற்கு இரண்டு தொடர் தள்ளுபடிகள் முறையே 10% மற்றும் 20% என வழங்கப்பட்டால், வாடிக்கையாளர் செலுத்த வேண்டியத் தொகையைக் காண்க? ₹5400

கொள்குறி வகை வினாக்கள் (Book Back)
8. ஒரு பழ வியாபாரி ₹200 இக்கு பழங்களை விற்று ₹40 ஐ இலாபமாகப் பெறுகிறார். அவரின் இலாபச் சதவீதம் ______ ஆகும்.
(அ) 20%
(ஆ) 22% 
(இ) 25%
(ஈ) 16 2/3%
விடை: (இ) 25%

9. பூச்சட்டி ஒன்றை ₹528 இக்கு விற்று ஒரு பெண் 20% இலாபம் பெறுகிறார். 25% இலாபம் பெற அவர் அதை என்ன விலைக்கு விற்க வேண்டும்? 
(அ) ₹500
(ஆ) ₹550 
(இ) ₹553
(ஈ) ₹573 
விடை: (ஆ) ₹550

10. ஒரு நபர் ஒரு பொருளை ₹150 இக்கு வாங்கி, அதன் அடக்க விலையின் 12% ஐ இதரச் செலவுகளாக செலவிடுகிறார். 5% இலாபம் பெற அவர் அதை என்ன விலைக்கு விற்க வேண்டும்?
(அ) ₹180
(ஆ) ₹168 
(இ) ₹176.40
(ஈ) ₹88.20
விடை: (ஆ) ₹168

11. 16% தள்ளுபடியில், ₹210 இக்கு வாங்கப்பட்ட ஒரு தொப்பியின் குறித்த விலை என்ன? 
(அ) ₹243
(ஆ) ₹176 
(இ) ₹230
(ஈ) ₹250
விடை: (ஈ) ₹250 

12. இரண்டு தொடர் தள்ளுபடிகளான 20% மற்றும் 25% ஆகியவற்றிக்கு நிகரான ஒரே தள்ளுபடி சதவீதம் ______ ஆகும். 
(அ) 40%
(ஆ) 45%
(இ) 5%
(ஈ) 22.5%
விடை: (அ) 40%

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Ads Area