Donation

Ads Area

8th New Book இலாபம் அல்லது நட்டம்Theory

1. இலாபம் மற்றும் நட்டம் 
அடக்க விலை (அ.வி)
ஒரு பொருளை வாங்கிய விலையே அப்பொருளின் அடக்க விலை (அ.வி) எனப்படும். 

விற்ற விலை (அ) விற்பனை விலை (வி.வி)
ஒரு பொருளை விற்ற விலையே அப்பொருளின் விற்ற விலை (அல்லது) விற்பனை விலை (வி.வி) எனப்படும். 

இலாபம்
விற்ற விலையானது அடக்க விலையை விட அதிகமாக இருந்தால் இலாபம் கிடைக்கிறது. ஆகவே, இலாபம் = விற்ற விலை – அடக்க விலை.

நட்டம்
விற்ற விலையானது அடக்க விலையை விடக் குறைவாக இருந்தால் நட்டம் ஏற்படுகிறது. ஆகவே, நட்டம் = அடக்க விலை – விற்ற விலை.

இலாபம் மற்றும் நட்டச் சதவீதம், இரண்டுமே அடக்க விலையைப் பொறுத்துத்தான் கணக்கிடப்படும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். 


2. தள்ளுபடி
ஆடி மாதத்திலும் விழாக்காலங்களிலும் கடைக்காரர்கள் விற்பனையை அதிகரிக்கவும், பழைய இருப்புகளை விற்கவும், பொருள்களின் மீதான குறித்த விலையில் ஒரு குறிப்பிட்ட சதவீதத்தைக் குறைத்து விற்பனை செய்வார்கள். இந்த விலைக் குறைப்பானது தள்ளுபடி எனப்படும். 

குறித்த விலை
பெரிய கடைகள் மற்றும் பல்பொருள் அங்காடிகளில் ஒவ்வொரு பொருளின் மீதும் ஒரு விலை அட்டையைத் தொங்கவிட்டிருப்பதை நாம் பார்க்கிறோம். அட்டையின் மீது குறிக்கப்பட்டிருக்கும் இந்த விலையானது குறித்த விலை எனப்படும்.
இந்தப் பொருள்களின் குறித்த விலையிலிருந்து தான், கடைக்காரர் குறிப்பிட்ட சதவீதத்தைத் தள்ளுபடியாக வழங்குகிறார். தள்ளுபடிக்குப் பிறகு வாடிக்கையாளர் செலுத்தும் விலையானது அப்பொருளின் விற்பனை விலை எனப்படும்.
அதாவது, விற்பனை விலை = குறித்த விலை – தள்ளுபடி ⇒ தள்ளுபடி % = தள்ளுபடி / குறித்த விலை 

3. இதரச் செலவுகள்
வணிகர்கள், விற்பனையாளர்கள் மற்றும் கடைக்காரர்கள் ஆகியோர் பொருள்களை வாங்கி விற்பதில் ஈடுபடுபவர்கள் ஆவர். சில நேரங்களில், இயந்திரங்கள், மரச்சாமான்கள், மின்னணுச் சாதனங்கள் போன்றவற்றை வாங்கும்போது, அவற்றின் மீது பழுதுப் பார்த்தல், போக்குவரத்துச் செலவுகள் மற்றும் தொழிலாளர்களின் ஊதியம் போன்ற செலவுகள் கூடுதலாக ஏற்படக்கூடும். இந்தச் செலவுகள் அடக்க விலையோடு சேர்த்துக் கொள்ளப்பட்டு, அது இதரச் செலவுகள் எனப்படும். ஆகவே,
மொத்த அடக்க விலை = அடக்க விலை + இதரச் செலவுகள்

4. சரக்கு மற்றும் சேவை வரி (GST)
இந்தியாவில், உள்நாட்டு நுகர்வுக்காக பயன்படும் அனைத்து பொருள்களின் மீதான ஒரே பொதுவான வரியே சரக்கு மற்றும் சேவை வரி (GST–Goods and Services Tax) ஆகும். சரக்கு மற்றும் சேவை வரி (GST) ஆனது வணிகர்கள் மற்றும் நுகர்வோர்களால் ஒருங்கே செலுத்தப்படுவதாகும். மேலும், இது மத்திய மற்றும் மாநில அரசாங்கங்களுக்கு கிடைக்கும் வருவாய்களில் முக்கியமான ஒன்றாக அமைகிறது. சரக்கு மற்றும் சேவை வரி ஆனது மத்திய சரக்கு மற்றும் சேவை வரி (CGST), மாநில சரக்கு மற்றும் சேவை வரி (SGST) மற்றும் ஒருங்கிணைந்த சரக்கு மற்றும் சேவை வரி (IGST) என மூன்று வகைப்படும். யூனியன் பிரதேசங்களில் UTGST என்ற வரி இருக்கிறது.

சரக்கு மற்றும் சேவை வரி ஆனது மத்திய மற்றும் மாநில அரசுகளால் சமமாகப் பகிர்ந்து கொள்ளப்படுகிறது. முட்டை, தேன், பால், உப்பு போன்ற பல பொருள்களுக்கு சரக்கு மற்றும் சேவை வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. பெட்ரோல், டீசல் போன்ற பொருள்கள் சரக்கு மற்றும் சேவை வரி வரம்புக்குள் வராது. மேலும், அவற்றிக்குத் தனியே வரி விதிக்கப்படுகிறது. சரக்கு மற்றும் சேவைவரிக்கான சபையானது (GST Council), 1300 இக்கும் அதிகமான பொருள்களையும் 500 இக்கும் அதிகமான சேவைகளையும் 4 வரி அடுக்குகளான 5%, 12%, 18% மற்றும் 28% ஆகியவற்றின் கீழ் கொண்டு வந்துள்ளது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Ads Area