விகிதம் (Ratio) Part - 4


விகிதம் (Ratio)
1. 1 : 2 என்ற விகிதத்தில் 63 செ மீ நீளமுள்ள ஒரு கோட்டுத் துண்டு இரண்டாகப் பிரிக்கப்பட்டால் கோட்டுத் துண்டுகளின் நீளங்களைக் காண்க. (6th New Book)
a. 36cm, 27cm
b. 21cm, 42cm
c. 27cm, 36cm
d. 42cm, 21cm
Answer b. 21cm, 42cm

2. ₹1600 ஐ A மற்றும் B என்ற இரு நபர்களுக்கு 3 : 5 என்ற விகிதத்தில் பிரித்துக்கொடுத்தால், B இக்குக் கிடைக்கும் தொகை என்ன? (6th New Book), (13/01/2021 TNPSC)
a. ₹ 480
b. ₹ 800
c. ₹1000
d. ₹200
Answer c. ₹1000

3. இரு எண்களின் விகிதம் 5:7 அவவெண்களின் கூடுதல் 108 எனில் அவ்விரு எண்களின் பெரிய எண்? (17/04/2021 TNPSC)
a. 63
b. 49
c. 35
d. 45
Answer a. 63

4. 24 மீ நீளமுள்ள ஒரு ரிப்பன் 3:2:7 என்ற விகிதத்தில் மூன்று துண்டுகளாக வெட்டப்படுகிறது. ஒவ்வொன்றின் நீளம் (2019 TNPSC)
a. 6மீ, 4மீ, 14மீ
b. 9மீ, 8மீ, 7மீ
c. 6மீ, 6மீ, 12மீ
d. 6மீ, 8மீ, 10மீ
Answer a. 6மீ, 4மீ, 14மீ

5. கணேசன் என்பவர் ரூ. 800 வைத்துள்ளார் அத்தொகையை 3 : 5 என்ற விகிதத்தில் உமா மற்றும் வேணிக்கு பிரித்து கொடுக்கின்றார். ஒருவர் பெரும் அதிகத் தொகை : [TNTET Paper - 1 (19-10-2022 Morning Batch)]
(A) ரூ. 300
(B) ரூ. 100
(C) ரூ. 200
(D) ரூ. 500
Answer (D) ரூ. 500

6. ரூ. 800 ஐ அன்பு மற்றும் ஹரி என்ற நபர்களுக்கு 2 : 3 என்ற விகிதத்தில் பிரித்து கொடுத்தால் அன்புவிற்கு கிடைக்கும் தொகை என்ன? [TNTET Paper - 1 (18-10- 2022 Afternoon Batch)]
(A) 320
(B) 350
(C) 300
(D) 400
Answer (A) 320

7. மூன்று எண்களின் விகிதம் 10:15:24 மற்றும் அதன் கூட்டுத்தொகை 196 எனில் அந்த எண்களின் சிறிய எண்ணை கண்டுபிடி? (06/11/2021 TNPSC)
a. 40
b. 24
c. 36
d. 46
Answer a. 40

8. இரு எண்கள் 5 : 3 என்ற விகிதத்தில் உள்ளன. அவற்றின் வேறுபாடு 18 எனில் அவ்வெண்கள் : [TNTET Paper - 1 (14-10-2022 Morning Batch)]
(A) 65, 47
(B) 60, 42
(C) 45, 27
(D) 54, 72
Answer (C) 45, 27

9. இரு முழு எண்களின் வித்தியாசம் 72. அந்த இரு எண்களின் விகிதம் 3:5 எனில் அந்த இரு எண்களை காண்க (2019 TNPSC)
a. 108, 180
b. 110, 182
c. 114, 186
d. 106, 178
Answer a. 108, 180

10. ஒரு குடும்பத்தின் செலவு மற்றும் சேமிப்புகளின் விகிதம் 5:3. செலவு ₹ 3,500 எனில் சேமிப்பு எவ்வளவு? (24-04-2022 TNPSC)
(A) ₹1,400
(B) ₹2,100
(C) ₹2,800
(D) ₹3,000
Answer (B) ₹2,100

11. ஒரு வகுப்பில் உள்ள மாணவ மாணவிகளின் விகிதம் 5:6 மாணவர்களின் எண்ணிக்கை 30 எனில் மாணவிகளின் எண்ணிக்கை என்ன? (2019 TNPSC)
a. 36
b. 46
c. 32
d. 42
Answer a. 36


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.