Donation

Ads Area

சதவீதம் [அசல்]


சதவீதம் [அசல்]
1. x இன் 30% என்பது 150 எனில், x இன் மதிப்பு ______ ஆகும். (8th New Book)

a. x = 500
b. x = 600
c. x = 800
d. x = 900
Answer a. x = 500

2. ஒரு தொகையின் 15% என்பது ரூ.3000 எனில் அத்தொகையைக் காண்க (2019 Gr2)
a. 18000
b. 20000
c. 21000
d. 25000
Answer b. 20000

3. ஒரு பாட்டிலில் உள்ள மொத்த பிஸ்கட்களின் எண்ணிக்கை 15% பிஸ்கட்டுகள் 30 எனில், பிஸ்கட்டுகளின் மொத்த எண்ணிக்கை. (2019 Gr3A)
a. 100
b. 150
c. 200
d. 300
Answer c. 200

4. குறள்மதி 20% தள்ளுபடியுடன் ஒரு ரெயின்கோட்டை வாங்கி ₹ 25 ஐச் சேமித்தார் எனில், ரெயின் கோட்டின் அசல் விலை என்ன? (7th New Book)
a. 125
b. 115
c. 75
d. 25
Answer a. 125

5. 48 என்பது எந்த எண்ணின் 32% ஆகும்? [8th New Book]
a. 150
b. 100
c. 200
d. 125
Answer a. 150

6. x இன் x % என்பது 25 எனில், x என்பது_________ ஆகும். (8th New Book)
a. x = 30
b. x = 25
c. x = 50
d. x = 60
Answer c. x = 50

7. n இன் n% என்பது 64 எனில் n இன் மதிப்பு யாது? (2019 Gr3A)
a. 6400
b. 640
c. 80
d. 160
Answer c. 80

8. ஒரு நபர் ஒவ்வொரு ஆண்டுக்கும் ரூ. 500 பரிசு வழங்குவதற்காக ஆண்டுக்கு 10% என்ற முறையில் முதலீடு செய்ய ஒரு நிதியை உருவாக்க முடிவு செய்கிறார் எனில் ஆரம்ப முதலீடு காண்க. (18/09/2021 TNPSC)
a. ரூ. 4,000
b. ரூ. 5,000
c. ரூ. 6,000
d. ரூ. 5,500
Answer b. ரூ. 5,000

9. அகிலா ஒரு தேர்வில் 80% மதிப்பெண்களைப் பெற்றாள். அவள் பெற்றது 576 மதிப்பெண்கள எனில், அந்த தேர்வின் மொத்த மதிப்பெண்களைக் காண்க. (8th New Book)
a. 700
b. 710
c. 720
d. 730
Answer c. 720

10. ஒரு உலோகக் கலவை 26% தாமிரத்தைக் கொண்டுள்ளது. 260 கிராம் தாமிரத்தைப் பெற எந்த அளவு உலோகக் கலவை தேவைப்படுகிறது? (7th New Book)
a. 740 கி
b. 2060 கி
c. 1000 கி
d. 10,000 கி
Answer c. 1000 கி

11. ஒரு எண்ணை 12% கூட்டும் போது 224 கிடைத்தால் அந்த எண்ணை காண்க (2019 TNPSC)
A)248
B)212
C)236
D)200
Answer D)200

12. ஓர் அலைபேசியானது 20% இலாபத்தில் ₹8400 இக்கு விற்கப்படுகிறது. அந்த அலைபேசியின் அடக்க விலை _______ ஆகும். (8th New Book)
(அ) ₹7000
(ஆ) ₹7400
(இ) ₹8400
(ஈ) ₹10500
Answer (அ) ₹7000

13. 20% விலை உயர்விற்குப் பின் ஒரு கிலோ உளுந்தம் பருப்பின் விலை ₹96 எனில், ஒரு கிலோ உளுந்தம் பருப்பின் அசல் விலையைக் காண்க. (7th New Book)
a. ₹ 100
b. ₹ 80
c. ₹ 60
d. ₹ 50
Answer b. ₹ 80

14. ஓர் எண்ணை 18% அதிகரித்தால் 236 கிடைக்கிறது எனில், அந்த எண்ணைக் காண்க. (8th New Book)
a. 100
b. 200
c. 300
d. 400
Answer b. 200

15. ஓர் எண்ணின் மதிப்பை 25% குறைத்தால் 120 கிடைக்கிறது எனில், அந்த எண்ணைக் காண்க (8th New Book)
a. 120
b. 160
c. 130
d. 150
Answer b. 160


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Ads Area