நேர் மற்றும் எதிர் விகிதங்கள் Part - 2


நேர் மற்றும் எதிர் விகிதங்கள் (7th New Book)
11. ஒரு மகிழுந்து 60 கி.மீ தூரத்தைக் கடக்க 3 லிட்டர் பெட்ரோல் தேவைப்படுகிறது. அதே மகிழுந்து 200 கி.மீ தூரத்தைச் சென்றடைய, தேவையான பெட்ரோலின் அளவு _______. (7th New Book)
a. 8 லிட்டர்கள்
b. 9 லிட்டர்கள்
c. 10 லிட்டர்கள்
d. 11 லிட்டர்கள்
Answer c. 10 லிட்டர்கள்

12. தாமரை வாடகைப் பணமாக ₹7500 ஐ, 3 மாதங்களுக்குச் செலுத்துகிறார் எனில், அதே போல, அவர் ஒரு வருடத்திற்குச் செலுத்த வேண்டிய வாடகைப் பணம் எவ்வளவு? (7th New Book)
a. ₹ 30000
b. ₹ 225000
c. ₹ 1875
d. ₹ 25000
Answer a. ₹ 30000

13. ஒரு நாளில் 14 தொழிலாளர்கள் 42 அடுக்குகளை அமைகின்றனர். எனில் 23 தொழிலாளர்கள் எத்தனை அடுக்குகளை அமைப்பார்கள்? (TNPSC 10-03-2023) (7th New Book)
(A) 60
(B) 65
(C) 69
(D) 68
Answer (C) 69

14. 8 மீ நீளமுள்ள கம்பத்தின் நிழலின் நீளம் 6 மீ அதே நேரத்தில் 30 மீ நிழல் ஏற்படுத்தும் மற்றொரு கம்பத்தின் நீளம் எவ்வளவு? (13-05-2023 TNPSC) (7th New Book)
(A) 50 மீ
(B) 45 மீ
(C) 40 மீ
(D) 35 மீ
Answer (C) 40 மீ

15. 8 ஆப்பிள்களின் விலை ₹56 எனில் 12 ஆப்பிள்களின் விலை ________. (7th New Book)
a. ₹ 84
b. ₹ 85
c. ₹ 86
d. ₹ 87
Answer a. ₹ 84

16. 7 மீ அளவுள்ள துணியின் விலை ₹ 294 எனில் 5 மீ அளவுள்ள துணியின் விலை ______. (7th New Book)
a. ₹ 212
b. ₹ 220
c. ₹ 250
d. ₹ 210
Answer d. ₹ 210

17. 6 பழரசப் பாட்டில்களின் விலை ₹210, எனில் 4 பழரசப் பாட்டில்களின் விலை என்ன? (7th New Book)
a. ₹ 140
b. ₹ 120
c. ₹ 150
d. ₹ 110
Answer a. ₹ 140

18. பழங்கள் நிறைந்த ஒரு பெட்டியின் எடை 3 1/2 கி.கி எனில், அதே அளவுள்ள 6 பெட்டிகளின் எடை ________. (7th New Book)
a. 20கி.கி
b. 21கி.கி
c. 22கி.கி
d. 23கி.கி
Answer b. 21கி.கி

19. அரை மீட்டர் துணியின் விலை ₹ 15 எனில், 8 1/3 மீ நீளமுள்ள துணியின் விலை எவ்வளவு? (7th New Book)
a. ₹ 212
b. ₹ 220
c. ₹ 250
d. ₹ 210
Answer c. ₹ 250

20. 15 அட்டைகளின் (charts) மொத்த எடை 50 கிராம் எனில், அதே அளவுடைய 2 1/2 கி.கி எடையில் எத்தனை அட்டைகள் (charts) இருக்கும்? (7th New Book)
(A) 675
(B) 625
(C) 750
(D) 725
Answer (C) 750


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.