Donation

Ads Area

சதவீதம் (%) [7th New Book]


சதவீதம் (%) [7th New Book]
1. ஒரு புத்தகக் கடையிலுள்ள 70 பத்திரிகைகளில் 14 பத்திரிகைகள் நகைச்சுவை பத்திரிகைகள் எனில், நகைச்சுவை பத்திரிகைகளின் சதவீதம் காண்க. [7th New Book]
a. 10%
b. 20%
c. 30%
d. 40%
Answer b. 20%

2. கவின் 25 இக்கு 15 மதிப்பெண்களைப் பெற்றால் அதன் சதவீதம் [7th New Book]
a. 60%
b. 15%
c. 25%
d. 15/25
Answer a. 60%

3. ஒரு பள்ளியில் மொத்தமுள்ள 120 ஆசிரியர்களில் 60 ஆசிரியர்கள் ஆண்கள் எனில், ஆண் ஆசிரியர்களின் சதவீதத்தைக் காண்க. [7th New Book]
a. 70%
b. 60%
c. 80%
d. 50%
Answer d. 50%

4. ஒரு தேர்வில் யாழினி 25 இக்கு 15 மதிப்பெண்கள் பெற்றாள் எனில், அதன் சதவீதம் காண்க. [7th New Book]
a. 70%
b. 60%
c. 80%
d. 30%
Answer b. 60%

5. இனியன் 5 டசன் முட்டைகளை வாங்கினார் அதில் 6 முட்டைகள் கெட்டுவிட்டால், நல்ல முட்டைகளின் சதவீதத்தைக் காண்க. [7th New Book]
a. 10%
b. 90%
c. 80%
d. 20%
Answer b. 90%

6. இஸ்மாயில் என்பவர் சில வகையான மணிகளை வாங்குவதற்காகச் சரக்கு அனுப்பாணையை அனுப்பினார். மொத்தம் 50 மணிகளில் 15 மணிகள் மட்டுமே பழுப்பு நிறம் எனில், பழுப்பு நிற மணிகளின் சதவீதத்தைக் காண்க. [7th New Book]
a. 70%
b. 60%
c. 80%
d. 30%
Answer d. 30%

7. மொத்தமுள்ள 20 மணிகளில், 5 மணிகள் சிவப்பு எனில், சிவப்பு மணியின் சதவீதம் என்ன? (7th New Book)
a. 20%
b. 15%
c. 25%
d. 10%
Answer c. 25%

8. ஒரு மட்டைப் பந்து (கிரிக்கெட்) அணி ஒரு வருடத்தில் 70 போட்டிகளில் வெற்றியும் 28 போட்டிகளில் தோல்வியும் 2 போட்டிகளில் முடிவு ஏதுமில்லை எனவும் இருந்தால் அணியின் வெற்றிச் சதவீதத்தைக் கணக்கிடுக. [7th New Book]
a. 70%
b. 60%
c. 80%
d. 50%
Answer a. 70%

9. ஓர் அரசு உயர்நிலைப்பள்ளியைச் சேர்ந்த 75 மாணவர்கள் 10 ஆம் வகுப்புத் தேர்வில் பங்குபெற்றனர். அவர்களில் 72 பேர் தேர்வில் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது எனில், தேர்ச்சி பெற்ற மாணவர்களின் சதவீதத்தைக் காணவும். (7th New Book)
a. 95%
b. 96%
c. 97%
d. 98%
Answer b. 96%

10. குமரன் ஆண்டுக்கு 9 மாதங்கள் வேலை செய்கிறார் எனில், அந்த ஆண்டில் அவர் எவ்வளவு சதவீதம் வேலை செய்தார் என்பதைக் கணக்கிடுக. [7th New Book]
a. 75%
b. 35%
c. 50%
d. 80%
Answer a. 75%

11. ஒரு தொடர்வண்டியில் பயணச்சீட்டின் முழுக்கட்டணம் ₹200 சலுகை அட்டை வைத்திருப்பவர்களுக்கு ₹ 120 இக்கு டிக்கெட் வழங்கப்பட்டால், சலுகை அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட தள்ளுபடிச் சதவீதத்தைக் காண்க. [7th New Book]
a. 40%
b. 60%
c. 80%
d. 50%
Answer a. 40%

12. தென்றல் தனது வருமானத்தில் 4 இல் ஒரு பங்கைச் சேமித்தால் அதன் சதவீதத்தைக் காண்க. [7th New Book]
a. 3/4%.
b. 1/4%
c. 25%
d. 50%
Answer c. 25%

13. ஒரு கணக்கெடுப்பில் ஐந்து பேரில் ஒருவர் ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தின் சோப்பை விரும்புவதாகக் கூறினார். அதனைச் சதவீதமாக மாற்று. (7th New Book)
a. 20%
b. 15%
c. 25%
d. 10%
Answer a. 20%

14. 1 பங்கு உளுந்து மாவுடன் 4 பங்கு அரிசி கலந்த மாவில், குழல் என்பவரின் தாயார் தோசை தயாரிக்கிறார் எனில், மாவிலிருக்கும் மூலப்பொருள்களைச் சதவீதமாகக் குறிக்கவும். (7th New Book)
a. 80%, 20%
b. 70%, 30%
c. 90%, 10%
d. 80%, 10%
Answer a. 80%, 20%

15. மலர் 25 மீட்டர் துணிச் சுற்றலிருந்து 1.75 மீட்டர் துணியை வாங்கினார் எனில், மலர் வாங்கிய துணியின் அளவைச் சதவீதத்தில் கூறுக. (7th New Book)
a. 6%
b. 7%
c. 8%
d. 9%
Answer b. 7%

16. ஒரு கடைக்காரர் நாற்காலியை ₹325 இக்கு வாங்கி ₹350 இக்கு விற்பனை செய்கிறார் எனில், இலாபச் சதவீதத்தைக் கண்டறியவும்.(7th New Book)
a. 7 9/13%
b. 7 1/13%
c. 7 8/13%
d. 7 9/12%
Answer a. 7 9/13%


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Ads Area