1. P மற்றும் Qன் தற்போதைய வயதுகளின் விகிதம் 2:3 மேலும் அவர்களின் வயதுகளின் வித்தியாசம் 8 ஆண்டுகள் எனில் Pன் தற்போதைய வயது என்ன? (2013 G2)
a. 16
b. 24
c. 12
d. 30
2. நவீன் மற்றும் சுமிதாவின் ஊதிய விகிதம் 2:3 ஒவ்வொரு ஊழியத்திலும் ரூ. 4000 அதிகரித்தால் புதிய ஊதிய விகிதம் 40:57 சுனிதாவின் தற்போதைய ஊதியம் யாது? (2014 G1)
a. ரூ. 32000
b. ரூ. 34000
c. ரூ. 38000
d. ரூ. 40000
3. இரு நபர்களின் மாத வருமானம் 4:7 எனும் விகிதத்தில் உள்ளது. அவர்களின் செலவுகளின் விகிதம் 5:9 அவர்கள் ஒரு மாதத்திற்கு ரூ. 75 சேமிக்கிறார்கள் எனில் அவர்களின் மாத வருமானம்? (2015)
a. 300, 400
b. 400, 500
c. 1200, 2100
d. 1400, 2600
4. ராமனின் வயது அவரது மகள் நந்தினியின் வயதை போல் 7 மடங்கு. 5 வருடங்களுக்குப் பிறகு ராமனின் வயது மகளின் வயதை போல 5 மடங்கு எனில் அவர்களின் தற்போதைய வயது என்ன? (2014 G4)
a. 5, 35
b. 6, 42
c. 9, 63
d. 10, 70
5. 2014 மற்றும் 2022 ஒரு மகன் மற்றும் தந்தையின் வயதுகளின் விகிதம் முறையே 1:4 மற்றும் 3:8 எனில் 2010 மகன் மற்றும் தந்தையின் வயதுகளின் கூடுதல் யாது (2014 VAO)
a.42
b.43
c.50
d.45
6. ஒரு நபரின் தற்போதைய வயது அவர் தாயின் வயத்தில் ஐந்தில் இரண்டு மடங்காக உள்ளது. 8 வருடங்கள் கழித்து அவரின் வயது அவர் தாயின் வயதில் பாதியாக உள்ளது. தாயின் தற்போதைய வயது என்ன? (2015 G1)
a. 42
b. 40
c. 45
d. 48
7. முரளியின் தற்போதைய வயது, அவருடைய தந்தையின் வயதில் பாதியாகும். 10 ஆண்டுகளுக்கு முன்பு, தந்தையின் வயதானது, முரளியின் வயதை போல மும்மடங்காக இருந்தது முரளி மற்றும் அவரது தந்தையின் தற்போதைய வயதுகளை காண்க? (2016 G2A)
a. 16, 32
b. 15, 30
c. 20, 40
d. 17, 34
8. தாயின் வயதானது மகளின் வயதை காட்டிலும் 20 அதிகம். 4 வருடங்களுக்கு முன்பு தாயின் வயது மகளின் வயதை போல 5 மடங்கு எனில் தற்போதைய மகளின் வயது? (2016 VAO)
a. 9
b. 12
c. 18
d. 16
9. A, B என்பவர்களின் தற்போதைய வயது விகிதம் 4:5. 5 வருடங்களுக்குப் பிறகு அவர்களின் வயது 5:6 எனில், இருவரின் தற்போதைய வயதின் கூடுதல் (2017 G1)
a. 55
b. 45
c. 35
d. 25
10. ஒரு பையனின் தற்போதைய வயது அவனது தங்கையின் வயதை போல இரு மடங்கு, 4 வருடங்களுக்கு முன்பு அவனது வயது அவன் தங்கையின் வயதை போல மூன்று மடங்கு எனில், அவர்களின் தற்போதைய வயது என்ன? (2017 G2A)
a. 18, 9
b. 14, 7
c. 16, 8
d. 12, 6
11. அருணின் தற்போதைய வயது அவருடைய தந்தையின் வயதில் பாதியாகும். 12 ஆண்டுகளுக்கு முன்பு தந்தையின் வயது அருணின் வயதை போல மும்மடங்கு இருந்தது தற்போது தந்தையின் வயது? (2018 G4)
a. 24
b. 36
c. 48
d. 50
12. சரண் என்பவரின் வயது தன் மகன் சங்கர் வயதை போல 6 மடங்கு. 4 ஆண்டுகள் கழித்து அவரின் வயது மகன் வயதை போல 4 மடங்கு எனில் அவர் அவர்களின் தற்போதைய வயது என்ன (2019 G4)
a. 30,5
b. 36,6
c. 48,8
d. 24,4
13. ரீணா மற்றும் உஷாவின் தற்போதைய வயது முறையே 24 வருடங்கள் மற்றும் 36 வருடங்கள் எனில் எட்டு ஆண்டுகளுக்கு முன்பு உஷா மற்றும் ரீணாவின் வயதுகளின் விகிதம் என்னவாக இருந்திருக்கும்? (01/09/2019 G4)
a. 7:4
b. 6:5
c. 2:3
d. 4:7
14. அருண் மற்றும் சுரேஷ் தற்போதைய வயதுகள் முறையும் 24 வருடங்கள் மற்றும் 36 வருடங்கள் எனில் 8 ஆண்டுகளுக்கு முன்பு சுரேஷ் மற்றும் அருண் வயதுகளின் விகிதம் என்னவாக இருக்கும்? (03/01/2021 G1)
a. 4:7
b. 6:5
c. 7:4
d. 3:2
Pls Maths new book back online test now
ReplyDelete