1. A மற்றும் Bன் வருமான விகிதம் 5:4 செலவுகளின் விகிதம் 3:2 ஒரு மாத முடிவில் இவர்கள் இருவரும் தனித்தனியே ரூ. 1600 சேமிக்கிறார்கள் எனில், Bன் மாத வருமானம் எவ்வளவு (10/06/2017)
a. 3200
b. 4000
c. 3600
d. 4400
2. A மற்றும் Bன் வருமான விகிதம் 5:4 செலவுகளின் விகிதம் 3:2 ஒரு மாத முடிவில் இவர்கள் இருவரும் தனித்தனியே ரூ.2000 சேமிக்கிறார்கள் எனில், அவர்களுடைய மாதாந்தர வருமானத்தை காண்க
a. 5000, 4000
b. 4000, 5000
c. 6000, 3000
d. 3000, 6000
3. A, B என்பவர்களின் தற்போதைய வயது விகிதம் 4:5. 5 வருடங்களுக்குப் பிறகு அவர்களின் வயது 5:6 எனில் இவர்களின் தற்போதைய வயது கூடுதலாக காண்க (2017 G1)
a.55
b.45
c.35
d.25
4. A, B என்பவர்களின் தற்போதைய வயது விகிதம் 4:5. 4 ஆண்டுகளுக்கு முன்பு அவர்களின் வயது 2:3 எனில் Aன் வயது காண்க
a.10
b.8
c.12
d.16
5. A மற்றும் B ஆகியோரது மாத வருமான விகிதம் 3:4 ஆகவும் அவர்களுடைய செலவுகளின் விகிதம் 5:7 ஆகவும் இருக்கின்றன. ஒவ்வொரு மாதமும் ரூ. 5000 சேமிக்கிறார்கள் எனில் அவர்களுடைய மாத வருமானத்தை காண்க (9th new book)
a. 30000, 40000
b. 40000, 30000
c. 20000, 50000
d. 50000, 20000
6. இரு நபரின் வருமானங்கள் விகிதம் 9:7 அவர்களின் செலவுகளின் விகிதம் 4:3 ஒவ்வொருவரும் மாதம்தோறும் ரூ. 2000 சேமிக்க முடிந்தால், அவர்களுடைய மாதாந்தர வருமானத்தை காண்க (10th old Book)
a. 18000, 14000
b. 14000, 18000
c. 16000, 12000
d. 12000, 16000
Day 2
1. இரு எண்களின் விகிதம் 1:2 இவ்விரு எண்களுடன் 7ஐ கூட்டினால் விகிதமானது 3:5 என மாறுகிறது எனில் இதன் மிகப்பெரிய எண்? (11/06/2017)
a. 17
b. 12
c. 28
d. 36
2. தந்தை மற்றும் மகனின் தற்போதைய வயது விகிதம் 6:1. 5 வருடங்களுக்குப் பிறகு அவர்களின் வயதுகளின் விகிதம் 7:2 எனில், மகனின் தற்போதைய வயது (1999 TNPSC)
a. 10 ஆண்டுகள்
b. 9 ஆண்டுகள்
c. 6 ஆண்டுகள்
d. 5 ஆண்டுகள்
3. ரவி மற்றும் ராஜாவின் வயதுகளின் விகிதம் 5:12. 6 வருடங்களுக்குப் பிறகு, அவர்களின் வயதுகளின் விகிதம் 8:15 எனில் தற்போது அவர்கள் அவர்களுக்கு இடையேயான வயது வித்தியாசம்
a. 14 ஆண்டுகள்.
b. 16 ஆண்டுகள்
c. 12 ஆண்டுகள்
d. 13 ஆண்டுகள்
4. 2015 மற்றும் 2023 ஒரு மகன் மற்றும் தந்தையின் வயதுகளின் விகிதம் முறையே 1:4 மற்றும் 3:8 எனில் 2010 மகன் மற்றும் தந்தையின் வயதுகளின் கூடுதல் யாது (2019 EO4)
a. 40
b.30
c.35
d.45
5. 2014 மற்றும் 2022 ஒரு மகன் மற்றும் தந்தையின் வயதுகளின் விகிதம் முறையே 1:4 மற்றும் 3:8 எனில் 2010 மகன் மற்றும் தந்தையின் வயதுகளின் கூடுதல் யாது (2014 VAO)
a.42
b.43
c.50
d.45
6. விவேக் மற்றும் சமித் ஆகிய இருவர்களின் வயதுகளின் விகிதம் 2:3. 12 ஆண்டுகளுக்குப் பின் அவர்களின் வயதுகளின் விகிதம் 11:15 எனில் சமித்தின் வயது (25/05/2018)
a.32
b.42
c.48
d.46
Day 3
1. சரண் என்பவரின் வயது தன் மகன் சங்கர் வயதை போல 6 மடங்கு. 4 ஆண்டுகள் கழித்து அவரின் வயது மகன் வயதை போல 4 மடங்கு எனில் அவர் அவர்களின் தற்போதைய வயது என்ன (2019 G4)
a. 30,5
b. 36,6
c. 48,8
d. 24,4
2. அருணின் தற்போதைய வயது அவருடைய தந்தையின் வயதில் பாதியாகும். 12 ஆண்டுகளுக்கு முன்பு தந்தையின் வயது அருணின் வயதை போல மும்மடங்கு இருந்தது தற்போது தந்தையின் வயது ? (2018 G4)
a. 24
b. 36
c. 48
d. 50
3. தற்போது ஒரு தந்தையின் வயது அவரது மகனின் வயதை போல இரு மடங்கு 20 ஆண்டுகளுக்கு முன்பு தந்தையின் வயது மகனின் வயதை போல ஆறு மடங்கு எனில் அவர்களது தற்போதைய வயது என்ன? (TNPSC 2017)
a. 60, 30
b. 40, 20
c. 58, 29
d. 50, 25
4. ஒரே பையனின் தற்போதைய வயது அவருடைய தங்கையின் வயதை போல இருமடங்கு. 4 ஆண்டுகளுக்கு முன்பு அவர் அவரது வயது அவன் தங்கையின் வயதை போல மூன்று மடங்கு எனில், அவர்களது தற்போதைய வயது என்ன? (2017 G2A)
a. 18, 9
b. 14, 7
c. 16, 8
d. 12, 6
5. மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் தந்தையின் வயது மகனின் வயதை போல 7 மடங்காக இருந்தது. தற்போது தந்தையின் வயது மகனின் வயதைப் போல 5 மடங்கு எனில் தந்தையின் தற்போதைய வயது என்ன
a. 40
b. 45
c. 50
d. 55
6. தற்பொழுது தந்தையின் வயது மகனின் வயதை போல 5 மடங்காக உள்ளது. மூன்று வருடங்களுக்குப் பிறகு தந்தையின் வயது மகனின் வயதை போல நான்கு மடங்காக இருக்கும் எனில் மகனின் தற்போதைய வயது என்ன
a. 9
b. 10
c. 11
d. 12
Day 04
1. மகன் மற்றும் தகப்பனின் தற்போதைய வயதின் கூட்டுத்தொகை 72, 12 வருடங்களுக்குப் பிறகு தகப்பனின் வயது மகனின் வயதில் 3 மடங்கு என்றால் மகனின் தற்போதைய வயதை காண்க? (2017 EO4)
a. 12
b. 22
c. 14
d. 16
2. A மற்றும் B இருவரின் வயதுகளின் கூடுதல் 60, 12 ஆண்டுகளுக்கு முன்னர் அவர்களின் வயது விகிதம் 5:4 எனில் Aன் தற்போதைய வயது?
a. 28
b. 32
c. 18
d. 42
3. A மற்றும் B இருவரின் வயதுகளின் கூடுதல் 60, 10 ஆண்டுகளுக்குப் பின்னர் Aன் வயது Bன் என்பதை போல மூன்று மடங்காக உள்ளது எனில் இருவரின் தற்போதைய வயது வித்தியாசம் என்ன?
a. 30
b. 40
c. 10
d. 50
4. A மற்றும் B இருவரின் இடையே உள்ள தற்போதைய வயதுகளின் வித்தியாசம் 10 ஆண்டுகள், நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இருவரின் வயதுகளின் விகிதம் 7:5 எனில் இருவரின் தற்போதைய வயதுகளின் கூடுதல்?
a. 39
b. 58
c. 78
d. 68
5. தற்போது P மற்றும் Qன் வயதுகளின் கூடுதல் 42. மூன்று ஆண்டுகள் முன்னர் Pன் வயது Qன் வயதை போல 5 மடங்காக இருந்தது எனில் தற்போது அவர்களின் வயது வித்தியாசம் என்ன?
a. 23
b. 24
c. 28
d. 33
6. தந்தை மற்றும் மகனின் தற்போதைய வயதுகளின் கூடுதல் 66. மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர் தந்தையின் வயது மகனின் வயதை போல 3 மடங்காக இருக்கும் எனில், அவர்களின் தற்போதைய வயதுகளின் விகிதம் என்ன?
a. 25:17
b. 17:6
c. 17:5
d. 17:3
Day 05
1. இராமனின் வயது அவருடைய இரு மகன்களுடைய வயதுகளின் கூடுதலைப் போல் மூன்று மடங்காகும். ஐந்தாண்டுகள் கழித்து அவரின் வயது தனது மகன்களுடைய வயதுகளின் கூடுதலைப் போல் இரு மடங்காகும் எனில், இராமனின் தற்போதைய வயதைக் காண்க (9th NEW BOOK)
a. 40
b. 45
c. 50
d. 55
2. ஒருவரின் தற்போதைய வயது அவரின் இரு மகன்களின் வயதுகளின் கூட்டுத்தொகை போல 6 மடங்கு உள்ளது. 4 வருடங்களுக்குப் பிறகு அவரின் வயது இரு மகன்களின் வயதுகளின் கூட்டுத்தொகை போல 4 மடங்காகும் எனில் தற்போது அவரின் வயது என்ன?
a. 24
b. 22
c. 30
d. 34
3. ஒருவரின் தற்போதைய வயது அவரின் இரு மகன்களின் வயதுகளின் கூட்டுத்தொகை போல 4 மடங்கு உள்ளது. 10 வருடங்களுக்குப் பிறகு அவரின் வயது இரு மகன்களின் வயதுகளின் கூட்டுத்தொகை போல 2 மடங்காகும் எனில் தற்போது அவரின் வயது என்ன? (26/06/2019)
a. 50
b. 55
c. 60
d. 65
4. சங்கரின் வயது அவருடைய இரு மகன்களுடைய வயதுகளின் கூடுதலைப் போல் 4 மடங்காகும். 12 ஆண்டுகள் கழித்து அவரின் வயது தனது மகன்களுடைய வயதுகளின் கூடுதலைப் போல் 2 மடங்காகும் எனில், சங்கரின் தற்போதைய வயதைக் காண்க
a. 50
b. 55
c. 60
d. 65
5. அர்ச்சுனன் வயது அவரது இரு மகன்களுடைய வயதுகளின் கூடுதலின் இரு மடங்காகும். 20 ஆண்டுகள் கழித்து அவரது வயது அவரின் இரு மகன்களுடைய வயதுகளின் கூடுதலுக்குச் சமம் எனில், அர்ச்சுனனின் வயது என்ன? (9th NEW BOOK)
a. 60
b. 40
c. 50
d. 30
6. சரண் வயது அவரது இரு மகன்களுடைய வயதுகளின் கூடுதலின் 4 மடங்காகும். 15 ஆண்டுகள் கழித்து அவரது வயது அவரின் இரு மகன்களுடைய வயதுகளின் கூடுதலுக்குச் சமம் எனில், அர்ச்சுனனின் வயது என்ன?
a. 60
b. 40
c. 50
d. 30
Day 06
1. தற்போது அருண் மற்றும் தீபக் ஆகியோரின் வயதுகளின் விகிதம் 4:3. 6 வருடங்களுக்குப் பிறகு அருணின் வயது 26 தற்போது தீபக் வயது என்ன? (22/06/2019)
a. 12
b. 15
c. 19 1/2
d. 21
2. அசோக் மற்றும் பிரதீப் வயதின் விகிதம் 4:3. 2 வருடங்கள் முன்பு அசோக்கின் வயது 26 எனில் பிரதீப்பின் தற்போதைய வயது என்ன?
a. 19 1/2
b. 21
c. 12
d. 15
3. தற்போது A மற்றும் Bஆகியோரின் வயதுகளின் விகிதம் 7:4. 6 வருடங்களுக்குப் பிறகு Aன் வயது 27 தற்போது B வயது என்ன?
a. 12
b. 21
c. 12
d. 15
4. ரீணா மற்றும் உஷாவின் தற்போதைய வயது முறையே 24 வருடங்கள் மற்றும் 36 வருடங்கள் எனில் எட்டு ஆண்டுகளுக்கு முன்பு உஷா மற்றும் ரீணாவின் வயதுகளின் விகிதம் என்னவாக இருந்திருக்கும்? (01/09/2019 G4)
a. 7:4
b. 6:5
c. 2:3
d. 4:7
5. அருண் மற்றும் சுரேஷ் தற்போதைய வயதுகள் முறையும் 24 வருடங்கள் மற்றும் 36 வருடங்கள் எனில் 8 ஆண்டுகளுக்கு முன்பு சுரேஷ் மற்றும் அருண் வயதுகளின் விகிதம் என்னவாக இருக்கும்? (03/01/2021 G1)
a. 4:7
b. 6:5
c. 7:4
d. 3:2
6. அருண் மற்றும் சுரேஷ் தற்போதைய வயதுகள் முறையும் 24 வருடங்கள் மற்றும் 36 வருடங்கள் எனில் 8 ஆண்டுகளுக்கு கழித்து சுரேஷ் மற்றும் அருண் வயதுகளின் விகிதம் என்னவாக இருக்கும்?
a. 15:22
b. 8:11
c. 22:15
d. 11:8
7. A மற்றும் B தற்போதைய வயதுகள் முறையும் 34 வருடங்கள் மற்றும் 44 வருடங்கள் எனில் 6 ஆண்டுகளுக்கு கழித்து A மற்றும் B வயதுகளின் விகிதம் என்னவாக இருக்கும்?
a. 4:5
b. 5:4
c. 5:6
d. 6:5
Day 07
1. ஒரு வருடத்திற்கு முன்னர் சமீர் மற்றும் அசோக் இருவரின் வயதுகளின் விகிதம் 4:3. ஒரு வருடத்திற்கு பின்னர் அவர்களின் வயதுகளின் விகிதம் 5:4 எனில் இருவரின் தற்போதைய வயதுகளின் கூடுதல் என்ன?
a. 10
b. 12
c. 16
d. 18
2. மூன்று வருடங்களுக்கு முன்னர் தந்தையின் வயது மகனின் வயதை போல 7 மடங்காக இருந்தது மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர் தந்தையின் வயது மகனின் வயதைப் போல் 4 மடங்காக இருக்கும் எனில் மகனின் தற்போதைய வயது என்ன?
a. 9
b. 10
c. 50
d. 40
3. 10 ஆண்டுகளுக்கு முன்னர் தாயின் வயது மகளின் வயதை போல 4 மடங்காகும், 10 ஆண்டுகளுக்குப் பின்னர் தாயின் வயது மகளின் வயதை போல 2 மடங்காகவும் உள்ளது எனில் மகளின் தற்போதைய வயது என்ன?
a. 20
b. 10
c. 15
d. 18
4. 5 ஆண்டுகளுக்குப் பின்னர் தந்தையின் வயது மகனின் வயதை போல 3 மடங்காகும், 5 ஆண்டுகளுக்குப் முன்னர் தந்தையின் வயது மகனின் வயதை போல 7 மடங்காகவும் உள்ளது எனில் தந்தையின் தற்போதைய வயது எவ்வளவு?
a. 80
b. 60
c. 50
d. 40
5. 5 வருடங்களுக்கு முன்பு ஒருவருடைய வயதானது அவருடைய மகனின் வயதை போல் 7 மடங்காகவும் 5 வருடங்கள் கழித்து அவருடைய வயதானது மகனின் வயத்தை போல 4 மடங்காக இருக்கும் எனில், அவருடைய தற்போதைய வயது என்ன? (9th New Book)
a. 75, 15
b. 70, 20
c. 75, 20
d. 70, 10