Time and Work Part -1

TNPSC Group 2 & 4
எந்தவித கட்டண பயிற்சி மையத்திற்கு செல்லாமல் படிக்கும் எனது சகோதர சகோதரிகளுக்கு மட்டும்

1. A என்பவர் ஒரு வேலையை 3 நாள்களிலும் B என்பவர் 6 நாள்களிலும் முடிப்பர் எனில், இருவரும் ஒன்றாகச் சேர்ந்து அந்த வேலையை ____ நாள்களில் முடிப்பர். (8th New Book), (19-03-2022 TNPSC)
a. 1
b. 2
c. 3
d. 4
Answer b. 2.

1A. ஒரு வேலையை ஆகாஷ் 3 நாட்களில் முடிப்பார். அதே வேலையை ராதா முடிக்க 6 நாட்கள் ஆகும். இருவரும் சேர்ந்து செய்தால், அவ்வேலையை எத்தனை நாட்களில் முடிப்பர்? (2023 TNPSC Gr 3A)
(A) 1
(B) 2
(C) 3
(D) 4
Answer (B) 2

2. A என்பவர் ஒரு வேலையை 20 நாட்களிலும், B என்பவர் அதே வேலையை 30 நாட்களிலும் செய்து முடிப்பார்கள். அவ்விருவரும் சேர்ந்து அவ்வேலையைச் செய்து முடிக்க எத்தனை நாட்கள் ஆகும்? (2019 TNPSC Gr4), (18/04/2021 TNPSC)
a. 10 நாட்கள்
b. 12 நாட்கள்
c. 11 நாட்கள்
d. 20 நாட்கள்
Answer b. 12 நாட்கள்

3. ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் இருவரும் சேர்ந்து ஒரு வேலையை செய்கிறார்கள். ஆண் ஒரு வேலையை 4 நாட்களில் செய்து முடிப்பார். ஒரு பெண் அதே வேலையை 12 நாட்களில் செய்து முடிப்பார். அவ்வேலையை இருவரும் சேர்ந்து எத்தனை நாட்களில் முடிப்பார்கள்? (2016 TNPSC G4)
a. 6 நாட்கள்
b. 5 நாட்கள்
c. 4 நாட்கள்
d. 3 நாட்கள்
Answer d. 3 நாட்கள்

4. ஒரு வேலையை A மட்டும் 60 நாட்களிலும், B மட்டும் 20 நாட்கள்லும் செய்ய முடியுமானால் இருவரும் சேர்ந்து அந்த வேலையை முடிக்க ஆகும் நாட்கள். (2017 TNPSC)
a. 10
b. 15
c. 20
d. 17
Answer b. 15

5. ஒரு வேலையை ஒரு ஆண் 4 நாட்களிலும், ஒரு பெண் 12 நாட்களிலும் செய்து முடிப்பர். அவ்விருவரும் சேர்ந்து வேலை செய்தால், அந்த வேலையை முடிக்க ஆகும் நாட்கள். (2017 TNPSC)
A) 2 நாட்கள்
B) 3 நாட்கள்
C) 5 நாட்கள்
D) 6 நாட்கள்
Answer B) 3 நாட்கள்

6. A என்பவர் ஒரு வேலையை 30 நாட்களில் செய்து முடிப்பார். B என்பவர் அதே வேலையை 40 நாட்களில் செய்து முடிப்பார் எனில் Aயும் Bயும் சேர்ந்து அந்த வேலையை எத்தனை நாட்களில் முடிப்பா? [19-06-2022 TNPSC]
(A) 18
(B) 17 1/7
(C) 20
(D) 16 1/6
Answer (B) 17 1/7

7. ஒரு ஆண் ஒரு வேலையை தனியாக 3 நாட்களில் முடிப்பார். அதே வேலையை ஒரு பெண் தனியாக 9 நாட்களில் முடிப்பார். அதே வேலையை இருவரும் இணைந்து எத்தனை நாட்களில் முடிப்பார்கள்? (2017 TNPSC)
a. 14/9
b. 6
c. 2 ¼
d. 3 ½
Answer c. 2 ¼

8. ஒரு வேலையை A, B என்ற இருவர் 4, 6 நாட்களில் செய்து முடிப்பர். இவ்விருவரும் சேர்ந்து அந்த வேலையை முடிக்க ஆகும் நாட்களின் எண்ணிக்கை
A) 1 2/5 நாட்கள்
B) 1 4/5 நாட்கள்
C) 2 2/5 நாட்கள்
D) 2 5/7 நாட்கள்
Answer C) 2 2/5 நாட்கள்

9. ஒரு வேலையை 4 மணி நேரத்தில் பாரி செய்கிறார். யுவன் அதே வேலையை 6 மணி நேரத்தில் செய்கிறார் எனில் இருவரும் சேர்ந்து அந்த வேலையைச் செய்து முடிக்க எத்தனை மணி நேரமாகும்? (10th New Book) (2023 TNPSC Gr 3A)
(A) 2 மணிகள் 20 நிமிடங்கள்
(B) 2 மணிகள் 40 நிமிடங்கள்
(C) 2 மணிகள் 24 நிமிடங்கள்
(D) 2 மணிகள் 44 நிமிடங்கள்
Answer (C) 2 மணிகள் 24 நிமிடங்கள்

10. A ஒரு வேலையை 18 நாட்களில் முடிக்கிறார். B அதே வேலையை முடிக்க A எடுக்கும் நாட்களில் பாதியை எடுக்கிறார் எனில் இருவரும் சேர்ந்து ஒரு நாளில் முடிக்கும் வேலையின் அளவு என்ன? [2022 TNPSC Gr1]
a. 1/9
b. 1/6
c. 2/7
d. 2/5
Answer b. 1/6

10A. ஒரு வேலையை ஆகாஷ் 3 நாட்களில் முடிப்பார். அதே வேலையை ராதா முடிக்க 6 நாட்கள் ஆகும். இருவரும் சேர்ந்து ஒரு நாளில் முடிக்கும் வேலையின் அளவு என்ன?
(A) 1
(B) ½
(C) 1/3
(D) ¼
Answer (B) ½


Post a Comment

3 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.