2022 TNPSC Exams Percentage

1: 25 மாணவர்களில் 72% பேர் கணித பாடத்தில் திறமையானவர்கள். கணித பாடத்தில் திறமையற்றொர் எத்தனை பேர்? [08-01-2022]

a. 5 மாணவர்கள்

b. 6 மாணவர்கள்

c. 7 மாணவர்கள் 

d. 8 மாணவர்கள்


2: ஒரு வகுப்பில் 50 மாணவர்கள் உள்ளனர். ஒரு குறிப்பிட்ட நாளில் 14% வருகை புரியவில்லை எனில் வருகை புரிந்த மாணவர்களின் எண்ணிக்கை காண்க? [08-01-2022]

a. 36

b. 7

c. 43 

d. 38


3: 48 இன் 48% =x இன் 64% எனில் xன் மதிப்பு _____ ஆகும் [08-01-2022]

a. 64

b. 56

c. 42

d. 36 


4: ஓர் எண்ணின் மதிப்பை 25% குறைத்தால் 120 கிடைக்கிறது எனில், அந்த எண்ணைக் காண்க [11-01-2022]

a. 180

b. 170

c. 160 

d. 150


5: 20% விலை உயர்விற்குப் பின் ஒரு கிலோ உளுந்தம் பருப்பின் விலை 96 எனில், ஒரு கிலோ உளுந்தம் பருப்பின் அசல் விலையைக் காண்க. [11-01-2022]

a. 100

b. 80 

c. 60

d. 50


6: ஒரு பள்ளியில் உள்ள 1400 மாணவர்களில், 420 பேர் மாணவிகள். பள்ளியிலுள்ள மாணவர்களின் சதவீதம் _________ஆகும். [11-01-2022]

a. 30%

b. 70% 

c. 50%

d. 80%


7: ஒரு உலோகக் கலவை 26% தாமிரத்தைக் கொண்டுள்ளது. 260 கிராம் தாமிரத்தைப் பெற எந்த அளவு உலோகக் கலவை தேவைப்படுகிறது? [11-01-2022]

a. 740 கி

b. 2060 கி

c. 1000 கி 

d. 10,000 கி


8: ராணி 100 வாழைப்பழங்களை 320க்கு வாங்கினால் அதனை ஒரு டஜன் 60க்கு விற்றாள் எனில், இதன் லாபம் (அ) நட்டம் சதவிகிதம் காண்க [11-01-2022]

a. 56 5/7%

b. 87 1/2%

c. 87 1/4%

d. 56 1/4% 


9: 200 இல் 1/2% ஐக் காண்க [22-01-2022]

(A) 1 

(B) 20

(C) 50

(D) 100


10: 10,000 இன் 25% மதிப்பின் 15% என்பது _______ ஆகும். [22-01-2022]

(A) 375 

(B) 400

(C) 425

(D) 475


11: ஒருவருடைய வருமானம் 10% அதிகரித்து அதன்பின் 10% குறைந்தது. அவருடைய வருமானத்தில் ஏற்பட்ட மாற்றம் என்ன சதவீதம்? [22-01-2022]

(A) 0%

(B) 1% 

(C) 10%

(D) 100%


12: 600 ன் x% ஆனது 450 எனில் x ன் மதிப்பென்ன? [12-03-2022]

(A) 75 

(B) 100

(C) 125

(D) 150


13: ஒரு கிராமத்தின் மக்கள் தொகை ஒவ்வொரு ஆண்டும் 10% அதிகரிக்கிறது. அதன் இப்போதைய மக்கள் தொகை 6000 எனில் 3 ஆண்டுகளுக்கு பிறகு அக்கிராமத்தின் மக்கள் தொகை என்னவாக இருக்கும்? (19-03-2022)

(A) 7966

(B) 7956

(C) 7936

(D) 7986 


14: ஒரு நகரத்தின் மக்கள் தொகை ஆண்டுக்கு 6% வீதம் அதிகரிக்கிறது. 2018 ஆம் ஆண்டு மக்கள் தொகை 238765 ஆக இருந்தது. 2020 ஆம் ஆண்டின் மக்கள் தொகையைக் காண்க.(19-03-2022)

(A) 268376

(B) 268276 

(C) 268266

(D) 268366


15: ஓர் எண்ணின் 60% இலிருந்து 60ஐக் கழித்தால் 60 கிடைக்கும் எனில் அந்த எண் _______ ஆகும்.(19-03-2022)

(A) 60

(B) 100

(C) 150

(D) 200 


16: ஒரு நகரத்தின் மக்கள்தொகை ஆண்டுதோறும் 10% வீதம் அதிகரிக்கிறது. அதன் தற்போதைய மக்கள்தொகை 26,620 எனில், 3 ஆண்டுகளுக்கு முன் மக்கள் தொகை _______ ஆகும். (23-03-2022)

(A) 20,000 

(B) 19,680

(C) 21,320

(D) 13,320


17: இரு சக்கர வாகனம் ஒன்றின் விலை 2 ஆண்டுகளுக்கு முன் 70,000 ஆக இருந்தது. அதன் மதிப்பு ஆண்டுதோறும் 4% வீதம் குறைகிறது. அதன் தற்போதைய மதிப்பைக் காண்க.(23-03-2022)

(A) 69,904

(B) 64,512 

(C) 67,200

(D) 64,400


18: 48 இன் 48% = z இன் 64% எனில், z ன் மதிப்பு ________ ஆகும். (23-03-2022)

(A) 64

(B) 56

(C) 42

(D) 36 


19: ஓர் எண்ணின் 60% லிருந்து 60ஐக் கழித்தால் 60 கிடைக்கும் எனில், அந்த எண் (30-04-2022)

(A) 60

(B) 100

(C) 150

(D) 200 


20: 10,000 இன் 25% மதிப்பின் 15% என்பது ________ ஆகும். (30-04-2022)

(A) 375 

(B) 400

(C) 425

(D) 475


21: ஆஷிஷ் 32,000 ஆரம்ப முதலீட்டில் ஒரு புத்தகக் கடையைத் திறந்தார். முதல் ஆண்டில் அவருக்கு 5% இழப்பு ஏற்பட்டது. இருப்பினும், இரண்டாவது ஆண்டில் அவர் 10% இலாபம் ஈட்டினார். மூன்றாம் ஆண்டில் 12 1/2% உயர்ந்தது. 3 வருடங்கள் முழுவதும் அவரது நிகர லாபத்தை கணக்கிடுக.(30-04-2022)

(A) 5,620 

(B) 37,620

(C) 7,620

(D) 57,620


22: ஒரு தலைமையை தேர்ந்தெடுக்கும் தேர்தலில் A மற்றும் B ஆகிய இரு நபர்களில் A ஆனவர் 192 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுகிறார். மொத்த வாக்குகளில் A ஆனவர் 58% ஐப் பெறுகிறார் எனில் பதிவான மொத்த வாக்குகளின் எண்ணிக்கை (30-04-2022)

(A) 1,000

(B) 1,200 

(C) 1,250

(D) 1,300


23: ஒரு நகரத்தின் மக்கள் தொகை ஒரு ஆண்டில் ரூ. 20000 லிருந்து ரூ. 25000 ஆக அதிகரிக்கிறது எனில் மக்கள் தொகை அதிகரிப்பு சதவீதம் காண்க. [2022 G2]

a. 50%

b. 25% 

c. 75%

d.100%

24: A, B, C என்ற வேட்பாளர்கள் பள்ளித் தேர்தலில் பெற்ற வாக்குகள் முறையே 153, 245 மற்றும் 102 எனில் வெற்றி பெற்ற வேட்பாளரின் வாக்கு சதவீதம் காண்க? [2022 G2]

a. 48%

b. 49%

c. 50%

d.55%

25: ஒரு பள்ளியில் 560 மாணவர்கள் உள்ளனர். அதில் 320 பேர் சிறுவர்கள் எனில், அந்தப் பள்ளியிலுள்ள சிறுமிகளின் சதவீதத்தைக் கண்டறியவும். [28-05-2022]

(A) 41%

(B) 42.86%

(C) 43.8%

(D) 44%

26: 250 லிட்டரின் 12% என்பது 150 லிட்டரின் _____ க்குச் சமமாகும். [28-05-2022]

(A) 30%

(B) 20% 

(C) 15%

(D) 10%


27: 16,000 தற்போதைய மதிப்புள்ள ஓர் இயந்திரம் தன் மதிப்பில் ஆண்டுக்கு 10% குறைந்தால்,எத்தனை ஆண்டுகளில் அது தற்போதைய மதிப்பில் பாதி மதிப்பாகும்? [28-05-2022]

(A) 2 ஆண்டுகள்

(B) 3 ஆண்டுகள்

(C) 4 ஆண்டுகள்

(D) 5 ஆண்டுகள் 


28: இரண்டு தொடர் தள்ளுபடிகளான 20% மற்றும் 25% ஆகியவற்றிற்கு நிகரான ஒரே தள்ளுபடி சதவீதம் [19-06-2022]

(A) 40% 

(B) 45%

(C) 5%

(D) 22.5%


29: ஒரு நாளில் 10 மணி நேரம் என்பது எத்தனை சதவீதம்? [19-06-2022]

(A) 16 1/3%

(B) 41 2/3% 

(C) 12 2/5%

(D) 10 2/5%

30: ஓர் இயந்திரத்தின் விலை ரூ.18,000. அது ஆண்டுக்கு 16 2/3% வீதம் தேய்மானம் அடைகிறது. 2 ஆண்டுகளுக்குப் பிறகு அதன் மதிப்பு ________ ஆக இருக்கும். [19-06-2022]

(A) ரூ.12,000

(B) ரூ.12,500 

(C) ரூ.15,000

(D) ரூ.16,500


31: ஒரு தண்ணீர்த் தொட்டியின் கொள்ளளவு 50லி ஆகும். தற்போது 30% தண்ணீர் நிரம்பியுள்ளது எனில் அதில் 50% தண்ணீர் நிறைய இன்னும் எத்தனை லிட்டர்கள் தேவை? [19-06-2022]

(A) 15 லி

(B) 40 லி

(C) 10 லி 

(D) 25 லி


32: ஓர் எண்ணில் 60% இலிருந்து 60ஐக் கழித்தால் 60 கிடைக்கும் எனில் அந்த எண் [19-06-2022]

(A) 60

(B) 100

(C) 150

(D) 200 


33: ஒரு நபரின் வருமானம் 10% அதிகரிக்கப்பட்டு பிறகு 10% குறைக்கப்படுகிறது எனில். அவரது வருமானம் [19-06-2022]

(A) 2% குறைகிறது

(B) 1% குறைகிறது 

(C) 1% அதிகரிக்கிறது

(D) 2% அதிகரிக்கிறது


34: 600-இன்x% என்பது 450 எனில், x-இன் மதிப்பைக் காண்க. (02-07-2022)

(A) 60

(B) 48

(C) 75 

(D) 89


35: 400-ன் 30% மதிப்பின் 25% என்ன? (02-07-2022)

(A) 20

(B) 30 

(C) 40

(D) 50


36: பூச்சட்டி ஒன்றை 528-க்கு விற்று ஒரு பெண் 20% இலாபம் பெறுகிறார். 25% இலாபம் பெற அவர் அதை என்ன விலைக்கு விற்க வேண்டும்? (02-07-2022)

(A) 500

(B) 550 

(C) 553

(D) 573


37: ஒரு இயந்திரத்தின் மதிப்பு ஒவ்வொரு ஆண்டும் 5% குறைகிறது. ஒருவர் இதை வாங்குவதற்கு 30,000 கொடுத்தார். மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு இதன் மதிப்பு என்ன? (02-07-2022)

(A) 25,721 

(B) 25,722

(C) 27,521

(D) 22,752


38: ஒரு கடைக்காரர் ஒவ்வொன்றும் ரூ.10 என 200 பல்புகளை வாங்கினார். அவற்றில் 5 பல்புகள் பழுது என்று கண்டறியப்பட்டு, தூக்கி எறியப்பட்டது. மீதியை ஒவ்வொன்றும் ரூ.12 க்கு விற்றால், அவர் பெற்ற லாப அல்லது நஷ்ட சதவீதத்தைக் காண்க. [06-08-2022]

(A) நஷ்டம் 14.53%

(B) இலாபம் 15.43%

(C) இலாபம் 17%

(D) நஷ்டம் 18% 


39: ஒருவரின் வருமானம் 10% அதிகரிக்கிறது. பின்பு 10% குறைகிறது எனில் அவரது வருமானத்தில் என்ன மாற்றம் நிகழும்? [06-08-2022]

(A) 1% அதிகரிக்கும்

(B) 1% குறையும் 

(C) எந்த மாற்றமுமில்லை

(D) 10% அதிகரிக்கும்


40: இரண்டு தொடர் தள்ளுபடிகளான 20% மற்றும் 25% ஆகியவற்றிற்கு சமமான தள்ளுபடி சதவீதம்? [06-08-2022]

(A) 40% 

(B) 5%

(C) 45%

(D) 22.5%


41: ஒரு எண்ணின் மதிப்பை 25% குறைத்தால் 120 கிடைக்கிறது எனில் அந்த எண்ணைக் காண்க? [06-08-2022]

(A) 160 

(B) 180

(C) 180

(D) 150


42: 0.07% ஐ பின்னமாக மாற்றுக [2022 EO3]

(A) 7/10

(B) 7/10000 

(C) 7/100

(D) 7/1000


43: ஒரு எண்ணில் 16 2/3 % என்பது 40 எனில் அந்த எண் யாது? [2022 EO3]

(A) 220

(B) 240 

(C) 420

(D) 520


44: ஓர் ஆடையின் விலை ரூ.2,100 லிருந்து ரூ.2,520 ஆக அதிகரித்தால், அதிகரிப்பு சதவீதம் [2022 EO3]

(A) 15

(B) 18

(C) 20 

(D) 25


45: ஒரு தேர்வில் உள்ள மொத்த மாணவர்களில் 35% பேர் தேர்ச்சி பெற்றவர்கள். மேலும் 455 பேர் தேர்ச்சி பெறாதவர்கள் எனில் தேர்வு எழுதிய மாணவர்களின் எண்ணிக்கை [2022 EO3]

(A) 490

(B) 700 

(C) 845

(D) 1300


46: ஒரு பொருளின் வாங்கிய விலை மற்றும் விற்ற விலை 4:5 என்ற விகிதத்தில் உள்ளன. எனில் இலாப சதவீதம் காண்க [2022 EO3]

(A) 10%

(B) 20%

(C) 25% 

(D) 30%


47: ஒரு குடும்பம் உணவகத்திற்குச் சென்று உணவுக்காக ரூ.350 செலவு செய்து கூடுதலாகச் சரக்கு மற்றும் சேவை வரியாக 5% செலுத்தினார்கள் எனில் மத்திய மற்றும் மாநில சரக்கு சேவை வரியைக் கணக்கிடுக. [2022 EO3]

(A) ரூ.87.5, ரூ.85.7

(B) ரூ. 8.75, ரூ.8.75 

(C) ரூ.85.7, ரூ.87.5

(D) ரூ.7.85,ரூ.7.85


48: ஒரு வகுப்பில் 50 மாணவர்கள் உள்ளனர். ஒரு குறிப்பிட்ட நாளில் 14% பேர் வருகை புரியவில்லை எனில், வருகை புரிந்த மாணவர்களின் எண்ணிக்கையைக் காண்க. [7th New Book] [2022 EO4]

(A) 41

(B) 42

(C) 43 

(D) 44


49: 20% விலை உயர்விற்குப் பின் ஒரு கிலோ உளுந்தம் பருப்பின் விலை 96 எனில் ஒரு கிலோ உளுந்தம் பருப்பின் அசல் விலையைக் காண்க. [8th New Book] [2022 EO4]

(A) 86

(B) 84

(C) 78

(D) 80 


50: 25% இன் 25% என்பது [08-10-2022]

(A) 6.25

(B) 0.625

(C) 0.0625 

(D) 0.00625


51: ஒரு தலைமையைத் தேர்ந்தெடுக்கும் தேர்தலில் A மற்றும் B ஆகிய இரு நபர்களில் A ஆனவர் 192 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுகிறார். மொத்த வாக்குகளில் A ஆனவர் 58% ஐப் பெறுகிறார் எனில், பதிவான மொத்த வாக்குகள் எவ்வளவு? [08-10-2022]

(A) 1000 வாக்குகள்

(B) 1050 வாக்குகள்

(C) 1100 வாக்குகள்

(D) 1200 வாக்குகள் 


52: ராமு என்பவர் தமிழ் பாடத்தில் 50க்கு 40 மதிப்பெண்களும், ஆங்கில பாடத்தில் 25க்கு 20 மதிப்பெண்களும், அறிவியல் பாடத்தில் 40க்கு 30 மதிப்பெண்களும், கணிதப் பாடத்தில் 80க்கு 68 மதிப்பெண்களும் பெற்றார் எனில் அவர் எந்தப் பாடத்தில் சிறந்த சதவீதம் பெற்றுள்ளார்? [08-10-2022]

(A) தமிழ்

(B) ஆங்கிலம்

(C) அறிவியல்

(D) கணிதம் 


53: ஒரு தேர்வை 900 மாணவர்களும் 600 மாணவிகளும் எழுதினார்கள். அந்தத் தேர்வில் 70% மாணவர்களும் 85% மாணவிகளும் தேர்ச்சி பெற்றனர் எனில், தேர்ச்சி பெறாத மாணவ, மாணவிகளின் சதவீதத்தைக் காண்க. [08-10-2022]

(A) 24% 

(B) 25%

(C) 28%

(D) 30%


54: அகிலா ஒரு தேர்வில் 80% மதிப்பெண்களைப் பெற்றாள். அவள் பெற்றது 576 மதிப்பெண்கள். அந்த தேர்வின் மொத்த மதிப்பெண்களைக் காண்க? [2022 Gr1]

a. 640

b. 680

c. 720

d. 700

55: தேயிலையின் விலை 20% அதிகரிக்கும்போது தேயிலை பயன்பாட்டின் செலவு மாறாமல் இருக்க தேயிலை பயன்பாட்டினை எத்தனை சதவீதம் குறைத்துக்கொள்ள வேண்டும்? [2022 Gr1]

a. 15 2/3%

b. 16 2/3% 

c. 17 2/3%

d. 18 2/3%


56: ஓர் எண்ணின் 75% உடன் 75 ஐ கூட்டினால் முடிவு அதே எண். அந்த எண்ணைக் கண்டுபிடி. (06-11-2022)

(A) 50

(B) 60

(C) 300 

(D) 400


57: 400 இன் 30% மதிப்பின் 25% என்ன? (06-11-2022)

(A) 25

(B) 30 

(C) 120

(D) 150


58: ஒரு நபரின் மாத வருமானம் ரூ. 5,000. அவரது வருமானம் 30% அதிகரித்தால், அவரது புதிய மாத வருமானம் என்ன? (12-11-2022)

(A) ரூ.3,500

(B) ரூ.4,500

(C) ரூ.5,500

(D) ரூ.6,500 


59: மதிப்பு காண்க: 750ன் 45% - 480ன் 25% (12-11-2022)

(A) 216

(B) 236.50 

(C) 217.50

(D) 245


60: ஒரு பெட்டியில் சிவப்பு மற்றும் நீல நிறப் பத்துகள் மொத்தமாக 75 இருக்கின்றன. அவற்றுள் 18 சிவப்பு பந்துகள் இருக்குமெனில் நீல நிறப் பந்துகளின் எண்ணிக்கையை சதவீதத்தில் காண்க. (12-11-2022)

(A) 24%

(B) 50%

(C) 76% 

(D) 67%


61: சதவீதத்தில் மாற்றுக : 2 லிட்டரில் 200 மி.லி (21-12-2022)

(A) 10% 

(B) 2%

(C) 20%

(D) 100%


62: ஓர் எண்ணை 20% குறைத்தால் 80 கிடைக்கிறது எனில், அந்த எண்ணைக் காண்க. (22-12-2022)

(A) 200

(B) 100 

(C) 300

(D) 400

 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.