Donation

Ads Area

காலம் மற்றும் வேலை || விகிதம் மற்றும் விகிதாசாரம் 2024 Group 4 Analysis

Exams Date Questions
2022 Group 4 2
2019 Group 4 4
2018 Group 4 2
2016 Group 4 3

10 விவசாயிகள் 21 நாட்களில் ஒரு நிலத்தை உழுது முடிக்கின்றனர் எனில் அதே நிலத்தை 14 விவசாயிகள் எத்தனை நாட்களில் உழுது முடிப்பர்? (2022 Group 4)  விகிதம் மற்றும் விகிதாசாரம்
(A) 14 நாட்கள்  
(B) 15 நாட்கள்
(C) 16 நாட்கள்  
(D) 17 நாட்கள்

முகேஷ் ஒரு நாளில் 2/7 பகுதி வேலையை செய்து முடிப்பார் எனில் எத்தனை நாட்களில்அவ்வேலையை முழுமையாக செய்து முடிப்பார்? (2022 Group 4)
(A) 2 1/2 நாட்கள் 
(B) 3 1/2 நாட்கள்
(C) 4 1/2 நாட்கள் 
(D) 5 1/2 நாட்கள்

14 அச்சுக் கோர்ப்பவர்கள், 5 மணி நேரத்தில் ஒரு புத்தகத்தின் 70 பக்கங்களை முடிப்பர். 10 மணி நேரத்தில், 100 பக்கங்களை முடிக்க எத்தனை அச்சுக் கோர்ப்பவர்கள் தேவை? (2019 Group 4) விகிதம் மற்றும் விகிதாசாரம்
a. 12 
b. 10
c. 8
d. 7

A என்பவர் ஒரு வேலையை 20 நாட்களிலும், B என்பவர் அதே வேலையை 30 நாட்களிலும் செய்து முடிப்பார்கள். அவ்விருவரும் சேர்ந்து அவ்வேலையைச் செய்து   முடிக்க எத்தனை நாட்கள் ஆகும்? (2019 Group 4)
a. 10 நாட்கள்  
b. 12 நாட்கள்
c. 11 நாட்கள்
d. 20 நாட்கள்

ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் இருவரும் சேர்ந்து ஒரு வேலையை செய்கிறார்கள். ஆண்  ஒரு வேலையை 4 நாட்களில் செய்து முடிப்பார். ஒரு பெண் அதே வேலையை 12 நாட்களில் செய்து முடிப்பார். அவ்வேலையை இருவரும் சேர்ந்து எத்தனை நாட்களில்   முடிப்பார்கள்? (2016 Group 4)
a. 6 நாட்கள்
b. 5 நாட்கள்
c. 4 நாட்கள்
d. 3 நாட்கள்

A ஒரு வேலையை 20 நாட்களிலும், B அதை 25 நாட்களிலும் செய்து முடிப்பர். இருவரும் சேர்ந்து அவ்வேலையைச் செய்து ரூ. 3,600-ஐ ஈட்டினால் அத்தொகையில் A-ன் பங்கு (2016 Group 4)
a. ரூ. 1,600
b. ரூ. 2,000
c. ரூ. 3,000
d. ரூ. 3,100

22 ஆட்கள் 10 நாட்களில் 110 மீ நீளமுள்ள சுவரை கட்டி முடித்தால், 30 ஆட்கள் 6 நாட்களில் கட்டி முடிக்கும் சுவரின் நீளம் (2016 Group 4)
a. 100 மீ
b. 90 மீ
c. 80 மீ
d. 70 மீ

ஒரு தொட்டியை இரு குழாய்கள் தனித்தனியே முறையே 30 நிமிடங்கள், 40 நிமிடங்களில் நிரப்புகிறது. மற்றொரு குழாய் நீர் நிரம்பிய தொட்டியை 24 நிமிடங்களில் காலி செய்யும். தொட்டி காலியாக இருந்து இம்மூன்று குழாய்களும் ஒரே சமயத்தில் திறந்து விடப்பட்டால் அத்தொட்டி எத்தனை நிமிடங்களில் நிரம்பும்? (2014 Group 4)
a. 1 1/2 மணிநேரம்
b. இரண்டு மணிநேரம்
c. ஒரு மணி நேரம்
d. 2 1/2 மணி நேரம்

A என்பவர் ஒரு வேலையின் 2/3 பகுதியை 10 நாட்களில் செய்து முடிப்பார். அதே   வேலையின் 1/3 பகுதியை A செய்து முடிக்க ஆகும் நாட்களின் எண்ணிக்கை (2013 Group 4)
a. 3 நாட்கள்  
b. 4 நாட்கள்
c. 5 நாட்கள்
d. 6 நாட்கள்

ஒரு வேலையை முழுமையாக தனித்தனியே செய்து முடிக்க A, B, C ஆகியோருக்கு 12 நாட்கள், 6 நாட்கள் மற்றும் 3 நாட்கள் என்க. A, B இருவரும் வேலையை செய்ய ஆரம்பித்து மறுநாள் Cம் அவர்களோடு வேலையை செய்தால், அந்த வேலையை முழுமையாக செய்து முடிக்கத் தேவையானநாட்கள் (2013 Group 4)
a. 2 2/7 நாட்கள்
b. 1 2/7 நாட்கள்
c. 2 1/7 நாட்கள்
d. 1 1/7 நாட்கள்

ஒரு செவ்வகத்தின் நீளம் அகலம் விகிதம் 4:7 ஆகும்.
அகலம் 77 சென்டிமீட்டர் எனில் அதன் நீளத்தை காண்க (2016 Group 4) விகிதம் மற்றும் விகிதாசாரம்
a. 22 சென்டிமீட்டர் b. 33 சென்டிமீட்டர் c. 44 சென்டிமீட்டர் d. 55 சென்டிமீட்டர் a/3 = b/4 = c/7 எனில் (a+b+c) /c என்பது (2018 Group 4) விகிதம் மற்றும் விகிதாசாரம்
a. 7 b. 2 c. 1/2 d. 1/7 சரண் என்பவரின் வயது தன் மகன் சங்கர் வயதை போல 6 மடங்கு.
4 ஆண்டுகள் கழித்து அவரின் வயது மகன் வயதை போல 4 மடங்கு
எனில் அவர் அவர்களின் தற்போதைய வயது என்ன (2019 Group 4) விகிதம் மற்றும் விகிதாசாரம் a. 30,5 b. 36,6 c. 48,8 d. 24,4 ரீணா மற்றும் உஷாவின் தற்போதைய வயது முறையே 24 வருடங்கள் மற்றும்
36 வருடங்கள் எனில் எட்டு ஆண்டுகளுக்கு முன்பு உஷா மற்றும்
ரீணாவின் வயதுகளின் விகிதம் என்னவாக இருந்திருக்கும்? (2019 Group 4) விகிதம் மற்றும் விகிதாசாரம் a. 7:4 b. 6:5 c. 2:3 d. 4:7 அருணின் தற்போதைய வயது அவருடைய தந்தையின் வயதில் பாதியாகும்.
12 ஆண்டுகளுக்கு முன்பு தந்தையின் வயது அருணின் வயதை போல
மும்மடங்கு இருந்தது தற்போது தந்தையின் வயது ? (2018 Group 4) விகிதம் மற்றும் விகிதாசாரம் a. 24 b. 36 c. 48✔ d. 50

2024 பத்தாம் வகுப்பு தரம்
Exams Date Questions
21-01-2024 5
07-02-2024 5

180 மீ நீளமுள்ள ஒரு பாயினை 15 பெண்கள் 12 நாட்களில் செய்தனர். 512 மீ நீளமுள்ள ஒரு பாயினை 32 பெண்கள் செய்ய ஆகும் நாட்கள் ______ (21-01-2024 TNPSC)
(A) 14 நாட்கள்
(B) 16 நாட்கள்
(C) 18 நாட்கள்
(D) 24 நாட்கள்

280 நபர்கள் ஒரு விமானத்தில் 2 முறை பயணம் செய்கின்றனர் எனில் அவ்விமானத்தில் 1400 நபர்கள் பயணம் செய்யும் முறைகள்? (21-01-2024 TNPSC) விகிதம் மற்றும் விகிதாசாரம்
(A) 8
(B) 10
(C) 9
(D) 12

A மற்றும் B ஆகிய இருவரும் இணைந்து ஒரு வேலையை 12 நாள்களில் முடிப்பர் A தனியே அந்த வேலையை 36 நாள்களில் முடிப்பர் எனில் B தனியே அந்த வேலையை எத்தனை நாள்களில் முடிப்பர்? (21-01-2024 TNPSC)
(A) 18
(B) 24
(C) 36
(D) 48

ஒரு தோட்டத்தை களையெடுக்க 6 தோட்டக்காரர்களுக்கு 120 நிமிடங்கள் தேவைப்படுகின்றன எனில், அதே வேலையை 30 நிமிடங்களில் செய்து முடிக்கக் கூடுதலாக எத்தனை தோட்டக்காரர்கள் தேவை? (21-01-2024 TNPSC) விகிதம் மற்றும் விகிதாசாரம்
(A) 15
(B) 18
(C) 24
(D) 30

ஒரு சூடேற்றி 40 நிமிடங்களில் 3 அலகுகள் மின்சாரத்தைப் பயன்படுத்துகிறது. இரண்டு மணி நேரத்தில் அது பயன்படுத்தும் மின்சார அலகுகளின் எண்ணிக்கை? (07-02-2024 TNPSC)  விகிதம் மற்றும் விகிதாசாரம்
(A) 6 அலகுகள்
(B) 9 அலகுகள்
(C) 10 அலகுகள்
(D) 12 அலகுகள்

81 மாணவர்கள் 448 மீ நீளமுள்ள சுவரில் ஓர் ஓவியத்தை 56 நாள்களில் வண்ணமிடுவர் எனில்,160 மீ நீளமுள்ள அதுபோன்ற ஒரு சுவரில் 27 நாள்களில் அந்த ஓவியத்தை வண்ணமிடும் மாணவர்களின் எண்ணிக்கை? (07-02-2024 TNPSC)
(A) 27
(B) 36
(C) 48
(D) 60

A மற்றும் B ஆகிய இருவரும் இணைந்து ஒரு வேலையை 16 நாட்களில் முடிப்பர். A தனியே அந்த வேலையை 48 நாட்களில் முடிப்பர் எனில் B தனியே அந்த வேலையை எத்தனை நாட்களில் முடிப்பார்? (07-02-2024 TNPSC)
(A) 40 நாட்கள்
(B) 18 நாட்கள்
(C) 24 நாட்கள்
(D) 32 நாட்கள்

A ஆனவர் ஒரு வேலையை 24 நாட்களில் முடிப்பார். B ஆனவர். A ஐவிட 50% கூடுதல் திறன் வாய்ந்தவர் எனில் B ஆனவர் அந்த வேலையை முடிக்க ஆகும் காலம் கணக்கிடுக? (07-02-2024 TNPSC)
(A) 12 நாட்கள்
(B) 16 நாட்கள்
(C) 18 நாட்கள்
(D) 20 நாட்கள்

a:b = 2:3 மற்றும் c:d = 4:7 எனில் a:d = _______ (21-01-2024 TNPSC) விகிதம் மற்றும் விகிதாசாரம்
(A) 8:21
(B) 12:21
(C) 21:8
(D) 21:12

ஒரு வினாடி வினா போட்டியில் X மற்றும் Y வழங்கிய சரியான விடைகளின் எண்ணிக்கையின் விகிதம் 10: 11. அப்போட்டியில் அவர்கள் மொத்தமாக 84 புள்ளிகள் பெற்றனர் எனில், Y பெற்ற புள்ளிகள் எத்தனை? (07-02-2024 TNPSC) விகிதம் மற்றும் விகிதாசாரம்
(A) 40
(B) 44
(C) 46
(D) 82

2023 பத்தாம் வகுப்பு தரம்
Exams Date Questions
05-10-2023 5
2023 Group 3A 6

180 -ன் 10 :8 என்ற விகிதம்? (05-10-2023 TNPSC)  விகிதம் மற்றும் விகிதாசாரம்
(A) 100:80
(B) 50:25
(C) 18:2
(D) 1:8

ஒரு அலுவலகம் 9.00 a.m. மணிக்கு தொடங்கி 5.30 p.m. -க்கு மூடப்படுகிறது. இடையே உணவு இடைவேளை 30-நிமிடங்கள் எனில் உணவு இடைவேளைக்கும் மொத்த அலுவலக நேரத்திற்கும் உள்ள விகிதம்? (05-10-2023 TNPSC)  விகிதம் மற்றும் விகிதாசாரம்
(A) 1:17
(Β) 17:1
(C) 3:18
(D) 2:17

ஒரு புத்தகத்தில் 70 பக்கங்கள் உள்ளன. ஒரு பக்கத்தில் 30 வரிகள் அச்சிடப்படுகின்றது. ஆனால், அதே செய்தியை ஒரு பக்கத்தில் 20 வரிகள் என்று அச்சிடப்பட்டால், அந்த புத்தகத்தில் உள்ள பக்கங்களின் எண்ணிக்கை? (05-10-2023 TNPSC)  விகிதம் மற்றும் விகிதாசாரம்
(A) 210
(B) 105
(B) 140
(D) 60

A என்பவர் ஒரு வேலையை 24 நாள்களில் முடிப்பார். A மற்றும் B ஆகியோர் ஒன்றாக இணைந்து ஒரு வேலையை 6 நாள்களில் முடிப்பர் எனில், B என்பவர் தனியே அந்த வேலையை எத்தனை நாள்களில் முடிப்பார்? (05-10-2023 TNPSC)
(A) 10 நாள்கள்
(B) 8 நாள்கள்
(C) 6 நாள்கள்
(D) 4 நாள்கள்

தச்சர் A ஆனவர் ஒரு நாற்காலியின் பாகங்களைப் பொருத்த 15 நிமிடங்கள் எடுத்துக் கொள்கிறார். அதே வேலையைச் செய்ய தச்சர் B ஆனவர் தச்சர் A எடுத்துக்கொள்ளும் நேரத்தை விட 3 நிமிடங்கள் கூடுதலாக எடுத்துக் கொள்கிறார். இருவரும் இணைந்து வேலைச் செய்து 22 நாற்காலிகளின் பாகங்களைப் பொருத்த எவ்வளவு நேரமாகும் ? (05-10-2023 TNPSC)
(A) 55 நிமிடங்கள்
(B) 120 நிமிடங்கள்
(C) 180 நிமிடங்கள்
(D) 160 நிமிடங்கள்

ஒரு வேலையை ஆகாஷ் 3 நாட்களில் முடிப்பார். அதே வேலையை ராதா முடிக்க 6 நாட்கள் ஆகும். இருவரும் சேர்ந்து செய்தால், அவ்வேலையை எத்தனை நாட்களில் முடிப்பர்? (2023 Group 3A)
(A) 1  
(B) 2
(C) 3  
(D) 4

‘A’ என்பவர் தனியே ஒரு வேலையை 35 நாட்களில் முடிப்பார். ‘B’ ஆனவர், A-ஐ விட 40% கூடுதல் திறன் வாய்ந்தவர் எனில், ‘B’ ஆனவர் அந்த வேலையை எத்தனை நாட்களில் முடிப்பார்? (2023 Group 3A)
(A) 15 நாட்கள்
(B) 25 நாட்கள்
(C) 35 நாட்கள்
(D) 45 நாட்கள்

ஒரு வேலையை 4 மணி நேரத்தில் பாரி செய்கிறார். யுவன் அதே வேலையை 6 மணி நேரத்தில் செய்கிறார் எனில் இருவரும் சேர்ந்து அந்த வேலையைச் செய்து முடிக்க எத்தனை மணி நேரமாகும்? (2023 Group 3A)
(A) 2 மணிகள் 20 நிமிடங்கள்
(B) 2 மணிகள் 40 நிமிடங்கள்
(C) 2 மணிகள் 24 நிமிடங்கள்  
(D) 2 மணிகள் 44 நிமிடங்கள்

15 அட்டைகளின் மொத்த எடை 50 கிராம் எனில், அதே அளவுடைய 2 1/2 கி.கி எடையில் உள்ள அட்டைகளின் எண்ணிக்கை? (2023 Group 3A)  விகிதம் மற்றும் விகிதாசாரம்
(A) 750
(B) 700  
(C) 680  
(D) 720

7:5 ஆனது x: 25-க்கு விகித சமம் எனில் ‘x’ ன் மதிப்பு? (2023 Group 3A)  விகிதம் மற்றும் விகிதாசாரம்
(A) 35
(B) 25
(C) 175  
(D) 125

ஒரு மன்றத்தில் உள்ள மாணவர்கள் மற்றும் மாணவிகளின் விகிதம் 3:2 எனில் பின்வருவனவற்றுள் எது உண்மையான எண்ணிக்கையுள்ள நபர்களைக் குறிக்கின்றது? (2023 Group 3A)  விகிதம் மற்றும் விகிதாசாரம்
(A) 16
(B) 18  
(C) 24  
(D) 25

Post a Comment

3 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
  1. Sir first sum ku ans15 or 16 please explain

    ReplyDelete
  2. Sir class YouTube video attachment illaga sir

    ReplyDelete
  3. 1000 mathsku shortcut solution video podunga brother

    ReplyDelete

Ads Area