Donation

Ads Area

விகிதம் (Ratio) Part -4

41) 180-ன் 10: 8 என்ற விகிதம் (05-10-2023 TNPSC)
a. 100:80✔
b. 50:25
c. 18:2
d. 1:8

42) 1 : 2 என்ற விகிதத்தில் 63 செ.மீ நீளமுள்ள ஒரு கோட்டுத் துண்டு இரண்டாகப் பிரிக்கப்பட்டால் கோட்டுத் துண்டுகளின் நீளங்களைக் காண்க.(6th New Book)
a. 36cm, 27cm
b. 21cm, 42cm✔
c. 27cm, 36cm
d. 42cm, 21cm

43) ரூபனும், கிருஷ்ணனும் ரூ.1250-ஐ 2:3 என்ற விகிதத்தில் பிரித்துக்கொண்டால் ஒவ்வொருவரும் பங்குத் தொகையானது (2019 Group 8)
a. 500, 750✔
b. 550, 700
c. 750, 500
d. 700, 550

44) 24 மீ நீளமுள்ள ஒரு ரிப்பன் 3:2:7 என்ற விகிதத்தில் மூன்று துண்டுகளாக வெட்டப்படுகிறது. ஒவ்வொன்றின் நீளம் (2019 TNPSC), (2019 Group 1, 7)
a. 6மீ, 4மீ, 14மீ✔
b. 9மீ, 8மீ, 7மீ
c. 6மீ, 6மீ, 12மீ
d. 6மீ, 8மீ, 10மீ

45) 63 செமீ நீளமுள்ள ஒரு கோட்டுத் துண்டை 3 : 4 என்ற விகிதத்தில் பிரித்தால் கிடைக்கும் கோட்டுத் துண்டுகளின் நீளங்களைக் காண்க? (6th New Book)  
a. 27 செமீ,  36 செமீ.
b. 36 செமீ,  27 செமீ
c. 27 செமீ,  35 செமீ
d. 24 செமீ,  36 செமீ

46) ₹1600 ஐ A மற்றும் B என்ற இரு நபர்களுக்கு 3 : 5 என்ற விகிதத்தில் பிரித்துக்கொடுத்தால், B இக்குக் கிடைக்கும் தொகை எவ்வளவு? (6th New Book Back) 
(அ) ₹480
(ஆ) ₹800
(இ) ₹1000.
(ஈ) ₹200

47) ரூ. 800 ஐ அன்பு மற்றும் ஹரி என்ற நபர்களுக்கு 2 : 3 என்ற விகிதத்தில் பிரித்து கொடுத்தால் அன்புவிற்கு கிடைக்கும் தொகை என்ன? [2022 TNTET Paper - 1]
(A) 320.
(B) 350
(C) 300
(D) 400

48) கணேசன் என்பவர் ரூ. 800 வைத்துள்ளார் அத்தொகையை 3 : 5 என்ற விகிதத்தில் உமா மற்றும் வேணிக்கு பிரித்து கொடுக்கின்றார். ஒருவர் பெரும் அதிகத் தொகை : [2022 TNTET Paper - 1]
(A) ரூ. 300
(B) ரூ. 100
(C) ரூ. 200
(D) ரூ. 500.

49) 121000 பேர் உள்ள ஒரு கிராமத்தில் ஆண்களும் பெண்களும் 6:5 என்ற விகிதத்தில் உள்ளனர், எனில் ஆண்கள் எத்தனை பேர் அக்கிராமத்தில் உள்ளனர்? (13-05-2023 TNPSC)
a. 55000
b. 66000✔
c. 77000
d. 81000

50) குமரனிடம் ₹ 600 உள்ளது. அதனை விமலா மற்றும் யாழினிக்கு இடையில் 2:3 என்ற விகிதத்தில் பகிர்ந்தளிக்கிறார் எனில் இருவரில் யாருக்கு பணம் அதிகமாகக் கிடைக்கும்? எவ்வளவு?  (20-04-2023 TNPSC)(A) விமலாவிற்கு யாழினியை விட ₹ 240 அதிகம் கிடைக்கும்
(B) யாழினிக்கு விமலாவை விட ₹ 240 அதிகம் கிடைக்கும்
(C) விமலாவிற்கு யாழினியை விட ₹ 120 அதிகம் கிடைக்கும்
(D) யாழினிக்கு விமலாவை விட ₹ 120 அதிகம் கிடைக்கும்✔

51) ஒரு வகுப்பில் உள்ள மாணவ மாணவிகளின் விகிதம் 5:6 மாணவர்களின் எண்ணிக்கை 30 எனில் மாணவிகளின் எண்ணிக்கை என்ன? (2019 TNPSC)
a. 36✔
b. 46
c. 32
d. 42

52) ஒரு உலோகக் கலவையில் தாமிரம் மற்றும் துத்தநாகத்தின் விகிதம் 5:3. அவ்வுலோகக் கலவையில் தாமிரத்தின் எடை 30.5 கிராம் துத்தநாகத்தின் எடை? (15-03-2023 TNPSC)
(A) 15.8 கிராம்
(B) 16.5 கிராம்
(C) 18.3 கிராம்✔
(D) 50.8 கிராம்

53) ஒரு பையில் உள்ள பச்சை, மஞ்சள் மற்றும் கருப்புப் பந்துகளின் விகிதம் 4:3:5 ஆகும். அப்பையில் கருப்புப் பந்துகளின் எண்ணிக்கை 40 எனில், மொத்தப் பந்துகளின் எண்ணிக்கை  (01-05-2023 TNPSC)
(A) 72 பந்துகள்
(B) 84 பந்துகள்
(C) 96 பந்துகள்✔
(D) 108 பந்துகள்

54) ஒரு குடும்பத்தின் வரவுக்கும் செலவுக்கும் இடையே உள்ள விகிதம் 7:6 மற்றும் வரவு ₹21,000 எனில் சேமிப்பு (07-02-2023 TNPSC)
a. ₹6000
b. ₹5000
c. ₹3000✔
d. ₹4000

Shortcut Video


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Ads Area