தனி வட்டி (ஆண்டுகள்) Part 2

16) ஆண்டிற்கு 5% வட்டி வீதத்தில் ஓர் ஆண்டிற்கு ₹500 ஐத் தனிவட்டியாகத் தரும் அசல் எவ்வளவு? (03-05-3023 TNPSC)
a) ₹ 50000 
b) ₹ 30000 
c) ₹ 10000✔
d) ₹ 5000 

17) மீனா என்பவர் 9% வட்டி வீதத்தில் ஓரு வருடத்திற்கு ₹45 வட்டியாக செலுத்துகிறார் எனில் அவர் வாங்கிய தொகை என்ன? (03-05-3023 TNPSC)
a) 1000
b) 1500
c) 500✔
d) 1200

18) பின்வரும் வட்டி வீதத்தில் எது ₹ 2000 அசலுக்கு ஓராண்டுக்கு ₹ 200 ஐ தனிவட்டியாகக் கொடுக்கக்கூடியதாக இருக்கும்? [7th New Book Back] (20-04-2023 TNPSC) (14-03-2023 TNPSC)
a.10%✔
b.20%
c.5%
d.15%

19) குமரவேல் ஒரு குறிப்பிட்டத் தொகைக்கு 10% வட்டி வீதம் 2 ஆண்டுகள் கழித்து ₹ 750 ஐத் தனிவட்டியாகச் செலுத்தினால், அசலைக் காண்க. [08-02-2023 TNPSC], (7th New Book)
a. ₹ 3,250
b. ₹ 3,550
c. ₹ 3,750✔
d. ₹ 3,000

20) ஒரு வங்கியானது சேமிப்பு தொகையாக வைக்கப்பட்ட ₹3,000க்கு 2 ஆண்டுகளுக்கு ₹ 240ஐ தனி வட்டியாக வழங்குகிறது எனில் அவ்வங்கி வழங்கும் வட்டி வீதத்தைக் காண்க. (07-05-2023 TNPSC)
(A) 3%
(B) 4%✔
(C) 5%
(D) 6%

21) ரூ.2000க்கு 2 ஆண்டுக்கு தனி வட்டி ரூ.120 எனில் வட்டி வீதம் எவ்வளவு? (2019 Group 8)
a. 3℅✔
b. 2℅
c. 1℅
d. 5℅

22) பாட்ஷா என்பவர் ஒரு வங்கியிலிருந்து ஒரு குறிப்பிட்ட தனிவட்டி வீதத்தில் ₹ 8,500 ஐக் கடனாகப் பெற்றார். மூன்று ஆண்டுகள் கழித்து அவர் ₹ 11,050 ஐச் செலுத்திக் கடனை அடைத்தார் எனில் வட்டி வீதம் எவ்வளவு? (7th New Book)
a. 10%✔
b. 20%
c. 5%
d. 15%

23) தனிவட்டியின் கீழ் 60 ஆண்டுகளில் 1 ரூபாய், 9 ரூபாய் ஆக மாறுகிறது எனில், ஆண்டு வட்டி வீதம் % யாது? (06/11/2021 TNPSC)
a. 15%
b. 13 1/3%✔
c. 12%
d. 18%

24) ரூ. 4,000 ஆனது 4 ஆண்டுகளில் ரூ. 5,000 ஆகிறது எனில் கணக்கிடப்பட்ட தனிவட்டி விகிதம் யாது? (2013 VAO)
a. 6 1/4%
b. 6 %
c. 5 1/2%
d. 6 2/4%.

25) எத்தனை ஆண்டுகளில் ₹ 5,600 ஆண்டுக்கு 6% தனிவட்டி வீதத்தில் ₹ 6,720 ஆக உயரும். (7th New Book) (07/11/2021 TNPSC) (11-01-2022 TNPSC), [08-01-2022 TNPSC], [22-01-2022 TNPSC] (08-02-2023 TNPSC)
a. 2 ஆண்டுகள்
b. 3 ஆண்டுகள்
c. 3 1/2 ஆண்டுகள்
d. 3 1/3 ஆண்டுகள்✔

26) எத்தனை ஆண்டுகளில் ₹2000 ஆனது ஆண்டுக்கு 10%. தனிவட்டியில் ₹3600 ஆக மாறும்? (29-01-2023 TNPSC)
a) 2 ஆண்டுகள் 
b) 16 ஆண்டுகள்
c) 8 ஆண்டுகள்.
d) 10 ஆண்டுகள்

27) ₹350 என்ற அசலானது 6 ஆண்டுகளில் ₹ 455 கூடுதல் ஆக கிடைக்கப்பெற்றால் அதன் வட்டி வீதம் காண்க. (14-03-2023 TNPSC)
a) 15%
b) 25%
c) 10%
d) 5%.

28) ₹ 5000 ஆனது, 8% வட்டி வீதத்தில் எத்தனை ஆண்டுகளில், ₹5800 ஆக மாறும். (15-03-2023 TNPSC)
a) 2 ஆண்டுகள்.
b) 4 ஆண்டுகள்
c) 3 ஆண்டுகள்
d) 5 ஆண்டுகள்

29) ₹ 6000 அசலானது 4 ஆண்டுகள் தனிவட்டியுடன் சேர்த்து ₹7200 தொகையாக அதிகரிக்கிறது எணில் தனிவட்டிக்கான சதவீதம் (13-05-2023 TNPSC)
a) 4%
b) 4.5%
c) 5%.
d) 5.5%

30) ஓருவர் ₹ 4,500-க்க இரண்டு ஆண்டுகளுக்கு வட்டியாக ₹750 கொடுத்தால் வட்டி வீதம் என்ன? (13-05-2023 TNPSC)
a. 6%
b. 7 1/2%
c. 8 1/3%.
d. 9 1/4%

Shortcut Video


30A) ஒரு ஆண்டிற்கு x% வட்டி விகிதத்தில் x ஆண்டிற்கு கிடைக்கும் தனிவட்டி விகிதம் ஆனது ரூ. x எனில் அசலின் மதிப்பு _______ ஆகும். (2022 Group 2)
a. ரூ. x
b. ரூ. 100/x✔
c. ரூ. (100/x)²
d. ரூ. 100/x²

30B) ₹1,500-க்கு 3 ஆண்டுகளில் இரு வெவ்வேறு இடங்களில் இருந்து. கிடைத்த தனிவட்டிகளின் வித்தியாசம் ₹13.50 எனில் வட்டி வீதங்களின் வித்தியாசம் (2022 Gr4)
(A) 0.1%✔
(B) 0.2%
(C) 0.3%
(D) 0.4%

30C) ரூபாய் 500க்கு 2 ஆண்டுகளில் இரண்டு வங்கிகளின் தனிவட்டிக்கான வித்தியாசம் ரூ. 2.50 எனில் அவ்வங்கிகளின் வட்டி வீதங்ளுக்கு இடையேயான வித்தியாசம் எவ்வளவு? (04/04/2019 TNPSC)
a. 1%
b. 0.5%
c. 2.5%
d. 0.25%✔

Shortcut Video





Post a Comment

4 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.