7th New Book Simple Interest

எடுத்துக்காட்டு 2.24   
₹ 25,000 இக்கு 8% வட்டி வீதம் 3 ஆண்டுகளுக்குத் தனிவட்டி காண்க? ₹ 6,000 

இவற்றை முயல்க
1. அர்ஜுன் ஒரு வங்கியிலிருந்து ஆண்டுக்கு 5% வட்டி வீதம் ₹ 5000 ஐக் கடனாகப் பெற்றார். மூன்று ஆண்டுகளின் முடிவில் அவர் செலுத்த வேண்டிய வட்டியையும் மொத்தத் தொகையையும் காண்க? ₹5,750 
2. சாந்தி ஒரு வங்கியிலிருந்து, ஆண்டுக்கு 12% வட்டி வீதம் ₹ 6,000 ஐ 7 ஆண்டுகளுக்குக் கடனாகப் பெற்றார் எனில், 7 ஆண்டுகள் கழித்து அவர் எவ்வளவு பணத்தைச் செலுத்தினால் கடன் தீரும்? ₹ 11,040 

எடுத்துக்காட்டு 2.25   
குமரவேல் ஒரு குறிப்பிட்டத் தொகைக்கு 10% வட்டி வீதம் 2 ஆண்டுகள் கழித்து ₹ 750 ஐத் தனிவட்டியாகச் செலுத்தினால், அசலைக் காண்க? ₹ 3,750
எடுத்துக்காட்டு 2.26    
எத்தனை ஆண்டுகளில் ₹ 5,600 ஆண்டுக்கு 6% தனிவட்டி வீதத்தில் ₹ 6,720 ஆக உயரும்? 3 ஆண்டுகள்.
எடுத்துக்காட்டு 2.27   
சதீஷ்குமார் என்பவர் ஒரு கடன் வழங்கு நபரிடமிருந்து ₹ 52,000 ஐ ஒரு குறிப்பிட்ட தனிவட்டி வீதத்தில் கடனாகப் பெற்றார். 4 ஆண்டுகள் கழித்து சதீஷ்குமார் ₹ 79,040 ஐ மொத்தத் தொகையாகச் செலுத்தினார் எனில், வட்டி வீதத்தைக் காண்க? 13%
எடுத்துக்காட்டு 2.28    
அசல் ₹ 46,000 ஐ 1 ஆண்டு 9 மாதக் காலத்திற்குப் பிறகு தனிவட்டி மூலம் மொத்தத் தொகையாக ₹ 52,440 ஆக உயர்ந்தது எனில், வட்டி வீதத்தைக் காண்க? 8%
எடுத்துக்காட்டு 2.29 
ஓர் அசல் ஆண்டுக்கு 10% வட்டி வீதத்தில் 5 ஆண்டுகளில் ₹10,050 ஆக உயர்ந்தது எனில், அசலைக் காண்க? 3350

சிந்திக்க
தனிவட்டியில் ஒரு அசல் 10 ஆண்டுகளில் இரு மடங்கானால் அந்த அசல் மும்மடங்காக மாறுவதற்கு அல்லது உயருவதற்கு எத்தனை ஆண்டுகள் ஆகும்? 20 ஆண்டுகள் 

பயிற்சி 2.4 
1. ₹ 35,000 இக்கு ஆண்டுக்கு 9% வட்டி வீதம் இரண்டு ஆண்டுகளுக்குத் தனிவட்டியைக் காண்க? ₹ 6300 
2. அரவிந்த் என்பவர் ₹ 8,000 ஐ, ஆகாஷ் என்பவரிடமிருந்து ஆண்டுக்கு 7% தனிவட்டி வீதம் கடனாகப் பெற்றார். இரண்டு ஆண்டுகளின் முடிவில் அரவிந்த் செலுத்த வேண்டிய தனிவட்டியையும் மொத்தத் தொகையையும் காண்க?  ₹ 1120, ₹ 9120 
3. ஷீலா என்பவர் ஒரு குறிப்பிட்ட அசலுக்கு 4 ஆண்டுகளுக்கு 9.5% வட்டி வீதத்தில் தனிவட்டியாக ₹ 21,280 ஐச் செலுத்தினார் எனில், அசலைக் காண்க? ₹ 56,000
4. பாட்ஷா என்பவர் ஒரு வங்கியிலிருந்து ஒரு குறிப்பிட்ட தனிவட்டி வீதத்தில் ₹ 8,500 ஐக் கடனாகப் பெற்றார். மூன்று ஆண்டுகள் கழித்து அவர்  ₹ 11,050 ஐச் செலுத்திக் கடனை அடைத்தார் எனில் வட்டி வீதம் எவ்வளவு? 10%
5. ஆண்டுக்கு 13% வட்டி வீதத்தில் ஒரு தொகை ₹ 16,500 இலிருந்து எத்தனை ஆண்டுகளில் ₹ 22,935 ஆக உயரும்?  3 ஆண்டுகள்
6. ஆண்டுக்கு 6% வட்டிவீதத்தில் ஒரு தொகை ₹ 17800 இலிருந்து எத்தனை ஆண்டுகளில் ₹ 19936 ஆக உயரும்? 2 ஆண்டுகள் 
7. கடனாக வழங்கப்பட்ட அசல் ₹ 48,000 இக்கு 2 ஆண்டுகள் 3 மாதக் காலத்திற்குப் பின் தனிவட்டி மூலம் பெறப்பட்ட மொத்தத் தொகை  ₹ 55,560 ஆக இருந்தது எனில், வட்டி வீதத்தைக் காண்க?  7%
8. ஒரு தொகையானது 3 ஆண்டுகளில் 12% தனிவட்டி வீதத்தில் தொகை ₹ 17,000 ஆகக் கிடைக்கிறது எனில், அந்தத் தொகையைக் காண்க? ₹ 12500

கொள்குறி வகை வினாக்கள் 
9. ஒரு குறிப்பிட்டக் காலத்திற்கு ₹ 4,500 அசலுக்கு மொத்தத் தொகை ₹ 5,000 கிடைத்தால், அதனுடைய தனிவட்டி 
i) ₹ 500
ii) ₹ 200 
iii) 20%
iv) 15%
விடை : i) ₹ 500 

10. பின்வருவனவற்றில் எது ₹ 1,000 அசலுக்காக ஓராண்டுக்கு 10% என்ற வீதத்தில் தனிவட்டியாகும் 
i) ₹ 200
ii) ₹ 10 
iii) ₹ 100  
iv) ₹ 1,000
விடை : iii) ₹ 100

11. பின்வரும் வட்டி வீதத்தில் எது ₹ 2000 அசலுக்கு ஓராண்டுக்கு ₹ 200 ஐ தனிவட்டியாகக் கொடுக்கக்கூடியதாக இருக்கும்? 
i) 10%
ii) 20% 
iii) 5%
iv) 15%
விடை : i) 10%

பயிற்சி 2.5
11. ஸ்டீபன் என்பவர் தனது வங்கியின் சேமிப்புக் கணக்கில் ₹ 10,000 ஐ 2% தனிவட்டி வீதத்தில் முதலீடு செய்தார் எனில், 4 ஆண்டுகளின் முடிவில் அவர் பெறும் தனிவட்டி எவ்வளவு?  ₹ 800
12. ரியா என்பவர் மகிழுந்து வாங்குவதற்காக ₹ 15,000 ஐ 10% தனிவட்டி என்ற வீதத்தில் கடனாகப் பெற்றார் அவர் ₹ 9,000 ஐக் கடனை முடிக்கும் தருவாயில், வட்டியாகச் செலுத்தினார் எனில், கடனைப் பயன்படுத்திய காலத்தைக் கணக்கிடுக? 6 ஆண்டுகள்
13. ₹ 3,000 அசலுக்கு ஆண்டுக்கு 8% என வழங்கப்படும் தனிவட்டியானது ₹4,000 அசலுக்கு ஆண்டுக்கு 12% என 4 ஆண்டுகளுக்கு வழங்கப்படும் தனிவட்டிக்கு நிகராகும் காலம் என்ன? 8 ஆண்டுகள்
24. ஒரு தொகை ஒரு குறிப்பிட்ட தனிவட்டி வீதத்தில் 2 ஆண்டுகளில் ₹6,200 எனவும், 3 ஆண்டுகளில் ₹6,800 எனவும் உயர்கிறது. எனில் அந்தத் தொகையையும், வட்டி வீதத்தையும் காண்க? 10%
25. கடனாக வழங்கப்பட்ட அசல் ₹46,900 க்கு 2 ஆண்டுகளுக்குப் பின் தனிவட்டி மூலம் பெறப்பட்ட மொத்தத் தொகை ₹53,466 எனில், வட்டி வீதத்தைக் காண்க? 7%
26. அருண் என்பவர் பாலாஜி என்பவருக்கு ₹ 5,000 ஐ 2 ஆண்டுகளுக்கும் சார்லஸ் என்பவருக்கு ₹ 3,000 ஜ 4 ஆண்டுகுளுக்கு ஒரே தனிவட்டி வீதத்தில் வழங்கினார். ஆக மொத்தமாக ₹ 2,200 ஐ வட்டியாக அருள் பெற்றார் எனில், வட்டி வீதத்தைக் காண்க?  10% 
27. ஓர் அசலானது 4 ஆண்டுகளில் இரண்டு மடங்காகிறது எனில், வட்டி வீதத்தைக் காண்க (அசல் : P = ₹100 என வைக்க வேண்டும்)? 25%

Post a Comment

4 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
  1. Ex 2.29 answer Vara la sir.

    ReplyDelete
  2. வணக்கம் அண்ணா. ரொம்ப நன்றி அண்ணா. கணக்கு வீடியோ போல GK க்கும் தெளிவான வீடியோ கொடுங்க அண்ணா. ரொம்ப உதவியா இருக்கும்.

    ReplyDelete
  3. ஓர் அசல் ஆண்டுக்கு 10% வட்டி வீதத்தில் 5 ஆண்டுகளில் ₹10,050 ஆக உயர்ந்தது எனில், அசலைக் காண்க? 3350
    INDHA SUM konjam potu katunga sir

    ReplyDelete