7th சதவீதம் (20 to 35 கணக்குகள்)


Test - 1B
20) 0.005 ஐச் சதவீதமாக மாற்றினால் (7th New Book Back)
a. 0.005 %
b. 5 %
c. 0.5 %✔
d. 0.05 %

21) 4.7 இன் சதவீத வடிவம் [7th New Book Back]
a) 0.47%
b) 4.7%
c) 47%
d) 470%✔

22) ஒரு பள்ளியின் கொடிக் கம்பத்தின் உயரம் 6.75 மீ எனில், அதைச் சதவீதமாக மாற்றுக? (7th New Book)
a. 6.75%
b. 67.5%
c. 675%.
d. 0.675%

23) இரண்டு இரசாயனப் பொருட்களின் எடைகள் 20.34 கிராம் மற்றும் 18.78 கிராம் எனில், அவைகளின் எடையின் வித்தியாசத்தைக் சதவீதத்தில் கூறுக? (7th New Book)
a. 156%✔
b. 1.56%
c. 0.156%
d. 15.6%

24) பின்னம் 23/30 ஐச் சதவீதமாக மாற்றுக? (7th New Book)
a. 76 2/3%✔
b. 76 1/3%
c. 76 1/2%
d. 76

25) ஒரு கணக்கெடுப்பில் ஐந்து பேரில் ஒருவர் ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தின் சோப்பை விரும்புவதாகக் கூறினார். அதனைச் சதவீதமாக மாற்று? (7th New Book)
a. 10%
b. 15%
c. 20%✔
d. 25%

26) தென்றல் தனது வருமானத்தில் 4 இல் ஒரு பங்கைச் சேமித்தால் அதன் சதவீதத்தைக் காண்க. [7th New Book Back]
a. 3/4%
b. 1/4%
c. 25%✔
d. 50%

27) 2 1/4 ஐ சமமான சதவீதங்களாக மாற்றுக
a. 225%✔
b. 250%
c. 9/4%
d. 225

28) ஒரு தேர்தலில் வேட்பாளர் ஒருவர் பெற்ற வாக்குகளின் சதவீதம் 48% ஆகும். அவர் பெற்ற வாக்குகளைப் பின்னமாக வெளிப்படுத்துக. [7th New Book]
a. 12/25✔
b. 25/12
c. 13/25
d. 25/13

29) 142.5% ஐச் தசமமாக மாற்றினால் [7th New Book Back]
a) 1.425✔
b) 0.1425
c) 142.5
d) 14.25

30) ஒரு துணி சலவை செய்யப்படும் போது 0.5% சுருங்குகிறது எனில் இதனை பின்னத்தில் குறிப்பிடுக. (10-12-2023 TNPSC)
a. 1/5
b. 1/20
c. 1/50
d. 1/200✔

31) ஒரு மட்டைப்பந்து ஆட்டக்காரர் 86% ஓட்டங்களைச் சேகரித்தால், அதைத் தசமமாக எழுதுக? (7th New Book)
a. 86
b. 8.6
c. 0.86.
d. 860

32) ஒரு கிராமத்தில் 70.5% மக்கள் கல்வியறிவைப் பெற்றிருந்தனர் எனில், அதைத் தசம எண்ணாக மாற்றுக?
a. 705
b. 70.5
c. 7.05
d. 0.705.

33) 0.07% என்பது [7th New Book Back] (2022 Group 8)
a. 7/10
b. 7/100
c. 7/1000
d. 7/10,000✔

34) 6 1/4% ஐ சமமான பின்ன வடிவத்தில் எழுதுக. (08-05-2023 TNPSC)
a. 1/8
b. 1/12
c. 1/16✔
d. 1/18

35) 0.01 இக்கும் 1% இக்கும் இடையேயுள்ள வித்தியாசம் என்ன? (7th New Book)
a. 0✔
b. 1
c. 0.99
d. -1

Shortcut Video




Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.