காலம் மற்றும் வேலை (மடங்கு)


1. A என்பவர் B என்பவரைக் காட்டிலும் வேலை செய்வதில் மூன்று மடங்கு வேகமானவர். B ஆனவர் ஒரு வேலையை 24 நாட்களில் முடிப்பார் எனில், இருவரும் இணைந்து அந்த வேலையை முடிக்க எத்தனை நாட்கள் எடுத்துக் கொள்வர் எனக் காண்க. (8th New Book), (12-03-2022 TNPSC), [19-06-2022 TNPSC], [2022 TNPSC EO4]
(A) 5 நாட்கள்
(B) 6 நாட்கள்
(C) 8 நாட்கள்
(D) 9 நாட்கள்
Answer (B) 6 நாட்கள்

2. A என்பவர் B ஐப் போல் இரு மடங்கு வேலை செய்பவர். மேலும் அவர்கள் இருவரும் இணைந்து ஒரு வேலையை 24 நாட்களில் முடிப்பார் எனில் A மட்டும் அவ்வேலையை முடிக்க எத்தனை நாட்களாகும்? [08-10-2022 TNPSC]
(A) 36 நாட்கள்
(B) 48 நாட்கள்
(C) 30 நாட்கள்
(D) 32 நாட்கள்
Answer (A) 36 நாட்கள்

3. அமுதா ஒரு சேலையை 18 நாள்களில் நெய்வார், அஞ்சலி, அமுதாவை விட நெய்வதில் இருமடங்கு திறமைசாலி. இருவரும் இணைந்து நெய்தால், அந்தச் சேலையை எத்தனை நாட்களில் நெய்து முடிப்பர்? (8th New book), [2022 TNPSC EO4]
(A) 9 நாட்கள்
(B) 6 நாட்கள்
(C) 5 நாட்கள்
(D) 4 நாட்கள்
Answer (B) 6 நாட்கள்

4. A என்பவர் B ஐப் போல் இரு மடங்கு வேலை செய்பவர் மேலும் A என்பவர் ஒரு வேலையை முடிக்க B-ஐ விட 24 நாட்கள் குறைவாக எடுத்துக் கொள்கிறார் எனில் A மட்டும் அந்த வேலையை எத்தனை நாட்களில் முடிப்பார்?
(A) 24 நாட்கள்
(B) 48 நாட்கள்
(C) 16 நாட்கள்
(D) 21 நாட்கள்
Answer (A) 24 நாட்கள்

5. A ஆனவர் B என்பவரை காட்டிலும் வேலை செய்வதில், 3 மடங்கு வேகமானவர். அவரால் அந்த வேலையை, B எடுத்துக் கொண்ட நேரத்தை விட 24 நாள்கள் குறைவாக எடுத்து முடிக்க முடிகிறது. இருவரும் சேர்ந்து அந்த வேலையை முடிக்க ஆகும் நேரத்தை காண்க? (8th New book) [08-01-2022] [28-05-2022] [24-04-2022] [2022 EO3]
a. 4 நாள்கள்
b. 6 நாள்கள்
c. 9 நாள்கள்
d. 7 நாள்கள்
Answer c. 9 நாள்கள்

6. ஒரு வேலைக்காரராக A என்பவர் B என்பவரைவிட மும்மடங்கு கெட்டிக்காரர் மற்றும் A என்பவர் ஒரு வேலையை முடிக்க B-ஐ விட 10 நாட்கள் குறைவாக எடுத்துக் கொள்கிறார் எனில் B மட்டும் அந்த வேலையை எத்தனை நாட்களில் முடிப்பார்? (21/11/2021)
a. 12 நாட்கள்
b. 15 நாட்கள்
c. 20 நாட்கள்
d. 30 நாட்கள்
Answer b. 15 நாட்கள்


Post a Comment

3 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
  1. Sir 2 question and 3 Rd question answer puriyala sir

    ReplyDelete
  2. supper sir. Thank u so much sir.

    ReplyDelete
  3. A என்பவர் B என்பவரைக் காட்டிலும் வேலை செய்வதில் மூன்று மடங்கு வேகமானவர். B ஆனவர் ஒரு வேலையை 24 நாட்களில் முடிப்பார் எனில், இருவரும் இணைந்து அந்த வேலையை முடிக்க எத்தனை நாட்கள் எடுத்துக் கொள்வர் எனக் காண்க.
    indha sum answer option D dhan sir varudhu

    ReplyDelete