Time & Work New Book

TNPSC GROUP 1, 2/2A, 4 Minnal Vega Kanitham Free Online Test
விடையை தெரிந்து கொள்ள எந்த option சரியோ அதைச் Touch Finger செய்யவும் வாழ்வியல் கணிதம்

1. A என்பவர் ஒரு வேலையை 3 நாள்களிலும் B என்பவர் 6 நாள்களிலும் முடிப்பர் எனில், இருவரும் ஒன்றாகச் சேர்ந்து அந்த வேலையை __________ நாள்களில் முடிப்பர்.

a. 1

b. 2

c. 3

d. 4


2. 5 நபர்கள் 5 வேலைகளை 5 நாள்களில் செய்து முடிப்பர் எனில், 50 நபர்கள் 50 வேலைகளை ________ நாள்களில் செய்து முடிப்பர்.

a. 5

b. 6

c. 7

d. 8


3. A என்பவர் ஒரு வேலையை 24 நாள்களில் முடிப்பார். A மற்றும் B ஆகியோர் ஒன்றாக இணைந்து ஒரு வேலையை 6 நாள்களில் முடிப்பர் எனில், B என்பவர் தனியே அந்த வேலையை ________ நாள்களில் முடிப்பார்.

a. 5

b. 6

c. 7

d. 8


4. A என்பவர் தனியே ஒரு வேலையை 35 நாள்களில் முடிப்பார். B ஆனவர், A ஐ விட 40% கூடுதல் திறன் வாய்ந்தவர் எனில், B ஆனவர் அந்த வேலையை ________ நாள்களில் முடிப்பார்.

a. 23

b. 24

c. 25

d. 26


5. A என்பவர் தனியே ஒரு வேலையை 10 நாள்களிலும் B ஆனவர் தனியே 15 நாள்களிலும் முடிப்பர். அவர்கள் இந்த வேலையை `200000 தொகைக்கு ஒப்புக் கொண்டனர் எனில், A பெறும் தொகை ________ ஆகும்.

a. ₹1,10,000

b. ₹1,20,000

c. ₹1,30,000

d. ₹1,40,000


6. 210 ஆண்கள் நாளொன்றுக்கு 12 மணி நேரம் வேலை செய்து ஒரு வேலையை 18 நாள்களில் முடிப்பர். அதே வேலையை நாளொன்றுக்கு 14 மணி நேரம் வேலை செய்து, 20 நாள்களில் முடிக்க எத்தனை ஆண்கள் தேவை?

a. 160 ஆண்கள்

b. 161 ஆண்கள்

c. 162 ஆண்கள்

d. 163 ஆண்கள்


7. ஒரு சிமிட்டி தொழிற்சாலையானது 36 இயந்திரங்களின் உதவியுடன் 12 நாள்களில் 7000 சிமிட்டி பைகளைத் தயாரிக்கிறது. 24 இயந்திரங்களைப் பயன்படுத்தி 18 நாள்களில் எத்தனை சிமிட்டி பைகளைத் தயாரிக்கலாம்?

a. 5000 சிமிட்டி பைகள்

b. 6000 சிமிட்டி பைகள்

c. 7000 சிமிட்டி பைகள்

d. 8000 சிமிட்டி பைகள்


8. ஒரு சோப்புத் தொழிற்சாலையானது நாளொன்றுக்கு 15 மணி நேரம் வேலை செய்து 6 நாள்களில் 9600 சோப்புகளைத் தயாரிக்கிறது. நாளொன்றுக்கு கூடுதலாக 3 மணி நேரம் வேலை செய்து 14400 சோப்புகள் தயாரிக்க அதற்கு எத்தனை நாள்கள் ஆகும்? =

a. 8 நாள்கள்

b. 8 1/2 நாள்கள்

c. 7 நாள்கள்

d. 7 1/2 நாள்கள்


9. 6 சரக்கு வண்டிகள் 5 நாள்களில் 135 டன்கள் சரக்குகளை இடம் பெயர்க்கின்றன எனில், 1800 டன்கள் சரக்குகளை 4 நாள்களில் இடம் பெயர்க்க எத்தனை சரக்கு வண்டிகள் கூடுதலாகத் தேவை?

a. 2 சரக்கு வண்டிகள்

b. 3 சரக்கு வண்டிகள்

c. 4 சரக்கு வண்டிகள்

d. 5 சரக்கு வண்டிகள்


10. A என்பவர் ஒரு வேலையை 12 மணி நேரத்தில் முடிப்பார். B மற்றும் C அந்த வேலையை 3 மணி நேரத்திலும் A மற்றும் C அந்த வேலையை 6 மணி நேரத்திலும் செய்து முடிப்பர். அதே வேலையை B தனியே எவ்வளவு மணி நேரத்தில் முடிப்பார்?

a. 2 மணிகள்

b. 3 மணிகள்

c. 4 மணிகள்

d. 5 மணிகள்


11. A மற்றும் B ஆகியோர் ஒரு வேலையை 12 நாள்களிலும் B மற்றும் C ஆகியோர் அதை 15 நாள்களிலும் A மற்றும் C ஆகியோர் அதை 20 நாள்களிலும் முடிப்பர். ஒவ்வொருவரும் தனித்தனியே அந்த வேலையை எத்தனை நாள்களில் முடிப்பர்?

a. A- 30 நாள்கள், B -20 நாள்கள், C-60 நாள்கள்

b. A- 20 நாள்கள், B -30 நாள்கள், C-60 நாள்கள்

c.A- 30 நாள்கள், B -60 நாள்கள், C-20 நாள்கள்

d.A- 60 நாள்கள், B -20 நாள்கள், C-30 நாள்கள்


12. தச்சர் A ஆனவர் ஒரு நாற்காலியின் பாகங்களைப் பொருத்த 15 நிமிடங்கள் எடுத்துக் கொள்கிறார். அதே வேலையைச் செய்ய தச்சர் B ஆனவர் தச்சர் A ஐ விட 3 நிமிடங்கள் கூடுதலாக எடுத்துக் கொள்கிறார். இருவரும் இணைந்து வேலைச் செய்து 22 நாற்காலிகளின் பாகங்களைப் பொருத்த எவ்வளவு நேரமாகும்?

a. 180 நிமிடங்கள்

b. 181 நிமிடங்கள்

c. 182 நிமிடங்கள்

d. 183 நிமிடங்கள்


13. A ஆனவர் ஒரு வேலையை 45 நாட்களில் முடிப்பார் அவர் 15 நாட்கள் மட்டும் வேலையைச் செய்கிறார். மீதமுள்ள வேலையை B ஆனவர் 24 நாள்களில் முடிக்கிறார்எனில், அந்த வேலையின் 80% ஐ இருவரும் இணைந்து முடிக்க ஆகும் நேரத்தைக் காண்க.

a. 12 நாள்கள்

b. 14 நாள்கள்

c. 18 நாள்கள்

d. 16 நாள்கள்


14. A என்பவர் B என்பவரைக் காட்டிலும் வேலை செய்வதில் மூன்று மடங்கு வேகமானவர். B ஆனவர் ஒரு வேலையை 24 நாள்களில் முடிப்பார் எனில், இருவரும் இணைந்து அந்த வேலையை முடிக்க எத்தனை நாள்கள் எடுத்துக் கொள்வர் எனக் காண்க.

a. 6 நாள்கள்

b. 7 நாள்கள்

c. 8 நாள்கள்

d. 9 நாள்கள்


15. X, Y மற்றும் Z ஆகியோர் ஒரு வேலையை முறையே 4, 6 மற்றும் 10 நாள்களில் முடிப்பர். X, Y மற்றும் Z ஆகிய மூவரும் ஒன்று சேர்ந்து அந்த வேலையை முடித்தால் அவர்களுக்கு ₹ 31000 வழங்கப்படும் எனில், அவர்கள் தனித்தனியேப் பெறும் பங்குகளைக் காண்க.

a. ₹ 4000

b. ₹ 5000

c. ₹ 6000

d. ₹ 7000


16. A ஆனவர் B என்பவரைக் காட்டிலும் வேலை செய்வதில் 3 மடங்கு வேகமானவர். அவரால் அந்தப் வேலையை, B எடுத்துக் கொண்ட நேரத்தை விட 24 நாள்கள் குறைவாக எடுத்து முடிக்க முடிகிறது. இருவரும் சேர்ந்து அந்த வேலையை முடிக்க ஆகும் நேரத்தை காண்க.

a. 6 நாள்கள்

b. 7 நாள்கள்

c. 8 நாள்கள்

d. 9 நாள்கள்


17. P மற்றும் Q ஆகியோர் ஒரு வேலையை முறையே 20 மற்றும் 30 நாள்களில் முடிப்பர் அவர்கள் இருவரும் ஒன்றாகச் சேர்ந்து வேலையைத் தொடங்கினர். சில நாள்கள் வேலை செய்த பிறகு Q ஆனவர் சென்றுவிடுகிறார். மீதமுள்ள வேலையை P ஆனவர் 5 நாள்களில் முடிக்கிறார் எனில், தொடங்கியதிலிருந்து எத்தனை நாள்களுக்கு பிறகு Q வேலையை விட்டுச் சென்றார்?

a. 6 நாள்கள்

b. 7 நாள்கள்

c. 8 நாள்கள்

d. 9 நாள்கள்


18. A மற்றும் B ஆகிய இருவரும் இணைந்து ஒரு வேலையை 16 நாள்களில் முடிப்பர். A தனியே அந்த வேலையை 48 நாள்களில் முடிப்பர் எனில், B தனியே அந்த வேலையை எத்தனை நாள்களில் முடிப்பார் ?

a. 24 நாள்கள்

b. 25 நாள்கள்.

c. 26 நாள்கள்.

d. 27 நாள்கள்.




Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.