Percentage 100 Questions

TNPSC GROUP 1, 2/2A, 4 Minnal Vega Kanitham Free Online Test
விடையை தெரிந்து கொள்ள எந்த option சரியோ அதைச் Touch Finger செய்யவும்
Tricks 01 சதவிகிதம் (percentage) Life Mathematics 8th New Book

1. 48 என்பது எந்த எண்ணின் 32% ஆகும்? (8th New Book)

a. 110

b. 150

c. 125

d. 130


2. ஓர் எண்ணின் மதிப்பை 25% குறைத்தால் 120 கிடைக்கிறது எனில், அந்த எண்ணைக் காண்க (8th New Book)

a. 120

b. 160

c. 130

d. 150


3. அகிலா ஒரு தேர்வில் 80% மதிப்பெண்களைப் பெற்றாள். அவள் பெற்றது 576 மதிப்பெண்கள எனில், அந்த தேர்வின் மொத்த மதிப்பெண்களைக் காண்க. (8th New Book)

a. 700

b. 710

c. 720

d. 730


4. x இன் 30% என்பது 150 எனில், x இன் மதிப்பு_________ஆகும். (8th New Book)

a. x = 500

b. x = 600

c. x = 800

d. x = 900


5. 20% விலை உயர்விற்குப் பின் ஒரு கிலோ உளுந்தம் பருப்பின் விலை ₹96 எனில், ஒரு கிலோ உளுந்தம் பருப்பின் அசல் விலையைக் காண்க. (8th New Book)

a. 60

b. 70

c. 90

d. 80



6. ஓர் எண்ணை 18% அதிகரித்தால் 236 கிடைக்கிறது எனில், அந்த எண்ணைக் காண்க. (8th New Book)

a. 100

b. 200

c. 300

d. 400


7. ஓர் எண்ணை 20% குறைத்தால் 80 கிடைக்கிறது எனில், அந்த எண்ணைக் காண்க. (8th New Book)

a. 80

b. 90

c. 100

d. 200


8. ஓர் எண்ணானது 25% அதிகரிக்கப்பட்டுப் பிறகு 20% குறைக்கப்படுகிறது எனில், அந்த எண்ணில் ஏற்பட்ட சதவீத மாற்றத்தைக் காண்க. (8th New Book)

a. மாற்றமில்லை

b. 5%

c. 4%

d. 3%


9. x இன் x % என்பது 25 எனில், x என்பது_________ ஆகும். (8th New Book)

a. x = 30

b. x = 25

c. x = 50

d. x = 60


10. 400 இன் 30% மதிப்பின் 25% என்ன? (8th New Book)

a. 30

b. 40

c. 50

d. 60


Tricks 02 சதவிகிதம் (percentage) Life Mathematics 8th New Book

1. 0.5252 என்பது ________% ஆகும். (8th New Book)

a. 52.52%

b. 5.252%

c. 525.2%

d. 0.5252%


2. ஒரு பள்ளியில் உள்ள 1400 மாணவர்களில், 420 பேர் மாணவிகள். பள்ளியிலுள்ள மாணவர்களின் சதவீதம் _________ஆகும். (8th New Book)

a. 50%

b. 60%

c. 80%

d. 70%


3. ₹300000 மதிப்புள்ள ஒரு மகிழுந்தை ₹200000 இக்கு விற்றால், அந்த மகிழுந்தின் விலைக்குறைப்புச் சதவீதத்தைக் காண்க. (8th New Book)

a. 33 2/3%

b. 31 1/3%

c. 32 1/3%

d. 33 1/3%


4. 250 லிட்டரின் 12% என்பது 150 லிட்டரின் ________ இக்குச் சமமாகும். (பயிற்சி 4.1) (8th New Book)

a. 10%

b. 15%

c. 20%

d. 30%


5. ஒரு பள்ளித் தேர்தலில் A, B மற்றும் C ஆகிய மூன்று வேட்பாளர்கள் முறையே 153, 245 மற்றும் 102 வாக்குகளைப் பெற்றனர் எனில், வெற்றியாளர் பெற்ற வாக்குச் சதவீதம்___________ஆகும். (பயிற்சி 4.1) (8th New Book)

a. 48%

b. 49% ..

c. 50%

d. 45%



6. 10000 இன் 25% மதிப்பின் 15% என்பது ___________ஆகும்.(பயிற்சி 4.1) (8th New Book)

a. 375

b. 400

c. 425

d. 475


7. ஓர் எண்ணின் 60% இலிருந்து 60 ஐக் கழித்தால் 60 கிடைக்கும் எனில், அந்த எண்______ஆகும். (பயிற்சி 4.1) (8th New Book)

a. 60

b. 100

c. 150

d. 200


8. 48 இன் 48% = x இன் 64% எனில், x இன் மதிப்பு ___________ ஆகும். (பயிற்சி 4.1) (8th New Book)

a. 64

b. 56

c. 42

d. 36


9. 3 4/7 ன் 63% ஐ காண்

a. 2.25

b. 2.40

c. 2.50

d. 2.75


10. 25-ன் 10% மற்றும் 10-ன் 25% ஆகியவற்றின் கூடுதல்

a. 0.10

b. 0.25

c. 1.0

d. 5.0


Tricks 03 சதவிகிதம் (percentage) (இலாபம் நட்டம்) Life Mathematics 8th New Book

1. இரஞ்சித் ஒரு துணி துவைக்கும் இயந்திரத்தை ₹16150 இக்கு வாங்கினார். மேலும், அதன் போக்குவரத்துச் செலவுக்காக ₹1350 ஐ செலுத்தினார். பிறகு, அதனை அவர் ₹19250 இக்கு விற்றார் எனில், அவரின் இலாபம் அல்லது நட்டச் சதவீதத்தைக் காண்க. (8th New Book)

a. 9%

b. 10%

c. 11%

d. 12%


2. ஓர் எண்ணின் 75% இக்கும் அதே எண்ணின் 60% இக்கும் இடையேயுள்ள வித்தியாசம் 82.5 எனில், அந்த எண்ணின் 20% ஐக் காண்க. (8th New Book)

a. 120

b. 100

c. 130

d. 110


3. மழைக்காலத்தின்போது விற்பனையை அதிகரிக்க கடைக்காரர் ஒருவர் ஒரு மழைச் சட்டையின் விலையை ₹1060 இலிருந்து ₹901 ஆகக் குறைத்தார் எனில், அவர் வழங்கிய தள்ளுபடி சதவீதத்தைக் காண்க. (8th New Book)

a. 10%

b. 15%

c. 25%

d. 20%


4. ஓர் எல்.இ.டி (LED) தொலைக்காட்சியின் விற்பனை விலையானது அதன் அடக்க விலையைப் போன்று 5/4 மடங்கு எனில், இலாபச் சதவீதம் காண்க. (8th New Book)

a. 15%

b. 20%

c. 25%

d. 30%


5. ஒரு பொருளின் அடக்க விலைக்கும், விற்பனை விலைக்கும் இடையிலான விகிதம் 4:5 எனில் லாப சதவிகிதம்

a. 20%

b. 25%

c. 15%

d. 30%



6. ஒரு பொருளின் விற்பனை விலையானது அதன் அடக்க விலையில் 4/3 மடங்கு எனில், வியாபாரத்தில் கிடைக்கும் லாப சதவீதம் 2016 G1

a. 33 1/3%

b. 25 1/4%

c. 20 1/2%

d. 20 1/3%


7. 16 ஸ்ட்ராபெரி (Strawberry) பெட்டிகளின் அடக்க விலையானது 20 ஸ்ட்ராபெரி பெட்டிகளின் விற்பனை விலைக்குச் சமம் எனில், இலாபம் (அ) நட்டம் சதவீதம் காண்க. (8th New Book)

a. 20% இலாபம்

b. 15% நட்டம்

c. 15% இலாபம்

d. 20% நட்டம்


8. 11 பேனாக்களின் அடக்கவிலையானது. 10 பேனாக்களின் விற்பனை விலைக்குச் சமம் எனில் கிடைக்கும் இலாப சதவீதம் (8th (3) old= 10)

a.18%

b.16 2/3%

c.10%

d.15%


9. 20 பொருட்களின் வாங்கிய விலையும் x பொருட்களின் விற்ற விலையும் சமம். இதில் லாப சதவிகிதம் 25% எனில் விற்ற பொருட்களின் எண்ணிக்கையானது (26/06/2019)

a. 25

b. 18

c. 16

d. 15


10. 16 நோட்டு புத்தகங்களின் அடக்க விலை 12 நோட்டு புத்தகங்களின் விற்பனை விலைக்கு சமம். இதன் இலாப சதவிகிதத்தை காண்க (11/02/2019)

a. 24%

b. 33 1/3%

c. 16%

d. 12%


11. 8 பொருட்களின் அடக்கவிலையானது. 10 பொருட்களின் விற்பனை விலைக்குச் சமம் எனில் கிடைக்கும் நஷ்ட சதவீதம் 2012 TET

a. 10%

b. 20%

c. 15%

d. 25%

Tricks 04 சதவிகிதம் (percentage) Life Mathematics 8th New Book

1. இரண்டு தொடர் தள்ளுபடிகளான 20% மற்றும் 25% ஆகியவற்றிக்கு நிகரான ஒரே தள்ளுபடி சதவீதம் _____ ஆகும். (8th New Book)

a. 40%

b. 45%

c. 5%

d. 22.5%


2. ஒரு மெத்தையின் குறித்த விலை ₹7500. இதற்கு இரண்டு தொடர் தள்ளுபடிகள் முறையே 10 % மற்றும் 20 % என வழங்கப்பட்டால், வாடிக்கையாளர்செலுத்த வேண்டியத் தொகையைக் காண்க. (8th New Book)

a. ₹5400

b. ₹5500

c. ₹5600

d. ₹5700


3. தொடர் தள்ளுபடிகள் முறையே 10%, 20% என்றவாறு ஒரு தொலைக்காட்சிப் பெட்டி ரூ. 14,400க்கு விற்கப்பட்டது எனில் அதன் குறித்த விலை என்ன?

a. ரூ. 21,000

b. ரூ. 19,000

c. ரூ. 20,500

d. ரூ. 20,000


5. ஒரு வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டியின் விலை 30% அதிகரித்தால் 40% விற்பனை குறைந்தது எனில் வருவாயில் ஏற்படும் மாற்றத்தை சதவிகிதத்தில் கூறுக (03/03/2019)

a. 10% அதிகம்

b. 10% குறைவு

c. 32% அதிகம்

d. 22% குறைவு



6. ஒரு வியாபாரி ஒரு பொருளை ரூ. 1,200க்கு வாங்கினார். பின்பு அதன் அடக்கவிலைக்கு மேல் 30% உயர்த்தி, குறித்த விலை ஆக்கினார். இதற்கு 20% தள்ளுபடி கொடுத்து விற்றார் எனில், விற்பனை விலை மற்றும் இலாப சதவீதம் காண்க.

a. Rs. 1,560, 6%

b. Rs. 1,428, 4%

c. Rs. 1,248, 4%

d. Rs. 1,650, 6%


7. ஒரு கடைக்காரர் ஒரு பொருளின் அடக்க விலையில் 15% அதிகமாக்கி அதன் குறித்த விலை ஆக்குகிறார். அதில் 15% தள்ளுபடி தந்து விற்பனை செய்கிறார் எனில் கடைக்காரர் அடைந்தது (2021 G1)

a. லாபம்

b. நட்டம்

c. லாபமும் இல்லை நஷ்டமும் இல்லை

d. லாபம் ஆகவும் இருக்கும் நட்டமாகவும் இருக்கும்


8. ஓர் எண்ணானது 25% அதிகரிக்கப்பட்டுப் பிறகு 20% குறைக்கப்படுகிறது எனில், அந்த எண்ணில் ஏற்பட்ட சதவீத மாற்றத்தைக் காண்க. (8th New Book)

a. மாற்றமில்லை

b. 5%

c. 4%

d. 3%


9. ஒரு நபரின் வருமானம் 10% அதிகரிக்கப்பட்டு பிறகு 10% குறைக்கப்படுகிறது எனில், அவருடைய வருமானத்தில் ஏற்படும் மாற்றத்தைக் காண்க.

a. 1%

b. 2%

c. 3%

d. மாற்றமில்லை


10. இரு கை கடிகாரங்கள் ஒவ்வொண்றையும் ரூ 594க்கு விற்றார் இவ்வாறு விற்றதில் ஒன்றில் 10% இலாபமும் 10% நட்டமும் ஏற்பட்டது எனில் மொத்தத்தில் அவருக்கு ஏற்பட்ட சதவீதம் (2018 G2)

a. 4%

b. 3%

c. 2%

d. 1%


11. ஒரு வியாபாரி ஒரு பொருளை ரூ. 1200 வாங்கினார் பின்பு அதனை அடக்க விலைக்கு மேல் 30% குறித்த விலைக்கு 20% தள்ளுபடி கொடுக்கிறார் விற்ற விலையின் லாப சதவீதம் என்ன ? (8th (3) Old Book 18), (10/06/2018)

a. 5%

b. 4 1/2%

c. 4%

d. 6%

Tricks 05 சதவிகிதம் (percentage) Life Mathematics 8th New Book

அடக்க விலை

1. ஒரு புத்தகத்தின் விலை 20% தள்ளுபடி செய்தாலும் ஒரு வியாபாரிக்கு 10% லாபம் கிடைக்கிறது அப்புத்தகத்தின் குறித்தவிலை 440 எனில் அதன் அடக்க விலை யாது? (17/02/2019)

a. 396

b. 320

c. 352

d. 376


2. 20% தள்ளுபடி பின்னரும் வியாபாரிக்கு 10% லாபம் கிடைக்கிறது. குறித்த விலை ரூ. 2200 எனில், அடக்க விலை என்ன? (29/05/2019)

a. 1600

b. 1760

c. 1800

d. 2080


3. ஒரு புத்தகத்தின் விலை 10% தள்ளுபடி செய்தாலும் ஒரு வியாபாரிக்கு 10% லாபம் கிடைக்கிறது அப்புத்தகத்தின் குறித்த விலை ரூ.220 எனில் அதன் அடக்கவிலை (8th(3) old = 17)

a. 180

b. 190

c. 160

d. 170


விற்பனை விலை

4. மிதிவண்டி ஒன்றை ஒரு கடைக்காரர் ₹4275 இக்கு விற்பதால் அவருக்கு 5% நட்டம் ஏற்படுகிறது. 5% இலாபம் பெற வேண்டுமெனில், அவர் மிதிவண்டியை என்ன விலைக்கு விற்க வேண்டும்? (8th New Book) (17/04/2021)

a. ₹4725

b. ₹4726

c. ₹4727

d. ₹4728


5. ஓர் ஒலிப்பெருக்கியை ₹768 இக்கு விற்பதால், ஒரு நபருக்கு 20% நட்டம் ஏற்படுகிறது. 20% இலாபம் கிடைக்க ஒலிப்பெருக்கியை அவர் என்ன விலைக்கு விற்க வேண்டும்? (8th New Book)

a. ₹1151

b. ₹1152

c. ₹1153

d. ₹1154


6. ஒரு கடைக்காரர் தனது வாடிக்கையாளர்களுக்கு 25% தள்ளுபடி தந்தும் 20% லாபம் அடைகிறார் அப்பொருளின் உண்மை விலை 1200 எனில் அப்பொருளுக்கு கடைக்காரர் குறித்த விலை எவ்வளவு (8th Old Book)

a. 1800

b. 1850

c. 1900

d. 1920


Tricks 06 சதவிகிதம் (percentage) Life Mathematics 8th New Book

1. ஒரு பொருளை ₹810 இக்கு விற்பதனால், விற்கும் விலையில் 10% அளவு நட்டம் ஏற்படுகிறது எனில், அந்தப் பொருளின் அடக்க விலையைக் காண்க. (8th New Book)

a. ₹900

b. ₹902

c. ₹903

d. ₹901


2. 16% தள்ளுபடியில், ₹210 இக்கு வாங்கப்பட்ட ஒரு தொப்பியின் குறித்த விலை என்ன? (8th New Book)

a. ₹243

b. ₹176

c. ₹230

d. ₹250


3. ஓர் அலைபேசியானது 20% இலாபத்தில் ₹8400 இக்கு விற்கப்படுகிறது. அந்த அலைபேசியின் அடக்க விலை ______ ஆகும். (8th New Book)

a. ₹5000

b. ₹6000

c. ₹7000

d. ₹8000


4. ₹4500 ஐ குறித்த விலையாகக் கொண்ட ஒரு அரவை இயந்திரமானது தள்ளுபடிக்குப் பின் ₹4140 இக்கு விற்கப்பட்டது. தள்ளுபடிச் சதவீதம்__________ ஆகும். (8th New Book)

a. 8%

b. 9%

c. 10%

d. 7%


5. ஒரு பொருளானது 7 1/2 % நட்டத்தில் ₹555 இக்கு விற்கப்படுகிறது. அந்த பொருளின் அடக்க விலை ________ ஆகும். (8th New Book)

a. ₹400

b. ₹500

c. ₹700

d. ₹600


6. ₹575 மதிப்புடைய ஒரு சட்டைக்கும், ₹325 மதிப்புடைய ஒரு T சட்டைக்கும் 5% சரக்கு மற்றும் சேவை வரி விதிக்கப்படுகிறது எனில், மொத்த இரசீது தொகை ______ ஆகும். (8th New Book)

a. ₹944

b. ₹945

c. ₹946

d. ₹947


7. ஒரு பொருளை ₹810 இக்கு விற்றதால் கிடைத்த இலாபமும் அதே பொருளை ₹530 இக்கு விற்றதால் ஏற்பட்ட நட்டமும் சமம் எனில், அந்தப் பொருளின் அடக்க விலையைக் காண்க. (8th New Book)

a. ₹671

b. ₹673

c. ₹670

d. ₹672


8. லாபம் அல்லது நட்டம் சதவிகிதம் எப்பொழுதும் எதன் மேல் கணக்கிடப்படுகிறது (2018 G4) (8th New Book)

a. விற்பனை விலை

b. அடக்க விலை

c. இலாபம்

d. நட்டம்


9. தள்ளுபடியானது ______________ லிருந்து கழிக்கப்பட்டு விற்பனை விலை பெறப்படுகிறது. (6th(2) New Book page 63)

a. குறித்த விலை

b. அடக்க விலை

c. நட்டம்

d. இலாபம்


10. தள்ளுபடி எப்பொழுதும் ____இன் மீது கணக்கிடப்படுவது ஆகும் (11/10/2018)

a. குறித்த விலை

b. அடக்க விலை

c. விற்பனை விலை

d. வட்டி


11. இலாபமும் இல்லை, நட்டமும் இல்லை எனில் (6th(2) New Book page 63)

a. அடக்க விலை=விற்பனை விலை

b. அடக்க விலை > விற்பனை விலை

c. அடக்க விலை < விற்பனை விலை

d. குறித்த விலை = தள்ளுபடி


12. ________ = குறித்த விலை - தள்ளுபடி (14/10/2018)

a. பட்டியல் விலை

b. அடக்க விலை

c. விற்பனை விலை

d. சந்தை விலை


13. 'கூடுதல் செலவுகள்' எப்போதும் __________ல் அடங்கியுள்ளது. (6th(2) New Book page 63)

a. விற்பனை விலை

b. அடக்க விலை

c. இலாபம்

d. நட்டம்


14. தள்ளுபடி=குறித்த விலை-_______________. (6th(2) New Book page 63)

a. இலாபம்

b. விற்பனை விலை

c. நட்டம்

d. அடக்க விலை


Tricks 07 சதவிகிதம் (percentage) Life Mathematics 7th New Book

7th (3) book (34)

எடுத்துக்காட்டு 2.14
1) ஒரு வகுப்பில் 50 மாணவர்கள் உள்ளனர். ஒரு குறிப்பிட்ட நாளில் 14% பேர் வருகை புரியவில்லை எனில், வருகை புரிந்த மாணவர்களின் எண்ணிக்கையைக் கண்டறியவும். (7th New Book)

a. 50

b. 45

c. 43

d. 40


எடுத்துக்காட்டு 2.15
2) குறள்மதி 20% தள்ளுபடியுடன் ஒரு ரெயின்கோட்டை வாங்கி ₹ 25 ஐச் சேமித்தார் எனில், ரெயின் கோட்டின் அசல் விலை என்ன? (7th New Book)

a. 100

b. 125

c. 150

d. 200


எடுத்துக்காட்டு 2.16
3) ஒரு உலோகக் கலவை 26% தாமிரத்தைக் கொண்டுள்ளது. 260 கிராம் தாமிரத்தைப் பெற எந்த அளவு உலோகக் கலவை தேவைப்படுகிறது? (7th New Book)

a. 3000 கிராம்

b. 2000 கிராம்

c. 1500 கிராம்

d. 1000 கிராம்


எடுத்துக்காட்டு 2.17
4) 1 பங்கு உளுந்து மாவுடன் 4 பங்கு அரிசி கலந்த மாவில், குழல் என்பவரின் தாயார் தோசை தயாரிக்கிறார் எனில், மாவிலிருக்கும் மூலப்பொருள்களைச் சதவீதமாகக் குறிக்கவும். (7th New Book)

a. 80%, 20%

b. 90%, 10%

c. 50%, 50%

d. 85%, 15%


எடுத்துக்காட்டு 2.18
5) ஒரு குடும்பம் பொங்கல் கொண்டாட்டத்திற்காக , வீட்டைச் சுத்தம் செய்வதற்கு வேலையை 1 : 2 : 3 என்ற விகிதத்தில் பகிர்ந்து கொண்டனர் எனில், வேலையின் ஒவ்வொரு பகுதியையும் சதவீதமாக வெளிப்படுத்துங்கள். (7th New Book)

a. 16 2/3%, 33 1/3%, 50%

b. 16 2/3%, 50%, 33 1/3%

c. 50%, 33 1/3%, 16 2/3%

d. 33 1/3%, 16 2/3%, 50%


எடுத்துக்காட்டு 2.12
6) மலர் 25 மீட்டர் துணிச் சுற்றலிருந்து 1.75 மீட்டர் துணியை வாங்கினார் எனில், மலர் வாங்கிய துணியின் அளவைச் சதவீதத்தில் கூறுக. (7th New Book)

a. 6%

b. 7%

c. 8%

d. 5%


7) தென்றல் தனது வருமானத்தில் 4 இல் ஒரு பங்கைச்சேமித்தால் அதன் சதவீதத்தைக் காண்க (7th New Book)

a. 3/4%

b. 1/4%

c. 25%

d. 1%


8) கவின் 25 இக்கு 15 மதிப்பெண்களைப் பெற்றால் அதன் சதவீதம் (7th New Book)

a. 60%

b. 15%

c. 25%

d. 15/25


9) 0.07% என்பது (7th New Book)

a. 7/10

b. 7/100

c. 7/1000

d. 7/10000


10) 2/5% என்பது

a. 1/40

b. 1/125

c. 1/250

d. 1/500


Tricks 08 சதவிகிதம் (percentage) Life Mathematics 7th New Book

7th (3) book (32)

எடுத்துக்காட்டு 2.1
1) 1/5 ஐச் சதவீதமாக எழுதுக.

a. 20%

b. 30%

c. 40%

d. 50%


எடுத்துக்காட்டு 2.2
2) 7/4 ஐச் சதவீதமாக எழுதுக.

a. 150%

b. 175%

c. 125%

d. 170%


எடுத்துக்காட்டு 2.5
3) 60% பின்வரும் சதவீதத்தைப் பின்னங்களாக எழுதவும்.

a. 1/5

b. 3/4

c. 3/5

d. 2/5


4) 3/5% பின்வரும் சதவீதத்தைப் பின்னங்களாக எழுதவும்.

a. 3/100

b. 3/250

c. 1/500

d. 3/500


5) 28 1/3% பின்வரும் சதவீதத்தைப் பின்னங்களாக எழுதவும்.

a. 17/60

b. 17/59

c. 17/50

d. 17/40


எடுத்துக்காட்டு 2.10
6) 0.85 கொடுக்கப்பட்ட தசம எண்களைச் சதவீதமாக மாற்றவும்.

a. 80%

b. 85%

c. 90%

d. 95%


7) 0.05 கொடுக்கப்பட்ட தசம எண்களைச் சதவீதமாக மாற்றவும்.

a. 2%

b. 3%

c. 5%

d. 6%


எடுத்துக்காட்டு 2.3
8) மொத்தமுள்ள 20 மணிகளில், 5 மணிகள் சிவப்பு எனில், சிவப்பு மணியின் சதவீதம் என்ன?

a. 30%

b. 20%

c. 15%

d. 25%


எடுத்துக்காட்டு 2.6
9) ஒரு கணக்கெடுப்பில் ஐந்து பேரில் ஒருவர் ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தின் சோப்பை விரும்புவதாகக் கூறினார். அதனைச் சதவீதமாக மாற்று.

a. 20%

b. 10%

c. 30%

d. 25%


எடுத்துக்காட்டு 2.7
10) ஓர் அரசு உயர்நிலைப்பள்ளியைச் சேர்ந்த 75 மாணவர்கள் 10 ஆம் வகுப்புத் தேர்வில் பங்குபெற்றனர். அவர்களில் 72 பேர் தேர்வில் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது எனில், தேர்ச்சி பெற்ற மாணவர்களின் சதவீதத்தைக் காணவும்.

a. 95%

b. 96%

c. 97%

d. 98%


Tricks 09 சதவிகிதம் (percentage) Life Mathematics 7th New Book

1) இனியன் 5 டசன் முட்டைகளை வாங்கினார். அதில் 6 முட்டைகள் கெட்டுவிட்டால், நல்ல முட்டைகளின் சதவீதத்தைக் காண்க. (7th (3)- 31 New பயிற்சி 2.1)

a. 90%

b. 10%

c. 80%

d. 20%


2) ஒரு தேர்தலில் வேட்பாளர் ஒருவர் பெற்ற வாக்குகளின் சதவீதம் 48% ஆகும். அவர் பெற்ற வாக்குகளைப் பின்னமாக வெளிப்படுத்துக. (7th (3)- 31 New பயிற்சி 2.1)

a. 6/25

b. 12/25

c. 25/12

d. 25/6


3) இரஞ்சித்தின் மாத வருமானம் ₹ 7500. அதில் 25% ஐச் சேமித்தார் எனில், அவர் எவ்வளவு தொகையைச் சேமித்தார் என்பதைக் காண்க. (7th (3)- 31 New பயிற்சி 2.1)

a. 1875

b. 5625

c. 1500

d. 6000


4) ஒரு தண்ணீர்த் தொட்டியின் கொள்ளளவு 50 லிட்டர்கள் ஆகும். தற்போது அதில் 30% தண்ணீர் நிரம்பியுள்ளது எனில், அதில் 50% தண்ணீர் நிறைய இன்னும் எத்தனை லிட்டர்கள் தேவை? (7th (3)- 39 New பயிற்சி 2.3)

a. 15 லிட்டர்கள்

b. 5 லிட்டர்கள்

c. 10 லிட்டர்கள்

d. 50 லிட்டர்கள்


5) ஓர் உயிரியல் வகுப்பு மாணவர்கள் குழு உள்ளூரிலுள்ள ஒரு புல்வெளியில் ஆய்வு செய்தனர்.அவற்றுள் 40 இல் 30 பூக்கள் வற்றாதவை எனில், வற்றாத பூக்களின் சதவீதம் காண்க. (7th (3)- 39 New பயிற்சி 2.3)

a. 25%

b. 50%

c. 60%

d. 75%


6) 5% க்கு 3% ன் விழுக்காடு என்ன

a. 50%

b. 25%

c. 60%

d. 45%


7) 1/3 ஐ 5/9 இன் சதவீதமாக குறிக்கவும்

a. 60%

b. 500/3%

c. 100/3%

d. 90%


8) 12 1/2 என்பது 16 2/3 இல் எத்தனை சதவீதம்?

a. 50%

b. 25%

c. 75%

d. 45%


9) பீட்டர் என்பவர் ஒரு தேர்வில் 280 மதிப்பெண்களைப் பெற்றுத் தோல்வி அடைந்தார். அவர் இன்னும் 20 மதிப்பெண்கள் பெற்றிருந்தால், மொத்த மதிப்பெண்களில் 50% பெற்று வெற்றி பெற்றிருப்பார் எனில், மொத்த மதிப்பெண்களைக் காண்க. (7th (3)- 39 New பயிற்சி 2.3)

a. 300

b. 600

c. 900

d. 2800


10) ஒரு புத்தகக் கடையிலுள்ள 70 பத்திரிகைகளில் 14 பத்திரிகைகள் நகைச்சுவை பத்திரிகைகள் எனில், நகைச்சுவை பத்திரிகைகளின் சதவீதம் காண்க. (7th (3)- 39 New பயிற்சி 2.3)

a. 5%

b. 10%

c. 15%

d. 20%


Tricks 10 சதவிகிதம் (percentage) Life Mathematics 8th New Book

1) ரூ. 50,000 மதிப்புள்ள ஒரு இயந்திரமானது அதன் விலையில் ஒவ்வொரு வருடமும் 8% குறைகிறது எனில் இரண்டு வருடத்திற்குப்பின் அதன் விலை என்ன? (18/04/2021)

a. 40,000

b. 43,220

c. 42,000

d. 42,320


2) ரூ. 50,000 மதிப்புள்ள ஒரு இயந்திரமானது அதன் விலையில் ஒவ்வொரு வருடமும் 10% அதிகரிக்கிறது எனில் இரண்டு வருடத்திற்குப்பின் அதன் விலை என்ன?

a. 60,500

b. 60,220

c. 42,000

d. 42,320


3) இரு சக்கர வாகனம் ஒன்றின் விலை 2 ஆண்டுகளுக்கு முன்பு ரூ. 70,000 ஆக இருந்தது. அதன் மதிப்பு ஆண்டுதோறும் 4% குறைகிறது. அதன் தற்போதைய மதிப்பை காண்க (18/04/2021) (13/01/2021) (8th New Book)

a. 65312

b. 64312

c. 64512

d. 65412


4) இருசக்கர வாகனம் ஒன்றின் விலை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ரூ.60,000 ஆக இருந்தது அதன் மதிப்பு ஆண்டுதோறும் 5% குறைகிறது தற்போது அதன் தற்போது மதிப்பு காண்க. (17/04/2021)

a. 54000

b. 54050

c. 54500

d. 54150


5) ஓர் இயந்திரத்தின் தற்போதைய மதிப்பு ரூ1,62,000 .ஒவ்வொரு ஆண்டுக்கும் இயந்திரத்தின் மதிப்பு 10% குறைகிறது. எனில் இரண்டு ஆண்டுகள் கழித்து இயந்திரத்தின் மதிப்பு என்ன? (2021 G1) (8th New Book)

a. 1,29,600

b. 1,30,600

c. 1,31,600

d. 1,31,220


6) ஒரு வகையான பாக்டீரியா, முதலாவது ஒரு மணி நேரத்தில் 5% வளர்ச்சியும், இரண்டாவது மணி நேரத்தில் 8% வளர்ச்சிக் குன்றியும், மூன்றாவது மணி நேரத்தில் 10% வளர்ச்சியும் அடைகிறது. தொடக்கத்தில் அதன் எண்ணிக்கை 10000 ஆக இருந்தது எனில், மூன்று மணி நேரத்திற்குப் பிறகு அதன் எண்ணிக்கையைக் காண்க. (11/01/2020) (8th New Book)

a. ₹10526

b. ₹10626

c. ₹10726

d. ₹10826


7) 2018-ல் ஒரு நகரத்தின் மக்கள் தொகை 2,25,000, அடுத்த ஆண்டில் அது 12% அதிகரிக்குமானால், 2019ல் மக்கள் தொகையைக் காண்க.

a. 2,52,000

b. 2,50,000

c. 2,47,500

d. 2,52,500


8) ஒரு நகரத்தின் மக்கள் தொகை 176400. வருடத்திற்கு 5% மக்கள் தொகை அதிகரிக்கிறது எனில் 2 ஆண்டுகளுக்குப் பிறகு நகரத்தின் மக்கள் தொகை என்னவாக இருக்கும்?

a. 194781

b. 194681

c. 194581

d. 194481


9) ஒரு கிராமத்தின் மக்கள் தொகை ஒரே சீராக ஒவ்வொரு ஆண்டும் 4 % கூடிக் கொண்டே செல்கிறது. இப்பொழுது அதன் மக்கள் தொகை 32,448 எனில் இரண்டு ஆண்டுகளுக்கு முன் மக்கள்தொகை என்னவாக இருந்திருக்கும்? (2019 G2/G2A)

a. 31424

b. 28868

c. 30000

d. 31242


10) ஒரு இயந்திரத்தின் மதிப்பு ஒவ்வொரு ஆண்டும் 10% குறைகிறது. ஒருவர் இதை வாங்குவதற்கு ₹ 30,000 கொடுத்தார். மூன்று ஆண்டுகளுக்கு பிறகு இதன் மதிப்பு என்ன? (11/01/2020)

a. ₹ 39,830

b. ₹ 21,870

c. ₹ 39,930

d. ₹ 21,970


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.