1➤ ₹ 25,000 இக்கு 8% வட்டி வீதம் 3 ஆண்டுகளுக்குத் தனிவட்டி காண்க.
2➤ அர்ஜுன் ஒரு வங்கியிலிருந்து ஆண்டுக்கு 5% வட்டி வீதம் ₹ 5000 ஐக் கடனாகப் பெற்றார். மூன்று ஆண்டுகளின் முடிவில் அவர் செலுத்த வேண்டிய வட்டியையும் மொத்தத் தொகையையும் காண்க?
3➤ சாந்தி ஒரு வங்கியிலிருந்து, ஆண்டுக்கு 12% வட்டி வீதம் ₹ 6,000 ஐ 7 ஆண்டுகளுக்குக் கடனாகப் பெற்றார் எனில், 7 ஆண்டுகள் கழித்து அவர் எவ்வளவு பணத்தைச் செலுத்தினால் கடன் தீரும்?
4➤ குமரவேல் ஒரு குறிப்பிட்டத் தொகைக்கு 10% வட்டி வீதம் 2 ஆண்டுகள் கழித்து ₹ 750 ஐத் தனிவட்டியாகச் செலுத்தினால், அசலைக் காண்க?
5➤ எத்தனை ஆண்டுகளில் ₹ 5,600 ஆண்டுக்கு 6% தனிவட்டி வீதத்தில் ₹ 6,720 ஆக உயரும்?
6➤ சதீஷ்குமார் என்பவர் ஒரு கடன் வழங்கு நபரிடமிருந்து ₹ 52,000 ஐ ஒரு குறிப்பிட்ட தனிவட்டி வீதத்தில் கடனாகப் பெற்றார். 4 ஆண்டுகள் கழித்து சதீஷ்குமார் ₹ 79,040 ஐ மொத்தத் தொகையாகச் செலுத்தினார் எனில், வட்டி வீதத்தைக் காண்க?
7➤ அசல் ₹ 46,000 ஐ 1 ஆண்டு 9 மாதக் காலத்திற்குப் பிறகு தனிவட்டி மூலம் மொத்தத் தொகையாக ₹ 52,440 ஆக உயர்ந்தது எனில், வட்டி வீதத்தைக் காண்க?
8➤ ஓர் அசல் ஆண்டுக்கு 10% வட்டி வீதத்தில் 5 ஆண்டுகளில் ₹10,050 ஆக உயர்ந்தது எனில், அசலைக் காண்க?
9➤ தனிவட்டியில் ஒரு அசல் 10 ஆண்டுகளில் இரு மடங்கானால் அந்த அசல் மும்மடங்காக மாறுவதற்கு அல்லது உயருவதற்கு எத்தனை ஆண்டுகள் ஆகும்?
10➤ ₹ 35,000 இக்கு ஆண்டுக்கு 9% வட்டி வீதம் இரண்டு ஆண்டுகளுக்குத் தனிவட்டியைக் காண்க?
11➤ அரவிந்த் என்பவர் ₹ 8,000 ஐ, ஆகாஷ் என்பவரிடமிருந்து ஆண்டுக்கு 7% தனிவட்டி வீதம் கடனாகப் பெற்றார். இரண்டு ஆண்டுகளின் முடிவில் அரவிந்த் செலுத்த வேண்டிய தனிவட்டியையும் மொத்தத் தொகையையும் காண்க?
12➤ ஷீலா என்பவர் ஒரு குறிப்பிட்ட அசலுக்கு 4 ஆண்டுகளுக்கு 9.5% வட்டி வீதத்தில் தனிவட்டியாக ₹ 21,280 ஐச் செலுத்தினார் எனில், அசலைக் காண்க?
13➤ பாட்ஷா என்பவர் ஒரு வங்கியிலிருந்து ஒரு குறிப்பிட்ட தனிவட்டி வீதத்தில் ₹ 8,500 ஐக் கடனாகப் பெற்றார். மூன்று ஆண்டுகள் கழித்து அவர் ₹ 11,050 ஐச் செலுத்திக் கடனை அடைத்தார் எனில் வட்டி வீதம் எவ்வளவு?
14➤ ஆண்டுக்கு 13% வட்டி வீதத்தில் ஒரு தொகை ₹ 16,500 இலிருந்து எத்தனை ஆண்டுகளில் ₹ 22,935 ஆக உயரும்?
15➤ ஆண்டுக்கு 6% வட்டிவீதத்தில் ஒரு தொகை ₹ 17800 இலிருந்து எத்தனை ஆண்டுகளில் ₹ 19936 ஆக உயரும்? 2 ஆண்டுகள் ஆண்டுக்கு 6% வட்டிவீதத்தில் ஒரு தொகை ₹ 17800 இலிருந்து எத்தனை ஆண்டுகளில் ₹ 19936 ஆக உயரும்?
16➤ கடனாக வழங்கப்பட்ட அசல் ₹ 48,000 இக்கு 2 ஆண்டுகள் 3 மாதக் காலத்திற்குப் பின் தனிவட்டி மூலம் பெறப்பட்ட மொத்தத் தொகை ₹ 55,560 ஆக இருந்தது எனில், வட்டி வீதத்தைக் காண்க?
17➤ ஒரு தொகையானது 3 ஆண்டுகளில் 12% தனிவட்டி வீதத்தில் தொகை ₹ 17,000 ஆகக் கிடைக்கிறது எனில், அந்தத் தொகையைக் காண்க?
18➤ ஸ்டீபன் என்பவர் தனது வங்கியின் சேமிப்புக் கணக்கில் ₹ 10,000 ஐ 2% தனிவட்டி வீதத்தில் முதலீடு செய்தார் எனில், 4 ஆண்டுகளின் முடிவில் அவர் பெறும் தனிவட்டி எவ்வளவு? ₹ 800 22. ரியா என்பவர் மகிழுந்து வாங்குவதற்காக ₹ 15,000 ஐ 10% தனிவட்டி என்ற வீதத்தில் கடனாகப் பெற்றார் அவர் ₹ 9,000 ஐக் கடனை முடிக்கும் தருவாயில், வட்டியாகச் செலுத்தினார் எனில், கடனைப் பயன்படுத்திய காலத்தைக் கணக்கிடுக?
19➤ ₹ 3,000 அசலுக்கு ஆண்டுக்கு 8% என வழங்கப்படும் தனிவட்டியானது ₹4,000 அசலுக்கு ஆண்டுக்கு 12% என 4 ஆண்டுகளுக்கு வழங்கப்படும் தனிவட்டிக்கு நிகராகும் காலம் என்ன?
20➤ ஒரு தொகை ஒரு குறிப்பிட்ட தனிவட்டி வீதத்தில் 2 ஆண்டுகளில் ₹6,200 எனவும், 3 ஆண்டுகளில் ₹6,800 எனவும் உயர்கிறது. எனில் அந்தத் தொகையையும், வட்டி வீதத்தையும் காண்க?
21➤ கடனாக வழங்கப்பட்ட அசல் ₹46,900 க்கு 2 ஆண்டுகளுக்குப் பின் தனிவட்டி மூலம் பெறப்பட்ட மொத்தத் தொகை ₹53,466 எனில், வட்டி வீதத்தைக் காண்க?
22➤ அருண் என்பவர் பாலாஜி என்பவருக்கு ₹ 5,000 ஐ 2 ஆண்டுகளுக்கும் சார்லஸ் என்பவருக்கு ₹ 3,000 ஜ 4 ஆண்டுகுளுக்கு ஒரே தனிவட்டி வீதத்தில் வழங்கினார். ஆக மொத்தமாக ₹ 2,200 ஐ வட்டியாக அருள் பெற்றார் எனில், வட்டி வீதத்தைக் காண்க?
23➤ ஓர் அசலானது 4 ஆண்டுகளில் இரண்டு மடங்காகிறது எனில், வட்டி வீதத்தைக் காண்க (அசல் : P = ₹100 என வைக்க வேண்டும்)?
1.
ஒரு குறிப்பிட்டக் காலத்திற்கு ₹ 4,500 அசலுக்கு
மொத்தத் தொகை ₹ 5,000 கிடைத்தால், அதனுடைய தனிவட்டி
i)
₹ 500
ii)
₹ 200
iii)
20%
iv)
15%
விடை : i) ₹ 500
2.
பின்வருவனவற்றில் எது ₹ 1,000 அசலுக்காக ஓராண்டுக்கு
10% என்ற வீதத்தில் தனிவட்டியாகும்
i)
₹ 200
ii)
₹ 10
iii)
₹ 100
iv)
₹ 1,000
விடை : iii) ₹ 100
3.
பின்வரும் வட்டி வீதத்தில் எது ₹ 2000 அசலுக்கு
ஓராண்டுக்கு ₹ 200 ஐ தனிவட்டியாகக் கொடுக்கக்கூடியதாக
இருக்கும்?
i)
10%
ii)
20%
iii)
5%
iv)
15%
விடை : i) 10%