நேர் மற்றும் எதிர் விகிதங்கள் 54 Questions Overview


1) 3 புத்தகங்களின் விலை ₹ 90 எனில் 12 புத்தகங்களின் விலை. (7th New Book Back)
a. ₹ 300
b. ₹ 320
c. ₹ 360 ✔
d. ₹ 400
2) 8 ஆப்பிள்களின் விலை ₹56 எனில் 12 ஆப்பிள்களின் விலை ________. (7th New Book)
a. ₹ 84✔
b. ₹ 85
c. ₹ 86
d. ₹ 87
3) மணி 5 கி.கி உருளைக்கிழங்கை ₹ 75 இக்கு வாங்குகிறார் எனில், அவர் ₹105 இக்கு ______ கி.கி உருளைக்கிழங்கை வாங்குவார். (7th New Book)
a. 6
b. 7✔
c. 8
d. 5
4) ஒரு மிதிவண்டி உற்பத்தி செய்யும் நிறுவனம் 35 மிதிவண்டிகளை 5 நாட்களில் உற்பத்தி செய்கிறது எனில், அந்நிறுவனம் 21 நாட்களில் உற்பத்தி செய்யும், மிதிவண்டிகளின் எண்ணிக்கை _________ (7th New Book Back)
a) 150
b) 70
c)100
d) 147✔
5) 280 நபர்கள் ஒரு விமானத்தில் 2 முறை பயணம் செய்கின்றனர் எனில், அவ்விமானத்தில் 1400 நபர்கள் ______ முறை பயணம் செய்யலாம். (03-05-2023) (7th New Book Back)
(A) 8
(B) 9
(C) 10✔
(D) 12
6) 50 நபர்களுக்கு இனிப்பு தயாரிக்க 3கி.கி சர்க்கரை தேவைப்படுகிறது எனில், 150 நபர்களுக்கு இனிப்பு தயாரிக்கத் தேவையான சர்க்கரை யின் அளவு ____. (7th New book Back)
a. 9✔
b. 10
c. 15
d. 6
7) ஒரு சூடேற்றி 40 நிமிடங்களில் 3 அலகுகள் மின்சாரத்தை பயன்படுத்துகிறது. இரண்டு மணி நேரத்தில் எத்தனை அலகுகள் மின்சாரத்தை பயன்படுத்தும்? (6th New Book) [08-10-2022] (03-05-2023)
(A) 9 அலகுகள்✔
(B) 10 அலகுகள்
(C) 11 அலகுகள்
(D) 12 அலகுகள்
8) 24 பென்சில்களை 6 குழந்தைகளுக்குச் சமமாகப் பிரித்துக் கொடுக்கின்றனர். அதே போல்கொடுத்தால் 18 குழந்தைகளுக்குத் தேவையான பென்சில்களின் எண்ணிக்கை எவ்வளவு? (7th New Book)
a. 72✔
b. 82
c. 70
d. 52
9) ஒரு குறிப்பிட்ட வேகத்தில் ஒரு புத்தகத்தை படிக்கும் ஒருவர் 20 பக்கங்களை படிக்க 2 மணி நேரமாகிறது. அவர் அதே வேகத்தில் அதே புத்தகத்தில் 50 பக்கங்களை படிக்க எவ்வளவு நேரமாகும்? [2022 Group 2]
a. 3 மணிநேரம்
b. 4 மணிநேரம்
c. 5 மணிநேரம்✔
d.4.5 மணிநேரம்
10) 12 மாணவர்களுக்குச் சீருடை வழங்க ₹3,000 செலவாகும் எனில் ₹1,250 க்கு பெறும் மாணவர்களின் எண்ணிக்கை? (20-05-2023)
(A) 6 மாணவர்கள்
(B) 8 மாணவர்கள்
(C) 5 மாணவர்கள்✔
(D) 7 மாணவர்கள்
11) அன்பு 2 நோட்டுப் புத்தகங்களை ₹24 இக்கு வாங்கினார். அவர் அதே அளவுள்ள 9 நோட்டுப் புத்தகங்களை வாங்க எவ்வளவு பணம் தேவைப்படும்? (7th New Book)
a. 102
b. 104
c. 108✔
d. 110
12) ஒரு மகிழுந்து 60 கி.மீ தூரத்தைக் கடக்க 3 லிட்டர் பெட்ரோல் தேவைப்படுகிறது. அதே மகிழுந்து 200 கி.மீ தூரத்தைச் சென்றடைய, தேவையான பெட்ரோலின் அளவு _______. (7th New Book)
a. 8 லிட்டர்கள்
b. 9 லிட்டர்கள்
c. 10 லிட்டர்கள்✔
d. 11 லிட்டர்கள்
13) தாமரை வாடகைப் பணமாக ₹7500 ஐ, 3 மாதங்களுக்குச் செலுத்துகிறார் எனில், அதே போல, அவர் ஒரு வருடத்திற்குச் செலுத்த வேண்டிய வாடகைப் பணம் எவ்வளவு? (7th New Book)
a. ₹ 30000✔
b. ₹ 225000
c. ₹ 1875
d. ₹ 25000
14) ஒரு நாளில் 14 தொழிலாளர்கள் 42 அடுக்குகளை அமைகின்றனர். எனில் 23 தொழிலாளர்கள் எத்தனை அடுக்குகளை அமைப்பார்கள்? (TNPSC 10-03-2023) (7th New Book)
(A) 60
(B) 65
(C) 69✔
(D) 68
15) 8 மீ நீளமுள்ள கம்பத்தின் நிழலின் நீளம் 6 மீ அதே நேரத்தில் 30 மீ நிழல் ஏற்படுத்தும் மற்றொரு கம்பத்தின் நீளம் எவ்வளவு? (13-05-2023 TNPSC) (7th New Book)
(A) 50 மீ
(B) 45 மீ
(C) 40 மீ✔
(D) 35 மீ
16) 15 அட்டைகளின் (charts) மொத்த எடை 50 கிராம் எனில், அதே அளவுடைய 2 1/2 கி.கி எடையில் எத்தனை அட்டைகள் (charts) இருக்கும்? (7th New Book)
(A) 675
(B) 625
(C) 750✔
(D) 725
17) பழங்கள் நிறைந்த ஒரு பெட்டியின் எடை 3 1/2 கி.கி எனில், அதே அளவுள்ள 6 பெட்டிகளின் எடை ________. (7th New Book Back)
a. 20கி.கி
b. 21கி.கி✔
c. 22கி.கி
d. 23கி.கி
18) அரை மீட்டர் துணியின் விலை ₹ 15 எனில், 8 1/3 மீ நீளமுள்ள துணியின் விலை எவ்வளவு? (7th New Book)
a. ₹ 212
b. ₹ 220
c. ₹ 250✔
d. ₹ 210
19) ஒரு மகிழுந்து 90 கி.மீ தூரத்தைக் கடக்க எடுத்துக்கொள்ளும் நேரம் 2 மணி 30 நிமிடங்கள். அதே மகிழுந்து 210 கி.மீ தூரத்தைக் கடக்க எடுத்துக்கொள்ளும் நேரம் எவ்வளவு?
a. 5 மணி
b. 5 மணி 30 நிமிடங்கள்
c. 5 மணி 50 நிமிடங்கள்✔
d. 6 மணி 50 நிமிடங்கள்
20) 7 மீ அளவுள்ள துணியின் விலை ₹ 294 எனில் 5 மீ அளவுள்ள துணியின் விலை ______. (7th New Book)
a. ₹ 212
b. ₹ 220
c. ₹ 250
d. ₹ 210✔
21) 6 பழரசப் பாட்டில்களின் விலை ₹210, எனில் 4 பழரசப் பாட்டில்களின் விலை என்ன? (7th New Book)
a. ₹ 140✔
b. ₹ 120
c. ₹ 150
d. ₹ 110
22) ஒரு மரம் வெட்டுபவர்க்கு ஒரு மரத்துண்டை 3 துண்டுகளாக்குவதற்கு 12 நிமிடங்கள் ஆகும் எனில் அதனை 5 துண்டுகளாக்க எவ்வளவு நேரம் தேவை? (06-11-2022)
(A) 12 நிமிடம்
(B) 24 நிமிடம்✔
(C) 30 நிமிடம்
(D) 36 நிமிடம்
23) 10 விவசாயிகள் 21 நாட்களில் ஒரு நிலத்தை உழுது முடிக்கின்றனர் எனில் அதே நிலத்தை 14 விவசாயிகள் எத்தனை நாட்களில் உழுது முடிப்பர்? [2022 Group 4]
(A) 14 நாட்கள்
(B) 15 நாட்கள்✔
(C) 16 நாட்கள்
(D) 17 நாட்கள்
24) 12 மாடுகள் ஒரு வயலை 10 நாட்களில் மேய்கின்றது எனில் 20 மாடுகள் அதே வயலை எத்தனை நாட்களில் மேயும்? [08-01-2022 TNPSC], (24-04-2022 TNPSC) (7th New Book Back)
a. 15
b. 18
c. 6✔
d. 8
25) 8 விவசாயிகள் 18 நாள்களில் நிலத்தை உழுது முடிக்கின்றனர் எனில், அதே நிலத்தை 12 விவசாயிகள் எத்தனை நாள்களில் உழுது முடிப்பர். (14-03-2023 TNPSC)
(A) 22 நாட்கள்
(B) 12 நாட்கள்✔
(C) 10 நாட்கள்
(D) 15 நாட்கள்
26) 60 வேலையாட்கள் ஒரு பருத்தி நூல் உருண்டையை நூற்க 7 நாட்கள் தேவைப்படுகிறது. 42 ஆட்கள் அதே வேலையை முடிக்க எத்தனை நாட்கள் ஆகும்? (22-12-2022 TNPSC)
(A) 11
(B) 15
(C) 12
(D) 10✔
27) 7 ஆட்கள் ஒரு வேலையை 52 நாட்களில் செய்து முடிக்கின்றனர். அதே வேலையை 13 ஆட்கள் எத்தனை நாட்களில் செய்து முடிப்பர்? (11/01/2020 TNPSC) (2015 Group 2)
a. 25 நாட்கள்
b. 28 நாட்கள்✔
c. 20 நாட்கள்
d. 45 நாட்கள்
28) 12 ஆட்கள் ஒரு வேலையை 36 நாட்களில் செய்து முடிக்கின்றனர். அதே வேலையை 18 ஆட்கள் எத்தனை நாள்களில் செய்து முடிப்பார்கள் (2019 Group 2)
a. 16
b. 24✔
c. 26
d. 54
29) 40 வேலையாட்கள் ஒரு செயல்திட்ட வேலையை 8 நாள்களில் முடிப்பார்கள் எனில், அதே வேலையை 4 நாள்களில் முடிக்கத் தேவையான வேலையாட்களின் எண்ணிக்கை (7th New Book Back)
(A) 8
(B) 80 ✔
(C) 20
(D) 40
30) ஒரு பெட்ரோல் தொட்டியை 16 குழாய்கள் 18 நிமிடங்களில் நிரப்புகின்றன. 9 குழாய்கள் அதே தொட்டியை _________ நிமிடங்களில் நிரப்பும் (7th New Book Back)
(A) 8
(B) 32✔
(C) 16
(D) 18
31) 100 ஆட்கள் ஒரு வேலையை 7 நாட்களில் முடிக்கக் கூடும் எனில் அதே வேலையை 35 நாட்களில் முடிக்க எத்தனைப் பேர் தேவைப்படுவர்? (2017 Group 2)
a. 20 ஆட்கள்✔
b. 50 ஆட்கள்
c. 30 ஆட்கள்
d. 25 ஆட்கள்
32) ஒவ்வொரு பக்கத்திலும் 35 வரிகளைக் கொண்ட புத்தகத்தின் மொத்தப் பக்கங்கள் 120 எனில் ஒவ்வொரு பக்கத்திலும் 24 வரிகளாக இருந்தால் அப்புத்தகத்தின் மொத்த பக்கங்கள் எத்தனையாக இருக்கும் (2019 Group 2)
a. 170 பக்கங்கள்
b. 180 பக்கங்கள்
c. 175 பக்கங்கள்✔
d. 185 பக்கங்கள்
33) ஒரு குழி வெட்ட 10 இயந்திரங்கள் 60 நாள்கள் எடுத்துக் கொள்கின்றன. அனைத்து இயந்திரங்களும் ஒரே வேகத்தில் வேலை செய்கின்றன எனில் 30 இயந்திரங்கள் அதே குழியை வெட்ட எத்தனை நாள்களாகும்?
(A) 14 நாட்கள்
(B) 15 நாட்கள்
(C) 16 நாட்கள்
(D) 20 நாட்கள்✔
34) ஒரு பொம்மை உற்பத்தி செய்யும் தொழிற்சாலை 36 இயந்திரங்களைக் கொண்டு 54 நாள்களில் மகிழுந்து பொம்மைகளை உற்பத்தி செய்கிறது. அதே அளவிலான மகிழுந்து பொம்மைகளை 81 நாள்களில் உற்பத்தி செய்ய இயந்திரங்கள் தேவை?
(A) 10
(B) 20
(C) 24✔
(D) 15
35) ஒரு விவசாயியிடம் 144 வாத்துகளுக்குத் 28 நாட்களுக்குத் தேவையான உணவு உள்ளது. அவர் 32 வாத்துகளை விற்றுவிட்டார் எனில், அவரிடம் உள்ள உணவு மீதமுள்ள எத்தனை நாட்களுக்குப் போதுமானதாக இருக்கும்? (7th New Book)
(A) 36 நாட்கள்✔
(B) 42 நாட்கள்
(C) 56 நாட்கள்
(D) 28 நாட்கள்
36) 6 ஆட்கள் ஒரு வேலையை 50 நாட்களில் முடிப்பார்கள் எனில் 10 ஆட்கள் எத்தனை நாட்களில் அந்த வேலையை முடிப்பார்கள்? (2019 TNPSC)
a. 35
b. 45
c. 30✔
d. 40
37) 8 பேர் ஒரு வேலையை 24 நாட்களில் முடித்தால் அதை அதே வேலையை 24 பேர் ______ நாட்களில் முடிப்பார் ? (2019 TNPSC)
a. 8✔
b. 16
c. 12
d. 24
38) ஒரு பெட்டி தக்காளியின் விலை ரூ. 200. வேந்தன் அவரிடம் உள்ள பணத்தில் 13 பெட்டிகளை வாங்கினார். ஒரு பெட்டியின் விலை ரூ. 260 என அதிகரித்தால் அவரிடம் உள்ள பணத்தை வைத்து எத்தனை பெட்டிகள் வாங்க முடியும்? (2022 TNTET Paper - 1) (7th New Book)
(A) 10✔
(B) 20
(C) 30
(D) 15
39) நாற்பது மாணவர்கள் ஒரு விடுதியில் தங்கியுள்ளனர். அவர்களுக்கு 30 நாள்களுக்குத் தேவையான உணவுப் பொருள் சேமித்து வைக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் எண்ணிக்கை இருமடங்காக மாறினால் அவ்வுணவுப் பொருள் அவர்களுக்கு எத்தனை, நாள்களுக்குப் போதுமானதாக இருக்கும்? (7th New Book)
(A) 14 நாட்கள்
(B) 15 நாட்கள்✔
(C) 16 நாட்கள்
(D) 20 நாட்கள்
40) ஒரு தோட்டத்தைக் களையெடுக்க 6 தோட்டக்காரர்களுக்கு 120 நிமிடங்கள் தேவைப்படுகின்றன எனில், அதே வேலையை 30 நிமிடங்களில் செய்து முடிக்கக் கூடுதலாக – எத்தனை தோட்டக்காரர்கள் தேவை? (7th New Book)
a. 24 தோட்டக்காரர்கள்
b. 18 தோட்டக்காரர்கள்✔
c. 19 தோட்டக்காரர்கள்
d. 20 தோட்டக்காரர்கள்
41) 4 தட்டச்சர்கள் ஒரு வேலையை முடிக்க 12 நாட்கள் எடுத்துக் கொள்கின்றனர். மேலும் 2 தட்டச்சர்கள் கூடுதலாக சேர்த்தால், அதே வேலையை ______ நாட்களில் செய்து முடிப்பார். (18/09/2021 TNPSC), (22-12-2022 TNPSC), (7th New Book Back)
a. 7
b. 8✔
c. 9
d. 10
42) 15 ஆண்கள் ஒரு வேலையை முடிக்க 40 நாட்கள் எடுத்துக் கொள்வர் எனில் அவர்களுடன் மேலும் 15 ஆண்கள் சேர்ந்தால். அதே வேலையானது முடிய எத்தனை நாள்கள் ஆகும்? (19-03-2022 TNPSC)
(A) 30 நாட்கள்
(B) 40 நாட்கள்
(C) 25 நாட்கள்
(D) 20 நாட்கள்✔
43) குளிர்பானம் தயாரிக்கும் தொழிற்சாலையில் உள்ள ஓர் இயந்திரம் 600 பாட்டில்களை 5 மணி நேரத்தில் நிரப்புகிறது. எனில் அவ்வியந்திரம், 3 மணி நேரத்தில் நிரப்பும் பாட்டில்களின் எண்ணிக்கை __________ (7th New Book)
A) 300
B) 320
C) 360✔
D) 400
44) ஒரு டசன் (dozen) வாழைப்பழங்களின் விலை ₹ 20 எனில், 48 வாழைப் பழங்களின் விலை என்ன? (7th New Book)
A) 40
B) 60
C) 70
D) 80✔
45) ஒரு மாயாஜாலக் காட்சியைக் கண்டுகளிக்க 21 மாணவர்களுக்கு ₹840 நுழைவுக் கட்டணமாகச் செலுத்தப்பட்டது ₹1,680 ஐ நுழைவுக் கட்டணமாகச் செலுத்தினால் எத்தனை மாணவர்கள் அக்காட்சியைக் காண முடியும்? (7th New Book)
A) 32
B) 42✔
C) 52
D) 41
46) ஒரு உணவு விடுதியின் 3 ஆம் தளத்தில் பிறந்தநாள் விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 120 ஆட்கள் 8 முறை மின்தூக்கி (இயங்கு ஏணி) யில் விழா நடைபெறும் இடத்திற்குச் சென்றனர். மின் தூக்கி, 12 முறை விழா நடைபெறும் இடத்திற்குச் சென்றால் எத்தனை ஆட்கள் அங்குச் சென்றிருப்பர்? (7th New Book)
A) 90
B) 100
C) 180✔
D) 280
47) ஒரு அஞ்சற்காரர் 738 கடிதங்களை 6 மணி நேரத்தில் முகவரிப்படி பிரித்து விடுகிறார் எனில். அவர் 9 மணி நேரத்தில் எத்தனை கடிதங்களைப் பிரிப்பார்? (7th New Book)
A) 1107. ✔
B) 2107
C) 1108
D) 1100
48) 72 புத்தகங்களின் எடை 9 கி.கி எனில், அதே அளவுள்ள 40 புத்தகங்களின் எடை என்ன? (7th New Book)
A) 5 கி.கி✔
B) 5.5 கி.கி
C) 6 கி.கி
D) 6.5 கி.கி
49) ஒரு டசன் (dozen) சோப்புகளின் விலை ₹ 396, எனில், 35 சோப்புகளின் விலை என்ன? (7th New Book)
A) ₹ 1150
B) ₹ 1145
C) ₹ 1115
D) ₹ 1155✔
50) தமிழ்ச்செல்வன் ₹ 5000 ஐ மூன்று மாதத்திற்கு ஒரு முறை வங்கிக்கணக்கில் சேமித்து வருகிறார். அவர் ₹1,50,000 ஐ சேமிக்க எத்தனை வருடங்களாகும்? (7th New Book)
A) 24 மாதங்கள்
B) 48 மாதங்கள்
C) 60 மாதங்கள்
D) 90 மாதங்கள்✔
51) ஒரு பள்ளியில் 45 நிமிடங்களைக் கொண்ட 7 பாட வேளைகள் உள்ளன. அப்பள்ளியில் பாட வேளைகள் 9 ஆக மாறும்போது ஒவ்வொரு பாட வேளையின் கால அளவு எவ்வளவு? (7th New Book)
A) 32 நிமிடங்கள்
B) 35 நிமிடங்கள்✔
C) 28 நிமிடங்கள்
D) 40 நிமிடங்கள்
52) ஒரு நீர்த்தேக்கத் தொட்டியை நிறைப்பதற்கு 6 குழாய்கள் 1 மணி 30 நிமிடம் எடுத்துக்கொள்கின்றன. ஒரு குழாயை அடைத்துவிட்டால் அதே தொட்டியை நிறைக்க எடுத்துக் கொள்ளும் காலம் எவ்வளவு? (7th New Book)
A) 1 மணி 28 நிமிடம்
B) 1 மணி 38 நிமிடம்
C) 1 மணி 48 நிமிடம்✔
D) 1 மணி 58 நிமிடம்
53) நீலவேணி தினந்தோறும் மிதிவண்டியில் பள்ளிக்குச் செல்கிறாள். அவளது சராசரி வேகம் 12 கி.மீ / மணி ஆக இருந்தால், அவள் பள்ளியைச் சென்றடைய 20 நிமிடம் ஆகிறது. அவள் 15 நிமிடத்தில் பள்ளியைச் சென்றடைந்தால் அவளது அதிகரித்த வேகம் எவ்வளவு? (7th New Book)
A) 12 கி.மீ / மணி
B) 14 கி.மீ / மணி
C) 16 கி.மீ / மணி✔
D) 20 கி.மீ / மணி
54) 500 கிராம் எடையுள்ள 8 சிப்பங்களை (Parcels) விரைவு அஞ்சலில் அனுப்பத் தேவையான பணம் மீனாவிடம் உள்ளது. அவளிடம் உள்ள அதே பணத்தில் 40 சிப்பங்களை (Parcels) அவள் அனுப்புகிறாள் எனில், ஒரு சிப்பத்தின் (Parcel) எடை எவ்வளவு இருக்கும்? (7th New Book)
A) 100 கிராம்✔
B) 40 கிராம்
C) 8 கிராம்
D) 500 கிராம்

Post a Comment

1 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.