A) திருவள்ளுவர்
B) திருமூலர்
C) சீத்தலைச் சாத்தனார்
D) திருத்தக்கத் தேவர்
Answer Key
விடை : B) திருமூலர்2. “நான் தனியாக வாழவில்லை ; தமிழோடு வாழ்கிறேன்” எனக் கூறியவர்
A) திரு. வி. கல்யாண சுந்தரனார்
B) தெ. பொ. மீனாட்சி சுந்தரனார்
C) உ. வே. சாமிநாத ஐயர்
D) சி. இலக்குவனார்
Answer Key
விடை : A) திரு. வி. கல்யாண சுந்தரனார்3. சிற்றோடை – பிரித்தெழுதுக.
A) சிற்று + ஓடை
B) சிறுமை + ஓடை
C) சிறு + ஓடை
D) சிற் + ஓடை
Answer Key
விடை : B) சிறுமை + ஓடை‘உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே’ என்ற விதிப்படி ‘சிற்றோடை’ என்றானது.
4. கண்டெடுக்கப்பட்டுள்ளன – பிரித்து எழுதுக.
A) கண்டு + எடுக்கப்பட்டு + உள்ளன
B) கண்டு + எடுக்கப் + பட்டுள்ளன
C) கண்டெடுக்க + பட்டு + உள்ளன
D) கண் + டெடுக்க + பட்டு + உள்ளன
Answer Key
விடை : A) கண்டு + எடுக்கப்பட்டு + உள்ளன5. நெடில்தொடர்க் குற்றியலுகரம் எத்தனை எழுத்துகளைப் பெற்று வரும்?
A) இரண்டு
B) மூன்று
C) நான்கு
D) ஐந்து
Answer Key
விடை : A) இரண்டு6. ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச்சொல் Smart Phone
A) கைப்பேசி
B) சிறிய தொலைபேசி
C) திறன் பேசி
D) அழகான பேசி
Answer Key
விடை : C) திறன் பேசி7. மரவேர் என்பது எவ்வகை புணர்ச்சி?
A) இயல்பு புணர்ச்சி
B) திரிதல் புணர்ச்சி
C) தோன்றல் புணர்ச்சி
D) கெடுதல் புணர்ச்சி
Answer Key
விடை : D) கெடுதல் புணர்ச்சி8. தலைவனை குறிக்கும் ஓரெழுத்து ஒருமொழி
A) கோ
B) தீ
C) ஐ
D) சோ
Answer Key
விடை : C) ஐ9. பாடினாள் – வேர்ச்சொல் தருக.
A) பாடி
B) பாடுதல்
C) பாடு
D) படு
Answer Key
விடை : C) பாடு10. இலக்கணக்குறிப்பு தருக.
எய்தி
A) பெயரெச்சம்
B) வினையெச்சம்
C) பண்புத்தொகை
D) வினைத்தொகை
Answer Key
விடை : B) வினையெச்சம்11. இலக்கணக்குறிப்புத் தருக - சித்திரைத் திங்கள்
A) இருபெயரொட்டுப் பண்புத்தொகை
B) பண்புத்தொகை
C) வினைத்தொகை
D) வேற்றுமைத்தொகை
Answer Key
விடை : A) இருபெயரொட்டுப் பண்புத்தொகை12. தழீஇ – என்பதன் இலக்கணக்குறிப்பு எழுதுக.
A) சொல்லிசையளபெடை
B) ஒற்றள்பெடை
C) இன்னிசையளபெடை
D) இசைநிறையளபெடை
Answer Key
விடை : A) சொல்லிசையளபெடை13. மருதத்திணையின் பறை எது?
A) தொண்டகம்
B) மணமுழா
C) ஏறு கோட்பறை
D) மீன் கோட்பறை
Answer Key
விடை : B) மணமுழா14. இரண்டாம் எழுத்து ஒன்றி வருவது எவ்வகைத் தொடை?
A) மோனைத் தொடை
B) இயைபுத் தொடை
C) எதுகைத் தொடை
D) முரண் தொடை
Answer Key
விடை : C) எதுகைத் தொடை15. அறிவுடையார் ஆவ தறிவார் அறிவிலார்
அஃதறி கல்லா தவர்.
– இக்குறட்பாவில் பயின்றுள்ள அடி மோனையை எழுது.
A) அறிவுடையார் – அறிவிலார்
B) அறிவுடையார் – அஃதறி
C) அறிவிலார் – அஃதறி
D) அறிவுடையார் – ஆவ
Answer Key
விடை : B) அறிவுடையார் – அஃதறி16. “இணையில்லை முப்பாலுக்கு இந்நிலத்தே”
– இது யாருடைய பாராட்டுரை?
A) பாரதிதாசன்
B) பாரதியார்
C) நாமக்கல் கவிஞர்
D) கவிமணி தேசிக விநாயகம்
Answer Key
விடை : A) பாரதிதாசன்17. கீழ்க்காணும் கூற்றுகளில் சரியானவை எவை?
I. வீட்டிற்கு வந்த உறவினர்களை வரவேற்று உபசரித்தல்
II. அறிவில்லாதவர் கூறும் சொற்களை பொறுத்தல்
III. வீட்டிற்கு வந்த உறவினர்களை வரவேற்று உபசரிக்காமல் இருத்தல்
IV. உடல் நலத்தை பேணாதிருத்தல்
சரியான விடையளி :
A) I மற்றும் II சரியானவை
B) I மற்றும் III சரியானவை
C) III மற்றும் IV சரியானவை
D) II மற்றும் IV சரியானவை
Answer Key
விடை : A) I மற்றும் II சரியானவை18. பின்வருவனவற்றுள் தவறானதைத் தேர்வு செய்க.
A) திருமுருகாற்றுப்படையைப் பாடியவர் நக்கீரர்
B) பொருநராற்றுப்படையைப் பாடியவர் கபிலர்
C) சிறுபாணாற்றுப்படையைப் பாடியவர் நல்லூர் நத்தத்தனார்
D) பெரும்பாணாற்றுப்படையைப் பாடியவர் கடியலூர் உருத்திரங்கண்ணனார்
Answer Key
விடை : B) பொருநராற்றுப்படையைப் பாடியவர் கபிலர்19. பின்வருவனவற்றில் பொருந்தாததைத் தேர்வு செய்க.
A) நாலடியாரில் அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் என்ற மூன்று பகுப்புகள் உள்ளன
B) நாலடியாரை இயற்றியவர் நல்லாதனார்
C) நாலடியாரில் 400 வெண்பாக்கள் உள்ளன
D) “நாலும் இரண்டும் சொல்லுக்கு உறுதி” என்பதில் நாலு என்பது நாலடியாரைக் குறிக்கும்
Answer Key
விடை : B) நாலடியாரை இயற்றியவர் நல்லாதனார்20. பொருத்துக :
a) இடர் - 1. நிலவு
b) நாவாய் - 2. துன்பம்
c) இறை - 3. படகு
d) இந்து - 4. தலைவன்
குறியீடுகள் :
a) b) c) d)
A) 2 3 4 1
B) 3 2 1 4
C) 1 4 3 2
D) 4 3 2 1
Answer Key
விடை : A) 2 3 4 121. கம்பராமாயணத்தில் சுந்தரகாண்டம்
A) முதற்காண்டம்
B) ஐந்தாங்காண்டம்
C) ஏழாங்காண்டம்
D) மூன்றாம் காண்டம்
Answer Key
விடை : B) ஐந்தாங்காண்டம்22. அகநானூற்றில் மணிமிடை பவளத்தில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை
A) 100
B) 120
C) 180
D) 130
Answer Key
விடை : C) 18023. நற்றிணையைத் தொகுப்பித்தவர் யார்?
A) பெருந்தேவனார்
B) போதனார்
C) பரணர்
D) பன்னாடு தந்த பாண்டியன் மாறன் வழுதி
Answer Key
விடை : D) பன்னாடு தந்த பாண்டியன் மாறன் வழுதி24. பொருத்துக :
a) செறு - 1. பனையோலைப் பெட்டி
b) வித்து - 2. புதுவருவாய்
c) யாணர் - 3. விதை
d) வட்டி - 4. வயல்
குறியீடுகள் :
a) b) c) d)
A) 4 3 2 1
B) 2 1 4 3
C) 4 2 1 3
D) 3 2 4 1
Answer Key
விடை : A) 4 3 2 125. சிலப்பதிகாரத்திற்கு எவ்வுரையாசிரியரின் உரை நூல் முழுமைக்கும் உள்ளது?
A) இளம்பூரணர்
B) அடியார்க்கு நல்லார்
C) ந. மு. வேங்கடசாமி நாட்டார்
D) அரும்பத உரைக்காரர்
Answer Key
விடை : C) ந. மு. வேங்கடசாமி நாட்டார்26. சேக்கிழாரை “பக்திச் சுவை நனிசொட்டச் சொட்ட பாடிய கவிவலவ” எனப் புகழ்ந்துரைத்தவர்
A) மகா வித்துவான் மீனாட்சி சுந்தரனார்
B) கவிஞர். வெ. இராமலிங்கனார்
C) பெ. சுந்தரனார்
D) ந. மு. வேங்கடசாமி நாட்டார்
Answer Key
விடை : A) மகா வித்துவான் மீனாட்சி சுந்தரனார்27. கூற்று : 1 சேக்கிழாரின் இயற்பெயர் அருண்மொழித்தேவர்
கூற்று : 2 பெரியபுராணத்திற்கு சேக்கிழார் இட்டபெயர் திருத்தொண்டர் புராணம்
சரியான விடையளி :
A) கூற்று 1 மட்டும் சரி
B) கூற்று 2 மட்டும் சரி
C) கூற்று இரண்டும் தவறு
D) கூற்று இரண்டும் சரி
Answer Key
விடை : D) கூற்று இரண்டும் சரி28. கூற்று : 1 உமறுப்புலவர் எட்டயபுரம் கடிகை முத்துப்புலவரின் மாணவர்
கூற்று : 2 உமறுப்புலவரின் மற்றொரு நூல் முதுமொழிக் காஞ்சி
சரியான விடையளி :
A) கூற்று இரண்டும் சரி
B) கூற்று 2 மட்டும் சரி
C) கூற்று 1 மட்டும் சரி
D) கூற்று இரண்டும் தவறு
Answer Key
விடை : C) கூற்று 1 மட்டும் சரி29. “மாதிரத்துறை கேசரிநிகர்முகம்மதுதம்” - பொருள் விளங்குமாறு பிரித்து எழுதுக.
A) பாதிரத் துறைகே சரிநிகர் முகம் மதுதம்
B) மாதி ரத்துறை கேசரிநி கர்முகம் மதுதம்
C) மாதிரத்துறை கேசரிநிகர் முகம்மதுதம்
D) மாதி ரத்துறை கேசரி நிகர்முகம் மதுதம்
Answer Key
விடை : D) மாதி ரத்துறை கேசரி நிகர்முகம் மதுதம்30. குட்டிச் செவியறுத்துக் கூட்டித் தலைகளெல்லாம்
வெட்டிக் களைபறிக்க மேலாய்த்தூர்
– இவ்வரிகளில் ‘குட்டி’ என்னும் சொல் குறிக்கும் பொருள் என்ன?
A) ஆட்டுக்குட்டி
B) பூனைக்குட்டி
C) தலையில் குட்டுதல்
D) பிள்ளைப் பெறல்
Answer Key
விடை : C) தலையில் குட்டுதல்31. “பதிதொறு புயல்பொழி தருமணி பணதரு” இப்பாடல் வரியில் – ‘பணை’ என்னும் சொல்லின் பொருள் தருக.
A) முத்து
B) மரம்
C) மூங்கில்
D) காற்று
Answer Key
விடை : C) மூங்கில்32. கூற்று : 1 தமிழில் தோன்றிய முதல் கலம்பகம் நந்திக்கலம்பகம்
கூற்று : 2 நந்திக்கலம்பகத்தை இயற்றியவர் நந்திவர்மன்
சரியான விடையளி :
A) கூற்று இரண்டும் சரி
B) கூற்று 1 மட்டும் சரி
C) கூற்று 2 மட்டும் சரி
D) கூற்று இரண்டும் தவறு
Answer Key
விடை : B) கூற்று 1 மட்டும் சரி33. ‘கொம்பினை யொத்த மடப்பிடி’ – யார்?
A) சீதை
B) பாஞ்சாலி
C) துச்சலை
D) மந்தாரை
Answer Key
விடை : B) பாஞ்சாலி34. இரட்சணிய யாத்திரிகம் என்பதன் பொருள் யாது?
A) இறைவனை வணங்குவது
B) இறைவனை நோக்கிச் செல்லும் பயணம்
C) இறையடியார்களை வணங்குவது
D) துறவறம் பூணிவது
Answer Key
விடை : B) இறைவனை நோக்கிச் செல்லும் பயணம்35. குலசேகர ஆழ்வார் பிறந்த நாடு எது?
A) பாண்டிய நாடு
B) பல்லவ நாடு
C) சோழ நாடு
D) சேர நாடு
Answer Key
விடை : D) சேர நாடு36. “கன்னல் பொருள் தரும் தமிழே நீ ஓர் பூக்காடு : நானோர் தும்பி !” - என்று தமிழ்க் காதல் கொண்டு வாழ்ந்தவர் யார்?
A) வரதராசனார்
B) பாரதியார்
C) வாணிதாசன்
D) பாரதிதாசன்
Answer Key
விடை : D) பாரதிதாசன்37. உப்புச் சத்தியாகிரகத் தொண்டர்கள் வழிநடைப் பாடலாக பாடக்கூடிய “கத்தியின்றி ரத்தமின்றி யுத்த பொன்று வருகுது” என்ற வழிநடைப் பாடலை இயற்றியவர்
A) மகாகவி பாரதியார்
B) நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கனார்
C) அ. வரதநஞ்சைப்பிள்ளை
D) புரட்சி கவிஞர் பாரதிதாசனார்
Answer Key
விடை : B) நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கனார்38. கவிதைகளில் குறியீட்டியம் (Symbolism) என்ற கவிதை உத்தியைக் கையாண்டவர் யார்?
A) பாப்லோ நெரூடா
B) ஸ்டெஃபான் மல்லார்மே
C) வால்ட் விட்மன்
D) இரசூல் கம்சதோவ்
Answer Key
விடை : B) ஸ்டெஃபான் மல்லார்மே39. “உயிர்த்தெழும் காலத்துக்காக” என்றத் தலைப்பில் யாருடைய கவிதைகள் தொகுக்கப்பட்டுள்ளது?
A) சு. வில்வரத்தினம்
B) கா. சிவத்தம்பி
C) இந்திரன்
D) ந. கருணாநிதி
Answer Key
விடை : A) சு. வில்வரத்தினம்40. காந்தியடிகளால் ‘தென்னாட்டின் ஜான்சிராணி’ என அழைக்கப்பட்டவர் யார்?
A) அஞ்சலையம்மாள்
B) அம்புஜத்தம்மாள்
C) வேலு நாச்சியார்
D) தில்லையாடி வள்ளியம்மை
Answer Key
விடை : A) அஞ்சலையம்மாள்41. பெண்கள் மறுமணத்தை ஆதரித்தவர் யார்?
A) கவிமணி
B) பாரதி
C) பெரியார்
D) திரு. வி. க.
Answer Key
விடை : C) பெரியார்42. கோயில்களில் நான்கு புறங்களிலும் நான்கு கோபுரங்கள் எழுப்பப்பெறும் மரபு யார் காலத்தில் தொடங்கியது?
A) இரண்டாம் குலோத்துங்கன்
B) இராசராசன்
C) விசித்திர சித்தன்
D) இராசேந்திரன்
Answer Key
விடை : A) இரண்டாம் குலோத்துங்கன்43. தமிழ்நாட்டின் மாநில மரம் எது?
A) தென்னை மரம்
B) பனை மரம்
C) ஆலமரம்
D) மாமரம்
Answer Key
விடை : B) பனை மரம்44. தமிழ்மொழியை “உயர்தனிச்செம்மொழி” என முதன் முதலில் நிலைநாட்டிய தமிழ் அறிஞர்
A) பரிதிமாற் கலைஞர்
B) மறைமலையடிகள்
C) ரா. பி. சேதுப்பிள்ளை
D) திரு. வி. க
Answer Key
விடை : A) பரிதிமாற் கலைஞர்45. பரிதிமாற் கலைஞர், ‘வசனநடை கைவந்த வல்லாளர்’ என யாரைப் பாராட்டுகிறார்?
A) ரா. பி. சேதுப்பிள்ளை
B) வையாபுரிப் பிள்ளை
C) ஆறுமுக நாவலர்
D) ந. மு. வேங்கடசாமி நாட்டார்
Answer Key
விடை : C) ஆறுமுக நாவலர்46. ஒரு நாளில் பதினெட்டு மணிநேரத்தைக் கல்வி கற்பதற்காகவே செலவழித்தவர் யார்?
A) அண்ணல் காந்தியடிகள்
B) அண்ணல் அம்பேத்கர்
C) அருணாசலக்கவிராயர்
D) ஆபிரகாம் பண்டிதர்
Answer Key
விடை : B) அண்ணல் அம்பேத்கர்47. காமராசர் முதல் அமைச்சராகப் பதவி ஏற்ற ஆண்டு எது?
A) 1954
B) 1955
C) 1956
D) 1964
Answer Key
விடை : A) 195448. தமிழகத்தில் இன்று காணப்பெறும் குடைவரைக் கோயில்களுள் பழைமையானது எவ்வூரில் உள்ளது?
A) கோவில்பட்டி
B) பிள்ளையார்ப்பட்டி
C) ஆண்டிப்பட்டி
D) உசிலம்பட்டி
Answer Key
விடை : B) பிள்ளையார்ப்பட்டி49. உலகம் முழுவதும் வாழும் தமிழர்களின் எண்ணிக்கை எத்தனை?
A) ஆறு கோடிப்பேர்
B) ஏழு கோடிப்பேர்
C) எட்டுக் கோடிப்பேர்
D) ஒன்பதுக் கோடிப்பேர்
Answer Key
விடை : C) எட்டுக் கோடிப்பேர்50. பொருத்துக :
a) சிறுபஞ்சமூலம் - 1. காப்பிய இலக்கியம்
b) குடும்ப விளக்கு - 2. சங்க இலக்கியம்
c) சீவகசிந்தாமணி - 3. அற இலக்கியம்
d) குறுந்தொகை - 4. தற்கால இலக்கியம்
குறியீடுகள் :
a) b) c) d)
A) 3 4 1 2
B) 2 3 1 4
C) 3 1 4 2
D) 4 1 2 3
Answer Key
விடை : A) 3 4 1 251. பொருத்துக :
a) ஐகாரக் குறுக்கம் - 1. கஃறீது
b) ஔகாரக் குறுக்கம் - 2. மருண்ம்
c) மகரக் குறுக்கம் - 3. தலைவன்
d) ஆய்தக் குறுக்கம் - 4. வௌவால்
குறியீடுகள் :
a) b) c) d)
A) 3 4 2 1
B) 4 3 1 2
C) 2 1 4 3
D) 4 2 3 1
Answer Key
விடை : A) 3 4 2 152. மரபுப் பிழையைக் கண்டறிந்து பொருத்துக :
a) காகம் - 1. கூவும்
b) குதிரை - 2. கரையும்
c) நரி - 3. கனைக்கும்
d) குயில் - 4. ஊளையிடும்
குறியீடுகள் :
a) b) c) d)
A) 2 3 4 1
B) 1 3 4 2
C) 4 1 2 3
D) 3 2 4 1
Answer Key
விடை : A) 2 3 4 153. பொருந்தாத சொல்லைக் கண்டறிக.
A) சேர்ப்பன்
B) சேர்த்தியர்
C) பரதர்
D) பரத்தியர்
Answer Key
விடை : B) சேர்த்தியர்54. ஒருமை பன்மை பிழையற்ற தொடர் எது?
A) அவன் கவிஞன் அல்ல
B) அவன் கவிஞன் அன்று
C) அவன் கவிஞன் அல்லன்
D) கவிஞன் அல்ல அவன்
Answer Key
விடை : C) அவன் கவிஞன் அல்லன்55. மரபுத் தொடரின் பொருளறிக.
ஏட்டுச் சுரைக்காய் கறிக்குதவாது
A) இல்லாத ஒன்று
B) சுரைக்காயை சமைக்க முடியாது
C) பட்டறி வில்லாத படிப்பறிவு
D) பயனின்றி இருத்தல்
Answer Key
விடை : C) பட்டறி வில்லாத படிப்பறிவு56. அப்பிசி மாசம் அடமள இம்பாங்க என்ற தொடரில் கொச்சைச் சொற்களைத் திருத்தி எழுதுக.
A) அப்பிசி மாதம் அடமழை இம்பாங்க
B) ஐப்பசி மாசம் அடமழை என்பாங்க
C) ஐப்பசி மாதம் அடைமழை என்பார்கள்
D) அய்ப்பசி மாதம் அடைமழை இன்பார்கள்
Answer Key
விடை : C) ஐப்பசி மாதம் அடைமழை என்பார்கள்57. படி என்ற அடிச் சொல்லில் இருந்து வினையாலணையும் பெயரை உருவாக்கு.
A) படித்து
B) படித்தல்
C) படித்த
D) படித்தவர்
Answer Key
விடை : D) படித்தவர்58. அகர வரிசையில் எழுதுக - வெகுளாமை, வேப்பிலை, வீடுபேறு, வாழ்க்கை, வையம்
A) வையம், வாழ்க்கை, வீடுபேறு, வெகுளாமை, வேப்பிலை
B) வாழ்க்கை, வீடுபேறு, வெகுளாமை, வேப்பிலை, வையம்
C) வீடுபேறு, வெகுளாமை, வையம், வேப்பிலை, வாழ்க்கை
D) வெகுளாமை, வீடுபேறு, வேப்பிலை, வையம், வாழ்க்கை
Answer Key
விடை : B) வாழ்க்கை, வீடுபேறு, வெகுளாமை, வேப்பிலை, வையம்59. சீர்களை முறைப்படுத்தி எழுதுக - பற்றற்றான் பற்று விடற்கு பற்றினை பற்றுக அப்பற்றை பற்றுக
A) பற்றுக பற்று விடற்கு அப்பற்றைப் பற்றுக பற்றற்றான் பற்றினை
B) பற்றற்றான் பற்றினை அப்பற்றைப் பற்றுக பற்று விடற்கு பற்றுக
C) பற்றுக விடற்கு பற்று அப்பற்றைப் பற்றுக பற்றினை பற்றற்றான்
D) பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப் பற்றுக பற்று விடற்கு
Answer Key
விடை : D) பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப் பற்றுக பற்று விடற்கு60. பொருத்துக :
a) இடுகுறிப் பொதுப் பெயர் - 1. மரங்கொத்தி
b) இடுகுறிச் சிறப்புப் பெயர் - 2. பறவை
c) காரணப் பொதுப் பெயர் - 3. காடு
d) காரணச் சிறப்பு பெயர் - 4. பனை
குறியீடுகள் :
a) b) c) d)
A) 4 3 2 1
B) 4 2 3 1
C) 3 4 2 1
D) 3 4 1 2
Answer Key
விடை : C) 3 4 2 161. முல்லைத் திணையின் தெய்வம் எது?
A) முருகன்
B) வருணன்
C) இந்திரன்
D) திருமால்
Answer Key
விடை : D) திருமால்62. தேன்மொழி பொன்னியிடம், “நான், நாளை மதுரைக்குச் செல்வேன்” என்றாள். – எவ்வகைத் தொடர் என்று கண்டறிக.
A) நேர்க்கூற்றுத் தொடர்
B) அயற்கூற்றுத் தொடர்
C) உடன்பாட்டுத் தொடர்
D) எதிர்மறைத் தொடர்
Answer Key
விடை : A) நேர்க்கூற்றுத் தொடர்63. பிறவினைத் தொடராக மாற்றுக. - கலைச்செல்வி திருக்குறள் கற்றாள்
A) திருக்குறள் கலைச்செல்வியால் கற்கப்பட்டது
B) கலைச்செல்வி திருக்குறள் கற்பித்தாள்
C) கலைச்செல்வி திருக்குறளை கற்கிறாள்
D) கலைச்செல்வி திருக்குறள் பயின்றாள்
Answer Key
விடை : B) கலைச்செல்வி திருக்குறள் கற்பித்தாள்64. ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் பேரறிவாளன் திரு.
அடிக்கோடிட்ட உவமைக்கு பொருள் தருக.
A) ஊருணி நீர் குறைதல் போல
B) ஊருணி நீர் சுடுதல் போல
C) ஊருணி நீர் கெடுதல் போல
D) ஊருணி நீர் நிறைதல் போல
Answer Key
விடை : D) ஊருணி நீர் நிறைதல் போல65. தாளாற்றித் தந்த பொருளெல்லாம் தக்கார்க்கு
வேளாண்மை செய்தல் பொருட்டு
– இக்குறட்பாவில் ‘வேளாண்மை’ என்றச் சொல்லின் பொருள்
A) பயிர்த்தொழில்
B) உதவி செய்தல்
C) முயற்சி செய்தல்
D) பயிற்சி அளித்தல்
Answer Key
விடை : B) உதவி செய்தல்66. அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு
– எனும் குறளில் என்பு – என்பது எதைக் குறிக்கிறது?
A) கண்கள்
B) இருவகைகள்
C) ஐம்பொறிகள்
D) எலும்பு
Answer Key
விடை : D) எலும்பு67. ‘வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து
வான்புகழ் கொண்ட தமிழ்நாடு’ – என்ற தொடரை எழுதியவர் யார்?
A) பாரதியார்
B) பாரதிதாசன்
C) கவிமணி
D) சுரதா
Answer Key
விடை : A) பாரதியார்68. வனப்பு என்னும் சொல்லின் பொருள்
A) அழகு
B) அறிவு
C) வளமை
D) எளிமை
Answer Key
விடை : A) அழகு69. “அடல்வேல் ஆடவர்க் கன்றியும் அவ்வில்
மடவரல் மகளிர்க்கும் மறம்மிகுத் தன்று”
என்ற பாடல் உணர்த்தும் துறை எது?
A) பொருண் மொழிக்காஞ்சி
B) முதுமொழிக்காஞ்சி
C) மூதின் முல்லை
D) முதுமொழி மாலை
Answer Key
விடை : C) மூதின் முல்லை70. “உறுமிடத்து உதவாது உவர்நிலம்
ஊட்டியும்” – இடம்பெற்ற பாடலடி அமைந்த நூல் எது?
A) அகநானூறு
B) ஐங்குறுநூறு
C) புறநானூறு
D) திணைமாலை ஐம்பது
Answer Key
விடை : C) புறநானூறு71. நற்றிணையின் பேரெல்லை 12 அடியாக இருப்பினும் விதி விலக்காக 13 அடி கொண்ட பாடலை எழுதியது யார்?
A) கபிலர்
B) நக்கீரர்
C) மாறனார்
D) போதனார்
Answer Key
விடை : D) போதனார்72. கடுமாப் பார்க்கும் கல்லா ஒருவற்கும்
உண்பது நாழி உடுப்பவை இரண்டே
பிறவும் எல்லம், ஓர்ஓக் கும்மே”
– இப் பாடலடிகள் இடம் பெற்ற நூல்
A) குறுந்தொகை
B) நற்றிணை
C) புறநானூறு
D) அகநானூறு
Answer Key
விடை : C) புறநானூறு73. தேனிலே ஊறிய செந்தமிழின் – சுவை
தேரும் சிலப்பதிகாரம் என்று பாராட்டியவர்
A) பாரதிதாசன்
B) பாரதியார்
C) சுரதா
D) கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை
Answer Key
விடை : D) கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை74. அப்பூதியடிகள் களவு _______ , _______ , _______ நீக்கியவர்.
A) இல்லாமை, கொல்லாமை, புல்லாமை
B) பொய், காமம், சினம்
C) குற்றம், சீற்றம், பொய்
D) அழுக்காறு, அவா, வெகுளி
Answer Key
விடை : B) பொய், காமம், சினம்75. சிந்தாமணியே என்று அழைக்கப்பட்டவர்
A) நபுலன்
B) சீதத்தன்
C) சீவகன்
D) கலுழவேகன்
Answer Key
விடை : C) சீவகன்76. பின்வருவனவற்றுள் பொருந்தாததைத் தேர்வு செய்க.
A) இரட்டைக் காப்பியங்களுள் ஒன்று சிலப்பதிகாரம்
B) சிலப்பதிகாரம் ஒரு சமணக்காப்பியம்
C) தமிழில் தோன்றிய முதற்காப்பியம் சிலப்பதிகாரம்
D) சிலப்பதிகாரத்தை இயற்றியவர் சீத்தலைச் சாத்தனார்
Answer Key
விடை : (*)77. முக்கூடற்பள்ளு நூலின் ஆசிரியர் பெயர் _____
A) கபிலர்
B) பரணர்
C) நக்கீரர்
D) பெயர் தெரியவில்லை
Answer Key
விடை : D) பெயர் தெரியவில்லை78. “மதோன்மத்தர்” என அழைக்கப்படுபவர் யார்?
A) பெருமாள்
B) திருமால்
C) இயேசு
D) சிவபெருமாள்
Answer Key
விடை : D) சிவபெருமாள்79. ‘முக்கூடற்பள்ளு’ இலக்கியத்தை நாடகவடிவில் இயற்றியவர் யார்?
A) கன்னாயினாப் புலவர்
B) எண்ணாயினாப் புலவர்
C) கண்ணாயினாப் புலவர்
D) என்னயினாப் புலவர்
Answer Key
விடை : D) என்னயினாப் புலவர்80. பிரபந்தம் என்னும் வடச் சொல் உணர்த்தும் பொருள்
A) நகைச்சுவை நூல்
B) நன்கு கட்டப்பட்டது
C) அறிவுரை நூல்
D) அறநூல்
Answer Key
விடை : B) நன்கு கட்டப்பட்டது81. ‘பாஞ்சாலி சபதம்’ – எப்பாவகையைச் சார்ந்தது?
A) வெண்பா
B) ஆசிரியப்பா
C) சிந்து
D) கலிப்பா
Answer Key
விடை : C) சிந்து82. “லிட்டன் பிரபு” எழுதிய “இரகசிய வழி” என்ற நூலைத் தழுவி எழுதப்பட்ட தமிழ் பாடல் வடிவ நூல் எது?
A) பிசிராந்தையார்
B) மனோன்மணீயம்
C) சிவகாமியின் சரிதம்
D) பில்கணீயம்
Answer Key
விடை : B) மனோன்மணீயம்83. “வரையழி வாலருவி வாதாலாட்ட” – இவ்வடியில் வரும் ‘தாலாட்டு” என்ற சொல்லாட்சி காணப்பெறும் எட்டுத்தொகை நூல்
A) அகநானூறு
B) குறுந்தொகை
C) பரிபாடல்
D) ஐங்குறுநூறு
Answer Key
விடை : C) பரிபாடல்84. பண்டைக்காலத்தில் முழுமதி நன்னாட்களிலும், மாலைநேரத்திலும் ஆடவரும் மகளிரும் கூடி வட்டமாய் நின்று கைகோத்து ஆடும் கூத்து எது?
A) பாவைக் கூத்து
B) குரவைக் கூத்து
C) தெருக்கூத்து
D) ஒயிலாட்டம்
Answer Key
விடை : B) குரவைக் கூத்து85. பாவேந்தர் பாரதிதாசனின் தலைமாணாக்கராக போற்றப்பட்டவர் யார்?
A) வாணிதாசன்
B) மோகன ரங்கன்
C) சுரதா
D) அப்துல் ரகுமான்
Answer Key
விடை : C) சுரதா86. பின்வருவனவற்றைப் பொருத்துக :
a) குயில் பாட்டு - 1. அப்துல் ரகுமான்
b) அழகின் சிரிப்பு - 2. சுரதா
c) துறைமுகம் - 3. பாரதியார்
d) பால்வீதி - 4. பாரதிதாசன்
குறியீடுகள் :
a) b) c) d)
A) 4 3 2 1
B) 3 4 2 1
C) 2 1 4 3
D) 3 4 1 2
Answer Key
விடை : B) 3 4 2 187. எந்த இணை சரியானது?
A) சுரதா – இமயம் எங்கள் காலடியில்
B) தாரா பாரதி – இது எங்கள் கிழக்கு
C) வாணிதாசன் – சுட்டுவிரல்
D) மு. மேத்தா – பசிக்கயிறு
Answer Key
விடை : B) தாரா பாரதி – இது எங்கள் கிழக்கு88. வால்ட் விட்மன்
கூற்று : 1 புதுக்கவிதைன் இயக்கத்தைத் தோற்றுவித்தவர்.
கூற்று : 2 “புல்லின் இதழ்கள்” என்ற நூலை எழுதியவர்.
சரியான விடையளி :
A) கூற்று 1 மட்டும் சரி
B) கூற்று 2 மட்டும் சரி
C) கூற்று இரண்டும் சரி
D) கூற்று இரண்டும் தவறு
Answer Key
விடை : C) கூற்று இரண்டும் சரி89. தமிழ் நாடகத் தந்தை என்று போற்றப்படுபவர்
A) பம்மல் சம்பந்தனார்
B) சங்கரதாசு சுவாமிகள்
C) தி. க. சண்முகனார்
D) மறைமலையடிகள்
Answer Key
விடை : A) பம்மல் சம்பந்தனார்90. பாவேந்தர் பாரதிதாசனால் எழுதப்பட்ட “சாகித்திய அகாதெமி” பரிசு பெற்ற நாடக நூல் எது?
A) சேர தாண்டவம்
B) குடும்ப விளக்கு
C) குறிஞ்சித் திரட்டு
D) பிசிராந்தையார்
Answer Key
விடை : D) பிசிராந்தையார்91. சி. சு. செல்லப்பாவின் எந்த இதழ் நவீன தமிழ் இலக்கிய மறுமலர்ச்சிக்கு வித்திட்டது?
A) எழுத்தாணி
B) எழுத்து
C) அகரம்
D) சிகரம்
Answer Key
விடை : B) எழுத்து92. சி. சு. செல்லப்பாவின் எந்த நூல் சாகித்திய அக்கதெமி விருது பெற்றுள்ளது?
A) சுதந்திர தாகம்
B) ஆங்கில மோகம்
C) ஜீவனாம்சம்
D) சுதந்திரப் பறவை
Answer Key
விடை : A) சுதந்திர தாகம்93. தமிழில் வந்த முதல் அறிவியல் இதழ்
A) தமிழர் நேசன்
B) அமுதசுரபி
C) கலைமகள்
D) பாரதமணி
Answer Key
விடை : A) தமிழர் நேசன்94. ஏற்றுமதி இறக்குமதி குறித்துக் கூறும் சங்க நூல்கள் எழுதுக.
A) பட்டினப்பாலை, குறிஞ்சிப்பாட்டு
B) குறிஞ்சிப்பாட்டு, பதிற்றுப்பத்து
C) மதுரைக் காஞ்சி, முல்லைப்பாட்டு
D) மதுரைக்காஞ்சி, பட்டினப்பாலை
Answer Key
விடை : D) மதுரைக்காஞ்சி, பட்டினப்பாலை95. தொண்டைக்கட்டைத் தொலைக்கும் உணவுப் பொருள் எது?
A) மிளகு
B) வெந்தயம்
C) கடுகு
D) சீரகம்
Answer Key
விடை : A) மிளகு96. துள்ளும் என்னும் ஊர் தற்பொழுது _______ என அழைக்கப்படுகிறது.
A) மண்டலம்
B) தண்டலம்
C) போரூர்
D) காட்டூர்
Answer Key
விடை : B) தண்டலம்97. உ. வே. சா ‘தன் சரிதம்’ என்னும் வரலாற்று நூலை எந்த இதழில் தொடராக எழுதினார்?
A) சுதேசமித்திரன்
B) ஆனந்த விகடன்
C) தினமணி
D) இந்தியா
Answer Key
விடை : B) ஆனந்த விகடன்98. தமிழை ஆலென வளர்த்து மாண்புறச் செய்தவர் யார்?
A) பரணர்
B) பாரி
C) தேவநேயப்பாவாணர்
D) பெருந்தேவர்
Answer Key
விடை : C) தேவநேயப்பாவாணர்99. வீரமாமுனிவர் திருக்குறளை எந்த மொழியில் மொழிபெயர்த்தார்?
A) ஆங்கிலம்
B) பிரெஞ்சு
C) கனடா
D) இலத்தீன்
Answer Key
விடை : D) இலத்தீன்100. ‘இந்தியாவின் தேசியப் பங்குவீதம்’ என்ற நூலின் ஆசிரியர் யார்?
A) அண்ணல் அம்பேத்கர்
B) வில்லியம் மில்லர்
C) இலக்குவனார்
D) மகாகவி இரவீந்திரநாத் தாகூர்