LCM 7 கணக்குகள் (6th கணக்கு : அலகு 7 : எண்கள்)


 

LCM

10) வில்சன், மதன் மற்றும் குணசேகரன் ஆகியோர் ஒரு வட்ட வடிவிலான ஒடுபாதையின் ஒரு சுற்றை முறையே 10, 15 மற்றும் 20 நிமிடங்களில் சுற்றி முடிக்கின்றனர். அவர்கள் தொடக்கப் புள்ளியில் காலை 7 மணிக்கு ஒன்றாகச் சுற்றத் தொடங்கினால், அவர்கள் மீண்டும் எப்போது தொடக்கப்புள்ளியில் ஒன்றாகச் சந்திப்பார்கள்? (6th New Book), (2022 Group 2)

a. 7.30 மணிக்கு

b. 8 மணிக்கு

c. 8.30 மணிக்கு

d. 8.45 மணிக்கு

 

11) ஒரு வீட்டில் நான்கு அலைபேசிகள் உள்ளன. காலை 5.00 மணிக்கு. எல்லா அலைபேசிகளும் ஒன்றாக ஒலிக்கும். அதன்பின் முதல் அலைபேசியானது ஒவ்வொரு 15 நிமிடங்களிலும் இரண்டாவது அலைபேசியானது ஒவ்வொரு 20 நிமிடங்களிலும் மூன்றாவது அலைபேசியானது ஒவ்வொரு 25 நிமிடங்களிலும் மற்றும் நான்காவது அலைபேசியானது ஒவ்வொரு 30 நிமிடங்களிலும் ஒலிக்கின்றன எனில், அவை மீண்டும் எப்போது ஒன்றாக ஒலிக்கும்? (20-04-2023 TNPSC), (2023 Group 3A) (6th New Book)

(A) 7.00 மு.ப.

(B) 8.00 மு.ப.

(C) 10.00 மு.ப

(D) 11.00 மு.ப


12) ஒரு விளையாட்டு மைதானத்தை சுற்றி ஒரு வட்டப் பாதை உள்ளது. இவ்வட்டப் பாதையை சுற்ற சோனியா-விற்கு 18 நிமிடங்களும், இரவிக்கு 12 நிமிடங்களும் ஆகும். அவர்கள் இருவரும் அவ்வட்டப் பாதையில் ஒரே இடத்திலிருந்து. ஒரே நேரத்தில், ஒரே திசையில் பயணிப்பார்கள் எனில் அவர்கள் மீண்டும் தொடங்கிய இடத்தில் சந்தித்துக் கொள்ள எவ்வளவு நேரம் பயணிக்க வேண்டும்? (01-04-2023 TNPSC)

(A) 20 நிமிடம்

(B) 28 நிமிடம்

(C) 36 நிமிடம்

(D) 48 நிமிடம்

 

13) மலர்விழி, கார்த்திகா மற்றும் அஞ்சலி ஆகிய மூவரும் ஒரே கிராமத்தைச் சேர்ந்த தோழிகள். இவர்கள் வெவ்வேறு இடங்களில் வேலை செய்கின்றனர் மலர்விழி 5 நாட்களுக்கு ஒருமுறையும், கார்த்திகா மற்றும் அஞ்சலி முறையே 6 மற்றும் 10 நாட்களுக்கு ஒரு முறையும், அவர்தம் வீடுகளுக்கு வந்து செல்வர். அவர்கள் மூவரும், அக்டோபர் மாதம் முதல் நாள் ஒன்றாகச் சந்தித்தார்கள் எனில், மீண்டும் அவர்கள் எப்போது ஒன்றாகச் சந்திப்பார்கள்? (20-04-2023 TNPSC),  (6th New Book)

(A) அக்டோபர் 31ம் தேதி

(B) அக்டோபர் 30ம் தேதி

(C) அக்டோபர் 10ம் தேதி

(D) நவம்பர் 1ம் தேதி

 

14) மூன்று போக்குவரத்து சந்திப்புகளில் உள்ள நெரிசல் விளக்குகள் ஒவ்வொன்றும் முறையே 40 விநாடிகளில், 60 விநாடிகளில், 72 விநாடிகளில் ஒளிர்கின்றன. அவ்விளக்குகள் அனைத்தும் காலை 8 மணிக்கு ஒன்றாக ஒளிர்ந்தன எனில் மீண்டும் அவை எபபோது ஒன்றாக ஒளிரும்? (23-07-2023 TNPSC),  (6th New Book)

a) 8,40 a.m

b) 9.06 a.m

c) 8.06 a.m

d) 8.6 a.m

 

15) மூன்று நபர்கள் ஒரு வட்டவடிவ அரங்கத்தை ஒரே இடத்திலிருந்து, ஒரே சமயத்தில், ஒரே திசையில் நடக்க ஆரம்பிக்கிறார்கள். ஒரு முழுச்சுற்றை முதல் நபர் 120 விநாடிகளிலும், இரண்டாம் நபர் 150 விநாடிகளிலும், மூன்றாம் நபர் 80 விநாடிகளிலும் நிறைவு செய்கின்றனர். அப்படியானால் மூன்று பேரும் எவ்வளவு நேரம் கழித்து ஆரம்பித்த இடத்தில் சந்தித்துக் கொள்வார்கள்? (TNPSC - GI - 2010)

A) 20 நி

B) 2 நி 20 வி

C) 2 நி 30 வி

D) 1 நி 40 வி


16) 6 மணிகள் முதலில் ஒன்றாக அடிக்கும், பின்னர் அவை ஒவ்வொன்றும் 2, 4, 6, 8, 10 மற்றும் 12 வினாடிகள் இடைவெளியிட்டு அடிக்கும் என்றால், 30 நிமிடத்தில் எத்தனை முறை ஆறு மணிகள் ஒன்றாக சேர்ந்து ஒலித்திருக்கும்? (2016 Group 2)

A) 4

B) 10

C) 15

D) 16


 

 

 


Answer Key :

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.