Donation

Ads Area

இணைகரத்தின் பரப்பளவு மற்றும் சுற்றளவு Class -1


1) அடுத்துள்ள பக்கங்கள் முறையே 6 செ.மீ மற்றும் 5 செ.மீ கொண்ட இணைகரத்தின் சுற்றளவு (7th New Book Back) 
a. 12 செ.மீ
b. 10 செ.மீ 
c. 24 செ.மீ
d. 22 செ.மீ .✔

2) 10 மீ அடிப்பக்கத்தையும், 7 மீ உயரத்தையும் கொண்ட இணைகரம் ஒன்றின் பரப்பு (7th New Book Back)
a. 70 ச.மீ.✔
b. 35 ச.மீ
c. 7 ச.மீ
d. 10 ச.மீ

3) ஒரு இணைகரத்தின் அடி உயரம் 9 சென்டிமீட்டர் குத்துயரம் 5 சென்டிமீட்டர் எனில் இணைகரத்தின் பரப்பளவு என்ன (2018 & 2019 TNPSC)
a. 40 cm²
b. 50 cm²
c. 45 cm².✔
d. 55 cm²

4) அடிப்பக்கம் 12 மீ மற்றும் உயரம் 8 மீ அளவுகள் கொண்ட இணைகரத்தின் பரப்பளவு காண்க. (7th New Book)
a.  96 ச.மீ.
b.  12 ச.மீ 
c.  8 ச.மீ 
d.  48 ச.மீ 

5) ஜானகி என்பவரிடம் உள்ள ஓர் இணைகர வடிவிலான துணியின் உயரமும் நீளமும் முறையே, 12 செ.மீ மற்றும் 18 செ.மீ. மேலும் அதை நான்கு சமமான இணைகரங்களாக்கிப் பிரித்து புதிய இணைகரத்தின் பரப்பளவு காண்க. (7th New Book)
a. 216 ச.மீ 
b. 54 ச.மீ ✔
c. 108 ச.மீ 
d. 27 ச.மீ 

6) 52 ச.செ.மீ பரப்பளவும், 4 செ.மீ உயரமும் கொண்ட இணைகரத்தின் அடிப்பக்க அளவு (7th New Book Back)
a. 48 செ.மீ
b. 104 செ.மீ
c. 13 செ.மீ.✔
d. 26 செ.மீ

7) பரப்பளவு 368 ச.செ.மீ மற்றும் அடிப்பக்கம் 23 செ.மீ அளவுகள் கொண்ட இணைகரத்தின் உயரம் காண்க. (7th New Book)
a. 8 செ.மீ 
b. 23 செ.மீ 
c. 16 செ.மீ.✔ 
d. 6 செ.மீ 

8) ஓர் இணைகரத்தின் பரப்பு 300 ச.செ.மீ மற்றும் அடிப்பக்கம் 15 செ.மீ எனில் உயரம்? (2014 Group 4)
(A) 10 செ.மீ
(B) 15 செ.மீ
(C) 20 செ.மீ.
(D) 30 செ.மீ

9) சுரேஷ் என்பவர் மாநில அளவிலான சதுரங்கப் போட்டியில் இணைகர வடிவிலான கேடையம் ஒன்றை வென்றார். அக்கேடையத்தின் பரப்பளவு 735 ச.செ.மீ மற்றும் அடிப்பக்கம் 21 செ.மீ எனில், உயரம் காண்க. (7th New Book)
a. 15 செ.மீ
b. 25 செ.மீ
c. 30 செ.மீ
d. 35 செ.மீ.

10) ஓர் இணைகரத்தின் அடிப்பக்கத்தை இரண்டு மடங்காகவும், உயரத்தை பாதியாகவும் மாற்றும் போது இணைகரத்தின் பரப்பளவு எவ்வாறு மாறும்? (7th New Book Back) (2021 TNPSC)
a. பாதியாக மாறும்
b. மாறாது✔
c. இரண்டு மடங்காகும்
d. ஏதுமில்லை

11) ஓர் இணைகரத்தின் உயரம் 8 செ.மீ மற்றும் அதன் அடிப்பக்கம் உயரத்தைப் போல் மூன்று மடங்கு எனில், அதன் பரப்பளவு (7th New Book Back)
a. 64 ச.செ.மீ
b. 192 ச.செ.மீ✔
c. 32 ச.செ.மீ
d. 72 ச.செ.மீ

12) ஓர் இணைகர வடிவிலான மைதானத்தின் உயரம் 14 மீ. மேலும் அதன் அடிப்பக்கம், உயரத்தை விட 8 மீ கூடுதல் எனில், மைதானத்தைச் சமப்படுத்த ஒரு ச.மீ க்கு ₹15 வீதம் எவ்வளவு செலவு ஆகும். (7th New Book)
a. ₹4,620✔
b. ₹4,621
c. ₹4,622
d. ₹4,623

13) ஓர் இணைகரத்தின் அடிப்பக்கமும் உயரமும் 7:3 என்ற விகிதத்தில் உள்ளன. அதன் உயரம் 45 செ.மீ எனில், அதன் பரப்பளவைக் காண்க (7th New Book)
a. 4700 செ.மீ²
b. 4725 செ.மீ²✔
c. 4750 செ.மீ²
d. 4775 செ.மீ²

14) ஓர் இணைகரத்தின் அடிப்பக்கமானது அதன் உயரத்தைப் போல மூன்று மடங்காகவும் அதன் பரப்பளவு 192 ச.செ.மீ ஆகவும் இருப்பின், அடிப்பக்கத்தையும் உயரத்தையும் காண்க. (7th New Book)
a. 24 செ.மீ, 8 செ.மீ ✔
b. 20 செ.மீ, 8 செ.மீ 
c. 24 செ.மீ, 9 செ.மீ 
d. 25 செ.மீ, 8 செ.மீ 

Shortcut Video



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Ads Area