Donation

Ads Area

தனிவட்டி [மடங்கு]


தனிவட்டி [மடங்கு]
Type -1
1. ஒரு குறிப்பிட்ட அசலானது ஆண்டுக்கு 8% வட்டி விகிதத்தில் மூன்று மடங்கு ஆவதற்கு பிடிக்கும் காலம் (2018 Gr4) (2017 Gr2) (2018 Gr2)
a. 20 ஆண்டு
b. 22 ஆண்டு
c. 25 ஆண்டு
d. 30 ஆண்டு
Answer c. 25 ஆண்டு

2. ஒரு தொகையானது தனிவட்டி முறையில் 10 வருடத்தில் இரட்டிப்பாக ஆக வட்டிவீதம் என்னவாக இருக்க வேண்டும் (2019 Gr4)
a. 10%
b. 20%
c. 50%
d. 25%
Answer a. 10%

3. ஒரு அசலானது 2 ஆண்டுகளில் 9/4 மடங்கு ஆகும் எனில் அதன் வட்டி விகிதம் எவ்வளவு? (2016 Gr4)
a. 69 1/2%
b. 67 1/2%
c. 62 1/2%
d. 61 1/2%
Answer c. 62 1/2%

4. ஓர் அசலானது 4 ஆண்டுகளில் இரண்டு மடங்காகிறது எனில், வட்டி வீதத்தைக் காண்க. (அசல் P = ₹ 100 என வைக்க வேண்டும்). [7th New Book]
a. 20%
b. 25%
c. 30%
d. 35%
Answer b. 25%

5. ஒரு தொகை தனிவட்டியில் 20 ஆண்டுகளில் இரு மடங்காகிறது எனில் வருடத்திற்கு வட்டி விதம் (2014 Gr1)
a.5%
b.4%
c.5.5%
d.4.5%
Answer a.5%

6. ஒரு தொகை ஆண்டிற்கு 8% தனிவட்டி வீதத்தில் அத்தொகையை போல இரு மடங்காகிறது எனில் எடுத்துக் கொள்ளும் காலம் (2017 Gr1)
a. 13 1/3 ஆண்டுகள்
b. 12 1/2 ஆண்டுகள்
c. 10 1/2 ஆண்டுகள்
d. 9 ஆண்டுகள்
Answer b. 12 1/2 ஆண்டுகள்

Type -2
7. ஒரு அசல் தனிவட்டியில் 7 ஆண்டுகளில் இரண்டு மடங்காகிறது எனில் எத்தனை ஆண்டுகளில் நான்கு மடங்காகும்?
a. 11 ஆண்டுகள்
b. 21 ஆண்டுகள்
c. 31 ஆண்டுகள்
d. 41 ஆண்டுகள்
Answer b. 21 ஆண்டுகள்

8. ஒரு அசல் தனிவட்டியில் 4 ஆண்டுகளில் இரண்டு மடங்காகிறது எனில் எத்தனை ஆண்டுகளில் எட்டு மடங்காகும்?
a. 20 ஆண்டுகள்
b. 24 ஆண்டுகள்
c. 28 ஆண்டுகள்
d. 32 ஆண்டுகள்
Answer c. 28 ஆண்டுகள்

9. ஒரு அசல் குறிப்பிட்ட தனிவட்டி வீதத்தில் 3 ஆண்டுகளில் நான்கு மடங்காக மாறுகிறது எனில் எத்தனை ஆண்டுகளில் ஏழு மடங்காக மாறும்?
a. 6 ஆண்டுகள்
b. 12 ஆண்டுகள்
c. 8 ஆண்டுகள்
d. 24 ஆண்டுகள்
Answer a. 6 ஆண்டுகள்

Type -3
10. ஒரு குறிப்பிட்ட தொகையானது தனிவட்டியானது அசலில் 9/16 மடங்குக்கு சமம். வட்டி விகிதமும் வருடமும் என் மதிப்பில் சமமாக இருக்கும் போது வட்டி விகிதத்தையும் வருடத்தையும் காண்க? [2019 Group 3A]
a. 8 1/2%, 8 1/2
b. 7%, 7
c. 7 1/2℅, 7 1/2
d. 8℅, 8
Answer c. 7 1/2℅, 7 1/2

11. ஒரு குறிப்பிட்ட அசலுக்ககான தனிவட்டி யின் மதிப்பு அசலை போல 16/25 மடங்கு. மேலும் வட்டி வட்டி வீதமும், காலமும் சமம் எனில், வட்டி விகிதத்தின் மதிப்பு?
a. 5%
b. 6%
c. 8%
d. 10%
Answer c. 8%

12. ஒரு குறிப்பிட்ட அசலுக்கு கிடைக்கும் தனிவட்டியானது அசலில் 1/4 பங்கு ஆகும். மேலும் ஆண்டுகளின் எண்ணிக்கையும் வட்டிவீதமும் சமம் எனில் வட்டிவீதம் என்ன?
a. 6%
b. 4%
c. 5%
d. 10%
Answer c. 5%


Post a Comment

1 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Ads Area