சதுரம் சுற்றளவு Part -1


1. ஒரு சதுரத்தின் பக்கம் 5 செ.மீ. எனில், அதன் சுற்றளவு காண்க (6th New Book)
a. 5 செ.மீ
b. 10 செ.மீ
c. 15 செ.மீ
d. 20 செ.மீ
Answer d. 20 செ.மீ

2. 8 செ.மீ. பக்கமுள்ள சதுரத்தின் சுற்றளவு காண்க. (6th New Book)
a. 32 செ.மீ.
b. 10 செ.மீ
c. 30 செ.மீ.
d. 100 செ.மீ.
Answer a. 32 செ.மீ.

3. ஒரு சதுர வடிவமான தபால் தலையின் சுற்றளவு 8 சென்டிமீட்டர் எனில் அதன் பக்க அளவை காண்க (6th New Book)
a. 1 செ.மீ.
b. 2 செ.மீ.
c. 3 செ.மீ.
d. 4 செ.மீ.
Answer b. 2 செ.மீ.

4. ஒரு சதுர வடிவ பூங்காவின் சுற்றளவு 40மீ எனில் பூங்காவின் ஒரு பக்கத்தின் அளவு என்ன? (6th New Book)
a. 5 மீ.
b. 10 மீ
c. 30 மீ.
d. 100 மீ.
Answer b. 10 மீ

5. 12மீ பக்க அளவுடைய ஒரு சதுர வடிவிலான வீட்டு மனைக்கு வேலி அமைக்க மீட்டருக்கு ரூ.15/- வீதம் ஆகும் செலவைக் காண்க. (6th New Book)
a. ரூ. 720
b. ரூ. 620
c. ரூ. 2160
d. ரூ. 2150
Answer a. ரூ. 720

6. உன்னுடைய தோட்டம் 5மீ பக்க அளவுடைய சதுர வடிவில் உள்ளது. ஒவ்வொரு பக்கமும் 2 சுற்றுகள் கம்பியால் வேலி அமைக்க வேண்டும். மீட்டருக்கு ரூ.10/- வீதம் தோட்டத்திற்கு வேலி அமைக்கத் தேவைப்படும் தொகையினைக் காண்க? (6th New Book)
a. ரூ. 100
b. ரூ. 200
c. ரூ. 300
d. ரூ. 400
Answer d. ரூ. 400

7. ஒரு சதுரத்தின் பக்கம் 10 செ.மீ அதனுடைய பக்கம் மூன்று மடங்காகும் போது, சுற்றளவு எத்தனை மடங்காக அதிகரிக்கும்? (6th New Book Back)
(a) 2 மடங்கு
(b) 4 மடங்கு
(c) 6 மடங்கு
(d) 3 மடங்கு
Answer (d) 3 மடங்கு

8. சதுரம் A இன் பக்கங்களைப் போன்று இரண்டு மடங்கு பக்கங்கள் கொண்ட சதுரம் B ஐ வரைக. A மற்றும் B இன் சுற்றளவுகளைக் காண்க. (6th New Book)
a. சதுரம் B இன் சுற்றளவானது, சதுரம் A இன் சுற்றளவை போல் இருமடங்கு.
b. சதுரம் A இன் சுற்றளவானது, சதுரம் B இன் சுற்றளவை போல் இருமடங்கு.
c. சதுரம் A இன் சுற்றளவானது, சதுரம் B இன் சுற்றளவை போல் மூன்று மடங்கு.
d. சதுரம் B இன் சுற்றளவானது, சதுரம் A இன் சுற்றளவை போல் மூன்று மடங்கு.
Answer a. சதுரம் B இன் சுற்றளவானது, சதுரம் A இன் சுற்றளவை போல் இருமடங்கு.

9. 20 சமபக்கங்கள் கொண்ட வடிவத்தின் ஒரு பக்க அளவு 3 செ.மீ. எனில் அதன் சுற்றளவு காண்க. (6th New Book)
a. 20 செ.மீ.
b. 23 செ.மீ.
c. 60 செ.மீ.
d. 63 செ.மீ.
Answer c. 60 செ.மீ.

10. 5 செ.மீ. பக்க அளவுள்ள ஒரு சதுரத்தின் சுற்றளவு காண்க
a. 10 ச.செ.மீ.
b. 15 ச.செ.மீ.
c. 20 ச.செ.மீ.
d. 25 ச.செ.மீ.
Answer c. 20 ச.செ.மீ.


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.